முரண்பாடுகளைக் கொண்ட இலங்கையின் தேசக்கொடி!!04 (கட்டுரை)

துஷ்யந்தன்.உ
vol – 04
இலங்கையின் முற்காலத்தை எடுத்து நோக்குமிடத்து உலகின் எந்தவொரு இராச்சியத்தையும் விட பழமைவாய்ந்த இதிகாசத்தினைக் கொண்டதுடன் அதனை நிருபிக்கம் காரணியாக புகழ்மிக்க புராதான கலாச்சார விழுமியங்களும் கொண்டு காணப்பட்டமை மூலமாக தெரியவருகின்றது. 2500 ஆண்டுகளுக்கும் மேலான புராதன இதியாசம் பூராவும் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வந்தமையும் தெரியவரும்.

ஆரம்பகாலம் முதல் அரசாட்சி முறை காணப்பட்ட இங்கு நாட்டின் அன்னியோன்னியத்தை உறுதிப்படுத்துவதந்காக ஒவ்வொரு அரசனாலும் தேசக் கொடி பயன்படுத்தப்பட்டது என்தனை புராதன கால ஆராய்ச்சிகள் சான்று பகிர்கின்றன. வௌ;வேறு மாவட்டங்கள் பிரதேசம் மற்றும் பகுதிகளுக்காக ஒவ்வொரு கால வரையறையிலும் வௌ;வேறு கொடிகள் பவிக்கப்பட்டாலும் இலங்கையின் மிகப் பழைய காலம் தொட்டு சிங்க கொடி பாவிக்கப்படுவதற்கான சான்றுகளும் உள்ளன. இந்தச் சிங்கக் கொடியின் இதிகாசம் துட்டகைமுனு மன்னன் ஆட்சி செய்த காலம் வரை நீண்டு செல்கின்றது என்பதை மறந்துவிடமுடியாது.
ஆதற்கு பிற்பட்ட காலத்தில் நாட்டில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புக்களுடன் ஆட்சி முறையில் வௌ;வேறு மாற்றங்கள் மற்றும் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு அரசனாலும் ஆட்சி செய்யப்பட்டாலும் இலங்கையின் இறுதி மன்னனாகிய ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னன் வரை தேசக் கொடியாக சிங்கக் கொடி பாவிக்கப்பட்டு வருகின்றமை தெரியவருகின்றது.

1825 முதல் 1948 வரையான 133 ஆண்டுகள் இலங்கை தேசக் கொடியாக ஆங்கிலேயரின் தேசக் கொடியாகிய யூனியன் ஜெக் கொடி மற்றும் ஆங்கில தேசிய கீதமுமாகும்.

1933 சர்வஜன வாக்குரிமை மூலம் கிடைத்த பகுதி அரசியல் சுகந்திரத்துடன் சனநாயக ஆட்சி முறையும் எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 1948 இல் சுகந்திரம் கிடைத்த போது பாராளுமன்ற ஆட்சி முறை மூலம் நாட்டின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. சுகந்திர இலங்கைக்கான தேசக் கொடி ஒன்றின் தேவை மேலோங்கி இருந்ததுடன் அக்கால கட்டத்தில் பிரதம மந்திரியாக இருந்த திரு. டீ.எஸ். சேனாநாயக்க அவர்களினால் இத் தேவை பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துக் கூறப்பட்டது. ஆயினும் ஒரேதடவையில் தேசக் கொடி பற்றிய தீர்மானத்திற்கு வருவதற்கு அரசாங்க நிர்வாகிகளுக்கு முடியாமல் போனது அதற்கு காரணமாய் அமைந்தது வௌ;வேறு கட்சிகளின் வௌ;வேறு இனங்களின் வௌ;வேறு மதங்களின் மந்திரிமார் வௌ;வேறு யோசனைகளைக் கூறியமையாகும்.

அதனடிப்படையில் தேசக்கொடியும் தேசத்திக் கீதத்தையும் நிர்மாணிப்பதற்காக பாராளுமன்ற உபகுழு ஒன்று 1948இல் அமைக்கப்பட்டது. இதனை உருவாக்குவதற்காக பலதரப்பட்ட அமைப்புக்கள், சுகந்திர சிந்தனையாளர்கள், கலைஞர்கள், பல்வேறு இன மற்றும் மத பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டது. இக் குழுவில் அங்கம் வகித்தவர்களாக எஸ். டுபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் தலைவராகவும் செனரத் பரணவிதான அவர்கள் செயலாளர் ஆகவும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஸ்ரீமத் ஜோன் கொதலாவல, டீ.பி.ஜெயா, ஜீ.ஜீ.பொன்னம்பலம், லலித்.அபயராஜபக்ஸ, எஸ.நடேசன் உள்ளிட்டோர் குழுவில் அங்கம்வகித்தனர்.

1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ம்திகதி இலங்கை பாராளுமன்றத்தால் தற்பொமுது நடைமுறையில் உள்ள தேசக்கொடியானது இந்நாட்டு தேசக்கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1951 மார்ச் மாத் 02 ம் திகதி அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை தேசக்கொடியானது பழைய சிங்கக் கொடியின் தோற்றத்தை ஒத்து நிர்மாணிக்கப்பட்டதாகும். இதில் பல்வேறு இலச்சினைகளும் வர்ணங்களும் உள்ளதுடன் அவை தனித்தனியாக பல்வேறு அர்த்தங்களை கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது. பொதுவாக இவ் அர்தங்கள் மூலமாக எமது இதிகாசம் பண்பாடு கலாச்சாரம் ஒமுக்கம் எவ்வாறானது என்பது பற்றி தெரியவரும்.

1951 ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதி இலங்கை பாராளுமன்றத்தால் வெளியிடப்பட்ட தற்போதுள்ள தேசக் கொடியின் இலச்சனைகளும் வர்ணங்களும்; வர்ணம் மஞ்சள் நிறம் மற்றும் சிகப்புநிறம் செம்மஞ்சள் நிறம் மற்றும் பச்சை நிறம் என 4 நிறங்கள் தேசக் கொடியில் காணப்படுகின்றது.
மஞ்சள் நிறம் அறிவு, சமாதானம், அஹிம்சை, சத்தியம், தர்மம் போன்றவற்றை குறிப்பதற்கு மஞ்சள் நிறம் பயன்படுத்தப்படும். அதனுடாக மஞ்சள்நிறத்தினால் விளக்கப்படுவது. காரண காரிய தர்மத்தையும் விடுதலை முறையான நியாய தர்மங்களும் உள்ளடக்கிய உறுதியாகும்.

சிகப்பு நிறத்தால் குறிப்பிடப்படுவது மனிதனின் அடிப்படை உணர்வுகளையும் உயிர்களின் குருதியுமாகும். சிகப்புநிறப் பகுதி மஞ்சள்நிற சட்டத்தினால் சுற்றிவர அமைக்கப்பட்டிருப்பது மனிதனின் அடிப்படை உணர்ச்சிகள் உறுதியுடன் உருவாகும் ஆளுமையினால் நிறைவு செய்யப்படுவதையே ஆகும். இது கொடியின் முழுப்பகுதியின் 5/7 பங்காகும்.

இவ்வாறாக மஞ்சள் நிறத்தில் சிகப்பு நிறம் பாவித்து அப்பிரதான நிறங்களை தொடர்புபடுத்துவதன் மூலம் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு வேண்டிய அறிவு மற்றும் அதற்கு தேவையான சக்கியையும் வெளிக்காட்டுவதற்காகும். இரும்பாலும் இரத்தத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட ஒழுக்கம் எனவும் பொருள்படும்.
செம்மஞ்சள் நிறம் சிங்கத்தின் முகம் மற்றும் வாள் உள்ள பகுதியில் செம்மஞ்சள் நிறத்திலான கோடு ஒன்று உள்ளது. இது தமிழ் இனத்தை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. இது கொடியின் 1/7 பங்காகும்.

பச்சை நிறம் அதே போன்று பச்சை நிறத்தில் இன்னொரு கோடு உள்ளது. இது முஸ்லிம் மற்றும் ஏனைய சிறு சிறு இனத்தவரை குறிப்பதற்காக உள்ள பகுதியாகும். இதுவும் கொடியின் 1/7 பங்காகும்.

இலச்சினை சிகப்பு நிறப் பின்னணியில் நான்கு மூலையிலும் காணப்படும் மஞ்சள் நிற நான்கு அரசிலையும் கொடியின் மத்தியில் காணப்படும் வாளேந்திய சிங்க உருவத்தை நோக்கி குவிந்து காணப்படுவது மனிதனின் அடிப்படை உணர்வுகள் அன்பு, கருணை, திருப்தி, அமைதி ஆகிய நான்கு நற்குணங்களாலும் ஆட்சி செய்யப்படுகின்றது. என்பதை குறிப்பதற்காகும்.

இலங்கைச் சமூகமானது எந்த தர்மத்தின் அடிப்படையில் அமைக்கப்படல் வேண்டும் என்பதனையும் எந்த கொள்கையுடன் அமைத்து செயற்பட வேண்டும் என்பதனையும் அந்த அரசிலை மூலமாக விளக்கப்படும். தானம், அன்பான வார்த்தை, நன்நடத்தை, சமத்துவம் என சமூக நிலைப்பாடு உரிய சமூக தர்மமாக எழுத்துக் கொள்ளக் கூடியதுடன் நான்கு நன்நெறிச் சொத்துக்களும் இவ் அரசிலை மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது.

சிங்கம் தேசக் கொடியின் பிரதான இலச்சினையாக அமைகின்றது. இது முடி வளர்ந்த சிங்கமாகும் கொடியின் மத்தியில் வீரத்துடன் நிற்பது தேசத்தை கட்டியெழுப்புவதற்கு பாடம் சில புகட்டியது போல் உள்ளது. மஞ்சள் நிறத்தால் காட்டப்பட்டுள்ள சிங்கம் மற்றும் வாள் உறுதி மற்றும் ஒழுக்கத்தை குறிக்கும் சட்டம் போன்ற அமைப்பினால் சுற்றிவர அமைக்கப்பட்டுள்ளமையினாலும் நான்கு நற்குணங்களினாலும் மனிதனுடைய அடிப்படை உணர்வுகளின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளமையினாலும் பாதுகாப்பை வழங்கும் முறையையும் காட்டுகின்றது. சிங்கத்தின் மூலம் குறிப்பிடப்பட்டு காட்டப்படும் பாதுகாவலன் நானே எனும் நிலையில் மெருகூட்டப்பட்டுள்ளதுடன் உறுதி வீரத்துடன் கூடிய சக்தி மற்றும் ஒமுக்கம் என்னும் குணவியல்புகளால் நிறைந்துள்ளமை தெரியவரும்.

சிங்கத்தின் வலது கையில வாள் ஏந்தி நிற்பதன் மூலம் காட்டப்படுவது பாதுகாவலன் பாதுகாப்பை எப்போதும் வழங்குவதற்கு தயாராய் இருத்தல் என்னும் யுக்தியுடன் கூடிய தன்மையாகும். தானம், தருமம், அஹிம்சை, சாந்தி, புலனடக்கம், தியானம், நேர்மை, நடுநிலைமை, நன்நினைப்பு, பிறரை மன்னிக்கும் மனப்பாங்கு ஆகிய பத்து இராஜதர்மங்கள் ஆட்சி செய்பவரின் மூலம் பின்பற்றப்பட்டு நியாய ரீதியாக நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பதனை வாள் குறித்து நிற்கின்றது.

தேசக்கொடி பல்வேறுபட்ட சர்சையினைக் கொண்டுள்ளது. அதாவது நாட்டில் காணப்படும் இனமான சிங்களவர்களை தேசக்கொடி வெளிப்படுத்தவில்லை. வாள்ஏந்திய சிங்கமானது பவுத்தின் புத்தரது கொடியே ஒழிய இனத்தினை வெளிப்படுத்தாது. நாட்டின் தற்போதுள்ள தேசக்கொடி பவுத்தினை இழிவுபடுத்துகின்றதுடன் மாற்றியமைக்கப்படல் வேண்டும் ஏனெனில் பிரதான சன விகிதத்தினைக் குறிப்பிடுகின்றது எனவே மாறுபட்ட சனத்தொகைகள் தற்பொழுது காணப்படுவதனால் தேசக்கொடி நாட்டின் மக்களினை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக பல ஜயங்கள் எழுப்புவதாகக் காணப்படுகின்றது. இலங்கையின் நிரந்தர சமாதானம் மற்றும் சகவாழ்வினை உறுதிப்படுத்த தேசக்கொடியினை மாற்றியமைக்க வேண்டிய கட்டாய தேவையினை உணர்தல் அவசியம்.

Comments (0)
Add Comment