அரசு திட்டமிட்டு நில அபகரிப்பை செய்கின்றது-நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்!! (கட்டுரை)

தமிழரின் இருப்பை இல்லாமல் செய்யும் பொருட்டு அரசு திட்டமிட்டு நில அபகரிப்பை செய்கின்றது என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுக் கூட்டம் நேற்று மாலை கந்தர் மடத்தில் உள்ள தமிழ் மக்கள் பேரவை அலுவலகத்தில் இடம் பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல், சமூகமற்றும் பொருளாதாரரீதியாக இந் நாட்டில் எமது தமிழ் மக்கள் மிகவும் நெருக்கடியானகாலகட்டத்தில் இன்று நின்று கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் அரசியல் கட்சிகளின் சுயநல அடிப்படையிலானபோட்டி அரசியல் ஒருபுறம் மறுபுறத்தில் தமிழ் மக்களின் இருப்பை வடக்குகிழக்கில் இல்லாமல் செய்யும் பொருட்டு அரசாங்கத்தின் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகளும், சிங்களக்குடி யேற்றங்களும், பௌத்தமயமாக்கலும் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளன.

10 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் இனப்படு கொலைக்கு உட்படுத்தப்பட்ட எமது மக்களுக்கு எந்தவித நீதியோ தீர்வோ வழங்கப்படவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் கட்சிகளையும் மக்களையும் சரியானபாதையில் நெறிப்படுத்திப் போராட்டப் பாதையை செம்மைப்படுத்துவதற்கு சிவில் சமூகம் மிகவும் காத்திரமான ஒரு வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.

சந்தடி இன்றி எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்தத்துக்கு எதிராக எமதுமக் களின் எதிர்ப்புக்களை வலுவூட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.

எமது அல்லல்களையும் துன்பங்களையும் தொலை தூரத்தில் இருக்கும் எமது சகபூகோள பிரஜைகளுக்கும் அதிகாரமையங்களுக்கும் கொண்டுசென்று நடந்த மற்றும் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக அவர்களை நடவடிக்கை எடுக்கத்தூண்டுவதற்கான நட வடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

எமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அநியாயங்கள் மற்றும் அட்டூழியங்களை நாம் வெளி உலகத்துக்கு எவ்வளவுக்கு எவ்வளவு வெளிப்படுத்துகின்றோமோ, எவ்வளவுக்கு எவ்வளவு யதார்த்த நிலையை அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றோமோ எவ்வளவுக்கு எவ்வளவு எமது வலிகளை அவர்களின் வலிகளாக உணரும்படி செயற்படுகின்றோமோ, அப்பொழுது தான் ஏனைய சமூகங்களை நாம் எம்மை நோக்கி கவனம் செலுத்தவைக்க வும் எமக்காக செயற்படவும் வைக்க முடியும்.

எமது துன்பங்கள், துயரங்களை எடுத்துக்கூறி ஒரு பகிரப்பட்ட மனிதநேய உணர்வை சர்வதேசரீதியில் ஏற்படுத்துவதற்குப் பாடுபடும் அதேவேளை, அநியாயங்களுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு நடவடிக் கைகளையும் நாம் வலுப்படுத்த வேண்டும்.

நான் முதலமைச்சராக இருந்த போது என்னைக் காண வந்த அத்தனை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அரச தூதுவர்களுக்கும் எமது நிலைபற்றிக் கூறியது மட்டு மன்றி எழுத்து மூலமாகவும் பல விபரங்களை ஆவணங்கள் மூலம் தெரிவித்துவந்தேன்.

இலங்கையின் உண்மை நிலைபற்றி அறிய வேண்டுமானால் வட மாகாண முதலமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றுஒருவெளிநாட்டுப் பிரதி நிதி கூறியதாக இன்னொருநாட்டின் பிரதிநிதி கூறியிருந்தார்.

பத விக்காலம் முடிந்ததும் அவ்வாறானசந்திப்புக்கள் மிகவும் குறைந்து போய்விட்டன. எனினும், கனேடிய, பிரித்தானிய உயர்மட்ட பிரதிநிதி கள்வந்து என்னைஎன் வீட்டில் சந் தித்துள்ளனர்.

ஆகவே, எமது குரல் தொடர்ந்து ஒலிக்கநடவடிக்கைகள் அவசியமாகின்றன. அத்துடன், மேலும் இரு வருடங்கள் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபையால் இலங்கைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந் நேரத்தில் இரண்டுவருடங்களின் பின்னர் சபையில் அங்கம் வகிக்கப்போகும் நாடுகளை இப்பொழுதிருந்தே சந்தித்து எமது குறைகளை அவர்களிடம் கூறி அடுத்த முறை மேலும் காலநீட்சி தராமல் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தவகையில், தமிழ் மக்கள் பேரவைக்கு முன்பாக ஒருபெரும் பணிகாத்துக்கிடக்கின்றது.

இங்கு கூட்டங்களை நடத்துவதும் பின்னர் கலைந்து செல்வதுமாக நாம் எமது காலங்களை இனிமேலும் கடத்திச்செல்ல முடியாது. நாம் கடந்த காலங்களில் “எழுகதமிழ்” நிகழ்வுகள் உட்பட பல பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவை ஒருமக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் எமது சமூகத்தின் அங்கங்களான பல்கலைக்கழகம், இந்து, கத்தோலிக்க அமைப்புக்கள், வர்த்தகசங்கங்கள், மீன்பிடி சமாசங்கள், விவசாயிகள் சம்மேளனங்கள், தமிழர் மரபுரிமைப்பேரவை, தமிழ் சிவில் சமூகம் போன்ற பலவற்றுடன் இணைந்து மக்கள் மயப்படுத்தப் பட்டசெயற்பாடுகளை மீண்டும் எழுச்சியுடன் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

சிலகாலம் நாங்கள் சற்றுத் தடுமாற்றத்தில் இருந்து வந்தோம். இனி அதற்கு இட மில்லை. நில ஆக்கிரமிப்பு, மத ஆக்கிரமிப்பு, மத்திய அரச திணைக்களங்களின் உள்ளீடல், தமிழ் பேசும் மக்களிடையேபிளவுகள் ஏற்படுத்தும் ஆள்பவர்களின் சூழ்ச்சி ஆகியன மிகவேகமாக எம்மைப் பாதித்துவருகின்றன. இராணுவத்தினரின் தலையீடுகளும் தற்போது புதிய உத்வேகத்துடன் நடைபெற்றுவருகின்றன.

எமது பூர்வீக நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் நில ஆக்கிரமிப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள தேங்கு நிலை, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான நம்பத்தகு விசாரணைகள் நடை பெறாமை, இராணுவமயமாக்கல் மற்றும் மீள்குடியமர்வு போன்ற ஆறுவிடயங்கள் தொடர்பில் நியாயம் கோரி சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாம் ஆர்ப்பாட்டம் ஒன்றை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றேன்.

தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டைசிதைக்கும் வகையில் முல்லைத்தீவு மற்றும் திருகோண மலை ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் மிகப்பெரும் அளவில் சிங்களக்குடியேற்றங்கள் இடம்பெறுவதுடன் வடக்குகிழக் கின் ஏனைய எல்லா இடங்களி லும் அரசதிணைக்களங்கள் முழு மையாக ஈடுபடுத்தப்பட்டு எமது நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

பாரிய ஒருசெயல் திட்டத்தை நாம் மாகாண சபையில் இருந்த போது நடைமுறைப்படுத்த விழைந்த போது எம்மால் அடையாளம் காட்டப்பட்டகாணியை வன திணைக் களத்திற்கு சொந்தம் என்று கூறி அந்த செயல்திட்டம் நிறுத்தப்பட்டது.

அவ்வளவுக்கும் குறித்த காணிக்கும் வன திணைக்களத்திற்கு மிடையில் எந்தவித தொடர்பும் இல்லை. இவ்வாறு அபகரிக்கப் படும் நிலங்களில் பௌத்த மயமாக் கலும் சிங்களமயமாக்கலும் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

இறுதி யுத்தத்தின் போது எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

மாறாக நல்லாட்சி என்ற முகமூடியை அணிந்து கொண்டுகடந்த 5 வருடங்களில் இந்த அரசாங்கம் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் மேற்கொண்ட தீர்மானத்தை முற்றிலும் உதாசீனம் செய்துள்ளதுடன் எமது மக்களுக்கு எதிராக கட்டமைப்பு ரீதியானதும், கலாசார ரீதி யானதுமான இனப்படு கொலையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

அரச படைகளுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை முற்றாக நிராகரித்துள்ள அரசாங்கம், யுத்தத்தில் ஈடுபட்ட எமது இளைஞர்களை நீண்ட காலமாக சிறைகளில் அடைத்து வைத்து தண்டனைக்கு உட்படுத்தி வருகின்றது.

சாத்வீக வழிகளில் சிறைகளில் பலதடவைகள் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டும் அவர்களின் கோரிக்கைகள் செவி மடுக்கப்படவில்லை.

இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறு வலியுறுத்தி எமது மக்கள் வீதிகளில் நின்றுபல வருடங்களாக மேற்கொண்டு வரும் போராட்டங்களை அரசாங்கம் கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ள வில்லை.

சுமார் ஒருலட்சம் வரையிலான இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் நிலை கொண்டு நில அபகரிப்பு, சிங்களகுடியேற்றம் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆதரவும் பாதுகாப்பும் வழங்கி வருகின்றனர்.

யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்துவிட்டுள்ள போதிலும் இடம் பெயர்ந்துள்ள எமதுமக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்பட வில்லை.

இராணுவம் எமதுமக்களின் காணிகளிலும்வீடுகளிலும் குடியிருக்க எமது மக்கள் இடம் பெயர் முகாம்களில் பலவருடங்களாக இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இவை எல்லாமே இலங்கையில் தமிழ் மக்களின் இருப்பை முற்றிலுமாக இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் நன்குதிட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இனப்படு கொலைக்கான நிகழ்ச்சித் திட்டத்தின் பரிமாணங்களே.

ஆகவேதான், இந்த அடக்கு முறைகளையும், அநியாயங்களையும் இவற்றுக்கான எமது ஒட்டு மொத்தஎ திர்ப்பையும்காட்டும் அதேவேளை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இனப்படுகொலைக்குஎ திரான “எழுகதமிழ்” நிகழ்வு போன்ற நிகழ்வுகளை யாழ்ப்பாணம் உட்படவடக்குகிழக்கின் முக்கிய இடங்களில் நாம் நடத்து வதுபொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

இது தொடர்பில் அண்மைக் காலமாக பல புத்தி ஜீவிகளும் சமூக செயற்பாட்டாளர் களும் என்னைவலியுறுத்திவ ருந்திருக்கின்றார்கள். எம்முடன் பயணிக்கும் சக அரசியல் கட்சிகளும் இது பற்றிக் கூறியுள்ளார்கள்.

நில அபகரிப்பு நடவடிக்கைகள் அரசமயமாக்கப்பட்டு உச்ச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் காலதாமதம் இன்றி இந்த நிகழ்வுகளை மேற் கொள்ளவேண்டும் என்பது எனது கோரிக்கை.

செப்டெம்பர் முதலாவது வாரத்தில் நடத்தலாம் என்று அபிப்பிராயப்படுகின்றேன்.
இது தொடர்பில் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

இந்தக் கோரிக்கைசம்பந்தமாகநீங்கள் உடன்படுவீர்களானால் இது தொடர்பில் ஒரு செயற் மத்து ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளைநாம் உடனடியாக ஆரம்பிக்கலாம். ஆர்ப் பாட்ட நிகழ்வுகளுடன் மட்டும் நின்று விடாமல் நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் தகவல்கள் மற்றும் ஆதாரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தி அவற்றை வெளியீடு செய்யும் நடவடிக்கைகளிலும் நாம்கவனம் செலுத்தவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்.

மேலும், நில ஆக்கிரமிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவை தொடர்பில் வெளிநாடுகளில் இருக் கக்கூடிய நிபுணர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை இந்த நிகழ்வுகளுக்கு அழைப்பதுபற்றி ஆராய்ந்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

அத்துடன், இந்தவிடயங்கள் தொடர்பில் பணியாற்றிவரும் உலகளாவிய அரசசார்பற்ற நிறு வனங்களுடன் இணைந்து செயலாறலாமாஎன்பதைப்பற்றியும் ஆராய்ந்து அறிவுரை வழங்குவீர்களாக.

அண்மையில் கிழக்குசென்றி ருந்தேன். கல்முனைபிரதேசச பையைத்தரம் உயர்த்துவது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் வாக்களிப்பு இடம்பெற்ற நாளன்று தமிழர் தம் கோரிக்கை சார்பான நடவடிக்கைகளை உடனே எடுக்க கொழும்பில் இருந்துகட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே இருந்தனவாம்.

வாக்கெடுப்புமுடிந்து அடுத்தநாளே அமைச்சரின் கட்டளை ஒன்று அவசர அவசரமாகக் கல்முனைக்குச் சென்றடைந்தது. அதாவதுமுதல் நாள் “செய்யுங்கள்” எனக் கூறப்பட்ட அனைத்துச் செயல்களையும் “நிறுத்துங்கள்” எனப்பட்டதாம்.

எவ்வளவு இலேசாக எம் பாராளுமன்ற அங்கத்தவர்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்று இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எமது இனம் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை நாம் இனியும் பொறுத்துக் கொள்ளமுடியாது. என வேமக்கள் இயக்கமானதமிழ் மக்கள் பேரவைமக்களைத் திரட்டி எமது மனநிலையை ஊர், உலகத்திற்கு உரக்கக் கூறி வெளிப்படுத்து வது காலத்தின் கட்டாயமாகின்றது எனத் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment