கழுவுகிற நீரில் நழுவுகிற ஆள் லொஸ்லியா!! (கட்டுரை)

இலங்கையின் கிளிநொச்சியில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர் இவர். இவரது தாயும், தந்தையும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அவர்கள் திருகோணமலைக்கு இடம்பெயர்ந்தனர். இவர் தன் கல்வியை திருகோணமலையில் தொடர்ந்தார். இவர் நான்கு ஆண்டுகளாக கொழும்பில் வசித்துவந்த நிலையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி ஊடகத்தில் செய்தி வாசிப்பாளராக இணைந்தார். தற்போது இவர் இலங்கையின் ஒரு முதன்மை செய்தி வாசிப்பாளராக உள்ளார். சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு பின்னாகும்.

பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா.

லாஸ்லியா என்று இவரை தமிழக ரசிகர்கள் அழைத்து வந்தாலும், இவரது பெயர் லொஸ்லியா மரியநேசன்.

பிக்பொஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் அவருக்கென “லொஸ்லியா ஆர்மி” என்ற இணைய பக்கங்களும் அவரின் ரசிகர்களினால் தொடங்கப்பட்டன.

இவ்வாறு ஒரு சில நிமிடங்களில் பிரபலமடைந்த இந்த லொஸ்லியா யார்?

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் 1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி லொஸ்லியா மரியநேசன் பிறந்தார்.

கிளிநொச்சியில் அன்று காணப்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு லாஸ்லியாவின் பெற்றோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

திருகோணமலையிலுள்ள அழகிய கிராமமான அன்புவழிபுரம் என்ற பகுதிக்கு சென்ற அவர்கள், ஓலைகளினாலான வீடொன்றை கட்டி அந்த வீட்டில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்துள்ளனர்.

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட லொஸ்லியாவின் தந்தை மரியநேசன், சாரதியாக பணி செய்து வந்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.

2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் குடும்பம் எதிர்கொண்ட கஷ்ட சூழ்நிலைக்கு மத்தியில், லொஸ்லியாவின் தந்தை தொழில் வாய்ப்பை தேடி கனடா சென்றுள்ளார்.

அதன் பின்னர் லொஸ்லியா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள், தனது தாயான மேரி மாக்ரட்டின் அரவணைப்பின் கீழ் திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் கல்வி கற்றுள்ளனர்.

லொஸ்லியா, தமிழ் சார்ந்த பல்வேறு போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

உயர்தர பரீட்சையை எழுதிய லொஸ்லியா, பெறுபேறு வரும் வரை காத்திருந்த சந்தர்ப்பத்தில் சக்தி தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

ஊடக பிரவேசத்திற்கான சந்தர்ப்பம் கிடைத்த தருணத்திலேயே, உயர்தரத்தில் சித்தியும் பெற்றுள்ளார் லொஸ்லியா. அதனூடாக அவருக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.

பல்கலைக்கழக பிரவேசமா? ஊடக பயணமா? என்ற கேள்விக்கு பதில் தெரியாது தடுமாறிய லொஸ்லியா, இறுதியில் ஊடக பயணத்தை தொடர்வது என்ற முடிவை எட்டியுள்ளார். இதன்படி, சக்தி தொலைக்காட்சியில் காலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் ஊடாக, சற்று பிரபலமடைந்த அவர், பின்னரான காலப் பகுதியில் அதே தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னை உயர்த்தி வளர்த்துக் கொண்டுள்ளார்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் மத்தியில் லொஸ்லியா மிகவும் பிரபலமடைந்தார்.

விஜய் டிவில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் பணியாற்றிய இலங்கை பெண் ஒருவரின் உதவியுடனேயே, லொஸ்லியா தமிழக ஊடகத்துறைக்குள் சென்றுள்ளார்.

விஜய் டிவிக்கு சென்ற அவரிடம் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் ஊடாக, அவர் நேரடியாக பிக்பொஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்;.

“நண்பர்கள் மாத்திரம் ரசித்துக் கொண்டிருந்த லொஸ்லியாவை, இன்று உலகமே ரசித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என அவரது நெருங்கிய தோழி தர்ஷி தெரிவிக்கின்றார்.

தமிழகத்தைத் தாண்டி தமிழர்கள் வசிக்கும் இதர சர்வதேசப் பகுதிகளையும் அதிகம் கவர வேண்டும் என்கிற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நோக்கத்தினாலேயோ என்னவோ இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் செய்தி வாசிப்பாளர், இந்த நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இருக்கிற போட்டியாளர்களிலேயே வயதில் குறைந்தவர், அழகானவர் என்பதாலேயே இவருக்கு உடனே ஆர்மியெல்லாம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஓவியாவிற்காவது அவரது நல்லியல்புகளையும் குணாதிசயங்களையும் பார்த்து அவதானித்த பின்புதான் ஆர்மி உருவாகி அதன் எண்ணிக்கை பெருகியது.

இவருக்கு உடனே பார்வையாளர்களின் ஆதரவு உருவாகியிருப்பது எப்படி பலமோ அப்படியே பலவீனமாகவும் அமையலாம். ‘கழுவுகிற நீரில் நழுவுகிற ஆள்’ என்பது மாதிரியான பிம்பம் லொஸ்லியா குறித்து உருவாகியிருக்கிறது.

இவருடைய தனித்தன்மை இன்னமும் கூட வெளிப்படவில்லை. அது நட்பா அல்லது காதலா என்று தெரியாத உறவில் கவினிடம் விழுந்திருக்கிறார்.

இதுவே இவருக்கொரு பின்னடைவாக அமையலாம். ஆனால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கக்கூடிய நபராக இவர் இருக்கக்கூடும்.

Comments (0)
Add Comment