பலமா – பல­வீ­னமா? ஐ.தே.க உள்­மு­ரண்­பா­டுகள்!! (கட்டுரை)

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் வர­லாற்றை எடுத்துக் கொண்டால், பெரும்­பாலும், ஆளும்­கட்­சியே முதலில் அதற்குத் தயா­ராகி வந்­தி­ருக்­கி­றது. ஆளும்­கட்சி தமது வேட்­பா­ளரைத் தீர்­மா­னித்து விட்டுத் தான், தேர்­த­லுக்­கான அறி­விப்பை வெளி­யி­டு­வது வழமை.

1982இல் ஜே.ஆர்..ஜய­வர்த்­தன ஆட்­சி­யி­லி­ருந்து கொண்டே, முத­லா­வது ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை வெளி­யிட்டார்.

அப்­போது, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வி­யாக இருந்த சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டி­ருந்­தது, அதனால், இழு­ப­றி­க­ளுக்கு மத்­தியில் தான் ஹெக்டர் கொப்­பே­கடுவ வின் பெயர் வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­டது.

1989இல், இரண்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­தலை அறி­வித்த போது, ஜே.ஆரிடம், மூன்று வேட்­பா­ளர்கள் இருந்­தனர். ஒருவர் ரண­சிங்க பிரே­ம­தாஸ, இன்­னொ­ருவர், காமினி திஸா ­நாயக்க, மூன்­றா­மவர் லலித் அத்­துலத் முதலி.

காமினி திஸா­நா­யக்­கவை வேட்­பா­ள­ராக நிறுத்­தவே ஜே.ஆர் விரும்­பினார், ஆனால், அவரை விஞ்சி வளர்ந்து விட்ட ரண­சிங்க பிரே­ம­தாஸ, ஜே.ஆருக்கு அழுத்தம் கொடுத்து, வேட்­பா­ள­ராக களத்தில் இறங்­கினார்.

எதிர்த்­த­ரப்பில் சுதந்­திரக் கட்­சியின் சார்பில் அப்­போது சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­க­வுடன் போட்­டி­யிடும் நிலையில் யாரும் இருக்­க­வில்லை. அதனால் அவரே போட்­டி­யிட்டு தோல்வி கண்டார்.

1994இல், ஐ.தே.கவின் டி.பி.விஜே­துங்க ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போதும், காமினி திஸா­நா­யக்­கவே வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கப்­பட்டார். மேல் மாகா­ண­சபைத் தேர்­தலில் பெரும் வெற்­றியைப் பெற்று முத­ல­மைச்­ச­ராக இருந்த சந்­தி­ரிகா குமா­ர­துங்க, அப்­போது, சுதந்­திரக் கட்­சியை உள்­ள­டக்­கிய கூட்­ட­ணியின் சார்பில், வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்டார்.

அதன் பின்னர் தான், முதல்­மு­றை­யாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பதவி சுதந்­திரக் கட்­சிக்கு வந்­தது. அப்­போது, இழந்த நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை ஐ.தே.கவினால் இன்­னமும் பிடிக்க முடி­யாமல் இருக்­கி­றது.

1999இல் இரண்­டா­வது பதவிக் காலத்­துக்­காக போட்­டி­யி­டு­வ­தற்­காக சந்­தி­ரி­காவே ஜனா­தி­பதித் தேர்­தலை அறி­வித்தார். எனவே, அவரை தவிர்த்த வேறொ­ருவர் வேட்­பா­ள­ரா­வது பற்­றிய கேள்வி, அவ­ரது கூட்­ட­ணிக்குள் இருக்­க­வில்லை. அப்­போது சந்­தி­ரிகா மிகப்­ப­ல­மான ஒரு தலை­வ­ராக இருந்தார். ஐ.தே.க மிகவும் பல­வீனம் அடைந்து போயி­ருந்­தது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மைத்­து­வத்தில் இருந்த ஐ.தே.கவுக்குள் அப்­போது, அவ­ருக்கு எதி­ராக தலை­தூக்கக் கூடிய தலை­வர்கள் இருக்­க­வில்லை.

1989இல் பிரே­ம­தா­ஸ­வுக்கு கடும் போட்­டியைக் கொடுத்த, காமினி திஸா­நா­யக்க 1994இல் தேர்தல் பிர­சா­ரத்தின் போதும், அதற்கு முன்­னரே லலித் அத்­துலத் முதலி 1993 தேர்தல் பிர­சா­ரத்தின் போதும் கொல்­லப்­பட்டு விட்ட நிலையில், ரணி­லுக்கு போட்­டி­யான தலைமை இருக்­க­வில்லை. அதனால், அவரே வேட்­பா­ள­ராக நின்று தோற்றுப் போனார்.

2005ஆம் ஆண்டு சந்­தி­ரிகா ஜனா­தி­ப­தி­யாக இருந்­த­போது அறி­விக்­கப்­பட்ட தேர்­தலில், அவரால் மீண்டும் போட்­டி­யிட முடி­யாமல் இருந்­தது, அதனால், வேறு வழி­யின்றி பிர­த­ம­ராக இருந்த மஹிந்த ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்த வேண்­டிய நிலைக்கு உள்­ளானார்.

1989 ஜனா­தி­பதித் தேர்­தலில் ரண­சிங்க பிரே­ம­தாஸ எவ்­வாறு தனது பலத்தைக் காட்டி ஐ.தே.கவின் வேட்­பா­ள­ரா­னாரோ, அது­போ­லவே மஹிந்த ராஜபக் ஷவும், பிர­த­ம­ராக இருந்து கொண்டு, ஜனா­தி­ப­தி­யாக இருந்த சந்­தி­ரி­கா­வுக்கு அழுத்தம் கொடுத்து, பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரானார்.

(11ஆம் பக்கம் பார்க்க)

ஐ.தே.க. (தொடர்ச்சி)

இந்­த­மு­றையும், ஐ.தே.கவில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை விட பிர­ப­ல­மான வேட்­பா­ளர்கள் யாரும் இருக்­க­வில்லை. அவ­ரது தலை­மைக்கு யாரும் சவா­லாக இல்­லாத நிலை­யிலும், சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வினால் பிர­தமர் பதவி பறிக்­கப்­பட்­டதால் ஏற்­பட்ட அனு­தாப அலையும், அவ­ருக்கு சாத­க­மாக இருந்­தது.

1994இல் இழந்த ஜனா­தி­பதி பத­வியை, ஐ.தே.க வேட்­பா­ள­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க மிக­நெ­ருங்கி வந்­த­போதும், வடக்கில் வாக்­க­ளிப்பு இடம்­பெ­றா­ததால், மஹிந்­த­விடம் தோல்வி காண நேரிட்­டது.

அதற்குப் பின்னர், 2010இல் முன்­கூட்­டியே ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்த மஹிந்த ராஜபக் ஷ முடி­வெ­டுத்த போது, தொடர் தோல்­விகள், மஹிந்­த­வுக்கு சாத­க­மாக இருந்த போர் வெற்றி அலை, என்­பன, ஐ.தே.கவின் தலை­வ­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு சாத­க­மாக இருக்­க­வில்லை.

மஹிந்­தவின் போர் வெற்றி வாதத்­துக்கு இணை­யான ஒரு பொது­வேட்­பா­ள­ராக சரத் பொன்­சேகா தெரிவு செய்­யப்­பட்டார். அப்­போது, ஐ.தே.க இழந்த வாய்ப்பை, இம்­முறை மீண்டும் தக்க வைக்கப் போராடிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதித் தேர்­தலை முன்­கூட்­டியே நடத்த மஹிந்த திட்­ட­மிட்டுக் கொண்­டி­ருந்த போது, அதற்­கான அறி­விப்பை அவர் வெளி­யிட ஒரு­வாரம் முன்­ன­தா­கவே, சரத் பொன்­சேகா இரா­ணுவ சேவையில் இருந்து வில­கினார்.

சரத் பொன்­சே­காவை பொது­வேட்­பா­ள­ராக தெரிவு செய்­வதில், ஐ.தே.கவுக்­குள்­ளேயே அத­னுடன் கூட்­டணி அமைத்துக் கொண்ட கட்­சிகள் மத்­தி­யிலோ எதிர்ப்­புகள் இருக்­க­வில்லை. ஒரு கட்­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூட அவ­ருக்கு ஆத­ரவு அளிக்க முன்­வந்­தது.

இந்த தேர்­தலில் கிடைத்த வெற்­றிக்குப் பின்னர், அர­சி­ய­ல­மைப்பில் 18 ஆவது திருத்­தத்தின் மூலம், 2015இல் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ முன்­கூட்­டியே தேர்­தலை எதிர்­கொள்ள முடிவு செய்­த­போது, எதிர்க்­கட்­சிகள் தரப்பில் யார் போட்­டி­யி­டு­வது என்ற குழப்பம் மேலோங்­கி­யி­ருந்­தது.

அப்­போதும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு சாத­க­மான நிலை ஐ.தே.கவுக்­குள்­ளேயும் இருக்­க­வில்லை. மஹிந்­த­வுக்கு எதி­ரான கூட்­ட­ணி­யிலும் இருக்­க­வில்லை.

பொது­வேட்­பா­ளரை நிறுத்­தியே மஹிந்­தவை தோற்­க­டிக்க வேண்டும் என்ற வியூகம் வகுக்­கப்­பட்ட போது, மாது­ளு­வாவே சோபித தேரர், சந்­தி­ரிகா குமா­ர­துங்க, கரு ஜய­சூ­ரிய போன்­ற­வர்கள் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டலாம் என்றே பேசப்­பட்­டது.

ஆனால், மஹிந்­தவைத் தோற்­க­டிக்க சுதந்­திரக் கட்சி வாக்கு வங்­கியை உடைக்க வேண்டும் என்­பதால், அந்தக் கட்­சியின் பொதுச்­செ­ய­ல­ராக இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, அங்­கி­ருந்து பெயர்த்து வந்து பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தி­யது ஐ.தே.க. அந்த முயற்­சியில் மஹிந்த தோற்­க­டிக்­கப்­பட்டார். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யானார்.

இப்­போது ஆட்­சியில் உள்ள மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ தமது வேட்­பா­ளரை யார் என தீர்­மா­னிக்க முடி­யாமல் திணறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கிக் கொண்­டி­ருக்­கையில், ஆளும்­கட்­சியே பெரும்­பாலும் முதலில் வேட்­பா­ளரை தீர்­மா­னிக்கும் வழக்கம் இருந்த போதும், இம்­முறை அதற்கு நேர்­மா­றான நிலையே காணப்­ப­டு­கி­றது.

இரண்­டா­வது பத­விக்­கா­லத்­துக்கு போட்­டி­யிடும் வாய்ப்பைக் கொண்­டி­ருந்த போதும், மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அதற்­கான துணிச்­சலும், வெற்றி வாய்ப்பும் இல்லை.

அவ­ரது கட்­சியின் சார்பில் போட்­டி­யிட வேறெந்த தகு­தி­யான வேட்­பா­ளரும் இல்லை என்றும் அவ­ரது கட்­சி­யி­னரே கூறி விட்­டனர்.

இந்த நிலையில், பொது­ஜன பெர­மு­ன­வுக்கு ஆத­ரவு கொடுத்து, பொதுத் தேர்­தலில் ஆச­னங்­க­ளையும் அமைச்சர் பத­வி­க­ளையும் உறு­தி­ப­டுத்­து­கின்ற பேரத்தில் இறங்­கி­யி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

மற்­றொரு புறத்தில், ஐ.தே.கவுக்குள் இப்­போது, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு நிக­ரான தலை­மைத்­து­வங்கள் எழுச்சி பெற்­றி­ருக்­கின்­றன. ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்குப் பதி­லாக, கரு ஜய­சூ­ரிய, சஜித் பிரே­ம­தாஸ, லக் ஷ்மன் கிரி­யெல்ல போன்­ற­வர்­களை போட்­டியில் நிறுத்­தலாம் என்ற பர­வ­லான கருத்­துக்கள் தோன்­றி­யி­ருக்­கி­றது.

கடந்த காலங்­களில் இருந்த, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மாற்­றாக யாரும் இல்லை என்ற நிலை, மாறி­யுள்­ளது.

எனினும், 2005இற்குப் பின்னர், ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐ.தே.க வேட்­பாளர் ஒரு­வரே நிறுத்­தப்­பட வேண்டும் என்ற கருத்தும் வலுப் பெற்­றி­ருக்­கி­றது,

இம்­முறை ஐ.தே.கவுக்குள் யார் வேட்­பாளர் என்ற இழு­ப­றிகள் நீடித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இது ஐ.தே.கவுக்குள் உள்­ளக மோதல்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளதைக் காட்­டு­கி­றது. யார் பெரி­யவர் என்றும், பல­முள்­ளவர் யார் என்றும் காட்டும் முனைப்­பு­களில் ரணிலும், சஜித்தும் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இதனால் ஐ.தே.க பிள­வு­படப் போகி­றது, கோத்­தா­பய ராஜபக் ஷவை தோற்­க­டிப்­ப­தற்­கான வாய்ப்பை ஐ.தே.க கோட்டை விடப்­போ­கி­றது என்ற கருத்­துக்கள் வலுப்­பெற்று வரு­கின்­றன.

1994இல் இழந்த ஜனா­தி­பதி பத­வியை மீளப்­பெறும் வாய்ப்பை ஐ.தே.க உள்­ளக முரண்­பா­டு­களால் பறி­கொ­டுத்து விடக்­கூடும் என்ற கருத்­துக்­களை உரு­வாக்கி விட்­டி­ருக்­கி­றது இந்த முரண்­பா­டுகள்.

ஒரு­வ­கையில் இது பல­வீ­ன­மாகப் பார்க்­கப்­பட்­டாலும், இன்­னொரு பக்­கத்தில், இதனை ஐ.தே.க ஒரு­வித பிர­சார உத்­தி­யாகப் பயன்­ப­டுத்­து­கி­றதா என்ற சந்­தே­கங்­களும் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

சஜித் பிரே­மதா ஸவுக்கு ஆத­ர­வாக பெரி­ய­ள­வி­லான பேர­ணிகள் நடத்­தப்­ப­டு­கின்­றன. அவர் நானே வேட்­பாளர் என தன்னைத் தானே அறி­விக்­கிறார். இவை­யெல்லாம் ஊட­கங்­களின் கவ­னிப்பை பெற்­றி­ருக்­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷ வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­படும் வரை தான், பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் பற்­றிய பர­ப­ரப்பு காணப்­பட்­டது.

கோத்தா வேட்­பா­ள­ராக அறிவிக்கப்பட்ட பின்னர், ஐ.தே.கவைச் சுற்றியே, அதன் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையைச் சுற்றியே ஊடகங்களின் கவனம் இருக்கிறது.

ஊடகங்கள் மாத்திரமன்றி, பொதுஜன பெரமுன தலைவர்கள் கூட ஐ.தே.க வேட்பாளர் யார் என்பது பற்றியே ஊடகங்களிடமும் கூட்டங்களிலும் பேசுகின்றனர். ஒருவகையில் இதுவே ஐ.தே.கவுக்கான பிரசாரமாக அமைந்திருக்கிறது.

கடந்த முறை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யார், மஹிந்தவை எதிர்க்கப் போவது யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

அதுபோலவே, இம்முறை கோத்தாவை எதிர்க்கப்போகும் ஐ.தே.க வேட்பாளர் யார் என்ற கேள்விக்கான விடை இன்னமும் கிடைக்கவில்லை.

இழுபறிகளால் அதிகளவில் மக்களினதும், ஊடகங்களினதும் கவனம் ஐ.தே.கவை நோக்கி இருந்தாலும், அதுவே சாதகமான அலையை தோற்றுவிக்கும் என்று முழுமையாக நம்பிவிட முடியாது.

இதனை ஒரு உத்தியாக ஐ.தே.க கையாளுகிறது எனக் கருதினால், அது பலமாக அமையக் கூடுமா அல்லது பலவீனமாக இருக்குமா என்று இப்போது கணிக்க முடியாது.

Comments (0)
Add Comment