வடக்குக் கிழக்கில் இரண்டாயிரம் விகாரை அமைக்க உடன்பட்டவர்கள்!! (கட்டுரை)

பெரும்பான்மை இனம் என்ற ஒரே காரணத்துக்காக சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த பீடங்களும் பேரினவாதிகளும் தமிழ் மக்களைப்படுத்தும் பாடு கொஞ்சமல்ல.

தமிழ் இனத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் நடந்தன எனும் போது இலங்கையில் தமிழ் மக்கள் படும் துன்பம் எத்தகையது என்பதை எவரும் புரிந்து கொள்வர். இந்த நீரோசை இன்னமும் முடிந்த பாடில்லை.

தங்கள் சொந்த நிலத்தில் வாழ முடியாத நிலையிலேயே தமிழ் மக்கள் உள்ளனர்.

இதுதவிர, இப்போது பெளத்த விகாரைகளை வடக்குக் கிழக்கில் அமைக்கின்ற முயற் சியில் சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த பீடங்களும் மும்முரமாக உள்ளன.

அதிலும் குறிப்பாக தமிழ் மக்களின் தொன்மை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து ஆல யங்கள் அமைந்துள்ள இடங்களிலும் புத்த விகாரைகளை அமைத்து அவற்றை கைய கப்படுத்துகின்ற முயற்சியும் நடந்து வருகிறது.

இதன் ஒரு கட்டமாக திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியிலும் முல்லைத் தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலும் புத்தர் சிலையை நிறுவுகின்ற முயற்சிகளைக் குறிப்பிடலாம்.

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை தாங்கி நிற்கின்ற பலமான தூணாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றபோதிலும் விகாரைகள் அமைப்பதைத் தடுக்க முடியாத வர்களாக அல்லது தடுக்க விருப்பமில்லாத வர்களாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருக்கின்றனர்.

இதன் பின்னணி என்ன என்பது பற்றி தீவிரமாக ஆராய வேண்டுமாக இருந்தாலும் அரசாங்கத்தின் எந்த நடவடிக்கையையும் தாம் எதிர்ப்பதில்லை என்று அரசுடன் உடன் படிக்கை செய்தவர்கள் போல கூட்டமைப்பினர் நடந்து கொள்கின்றனர்.

அதிலும் கன்னியா வெந்நீருற்றுப் பகுதியில் பிள்ளையர் ஆலயம் இருந்த இடத்தில் புத்த விகாரையை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் திரண்டு அகிம்சைப் போராட்டம் நடத்தினர்.

ஆனாலும் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை. தவிர, தென்கயிலை ஆதீனகுரு முதல்வர் மீது கொதிநீர் ஊற்றி சிங்களப் பேரினவாதிகள் இந்து சமயத்தை அவமதித்தனர். அதற்குக் கூட கூட்டமைப்பின் தலைமை கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் அமைச்சர் மனோ கணேசன் உடனடியாகத் தலையிட்டு ஜனாதிபதியைச் சந் தித்து நிலைமையை எடுத்துக்கூறி புத்த விகாரை அமைக்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்தினார்.

இச்சந்தர்ப்பத்தில் கூட கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

நிலைமை இதுவாக இருக்கையில், இச் சம்பவங்கள் சைவத் தமிழ் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த; தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜி னாமாச் செய்ய வேண்டுமென்று இந்துத் தலைவர்கள் கோரிக்கை விட்டனர்.

இந்தக் கோரிக்கைகள் நாடு கடந்து சூடு பிடிக்க அதிர்ந்து போன கூட்டமைப்பு தாங்களும் ஈடுபட்டதாகக் காட்டிக் கொள்கின்றனர்.

ஆனால் இவையயல்லாம் மாயமான் விளையாட்டு என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும்.

வடக்கு கிழக்கில் இரண்டாயிரம் பெளத்த விகாரைகளை அமைப்பதற்கு ஆதரவு தெரி வித்துவிட்டு இப்போது நல்ல பிள்ளைக்கு நடிக்கின்றனர்.

இதை ஒருபோதும் நம்பாமல் தமிழ் மக்கள் தொடர்ந்து அகிம்சை வழியில் போராட வேண் டும். அரசியலைத்தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் மக்கள் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இதுவே எங்கள் இனத்தை – சமயத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழியாக இருக்கும்.

Comments (0)
Add Comment