பெளத்த மத ஆக்கிரமிப்பை நிறுத்து சர்வதேசம் தலையிட வேண்டும்!! (கட்டுரை)

தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, போர்க்குற்றவிசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை கோருவது உள்ளிட்ட ஆறு விடயங்களை முன்வைத்து தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி வடக்குக்கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது.

தமிழ்மக்கள்பேரவையின் மத்தியகுழுக்கூட்டம் நேற்று மாலை நான்கு மணியளவில் பலாலிவீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவல கத்தில் இணைத்தலைவர்கள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வைத்தியநிபுணர் பூ.லக்ஷ்மன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்தும் தமிழர் தாயகத்தில் பௌத்த மதத் திணிப்புக் குறித்தும் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டதுடன் தமிழ் அரசியல்வாதிகளை ஏமாற்றி; அரசியல்தீர்வு, காணாமற்போனவர்களின் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என எதனையும் கருத்தில் எடுக்காமல் அரசாங்கம் காலம் கடத்துகிறது.

எனவே தொடர்ந்தும் எம் மக்கள் அமைதியாக இருக்கமுடியாது.

சர்வதேச நாடுகளின் உதவியைக் கோருவது கட்டாயமாகிவிட்டது எனப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் ஒன்று திரட்டி எங்கள் இனத்தின் அவலத்தை, இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந் தும் தமிழ் இனத்தை ஏமாற்றுகின்ற கபடத்தனத்தை உலகறியச் செய்யவேண்டும் எனவும் இதற்காக எதிர்வரும் செப்ரெம் பர்மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணியை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

செப்ரெம்பர் 7ஆம் திகதி தமிழர் தாயகம் தழுவியதாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணிக்கு அனைத்து பொது, சமூக அமைப்புக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதென்றும் இதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி அனைத்துப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதெனவும் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Comments (0)
Add Comment