கேள்விக்குறியாகும் ரணிலின் எதிர்காலம்!! (கட்டுரை)

அதி­கா­ரத்தில் இல்­லாத போது கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு எதி­ராக கிளர்ச்­சிகள் நடப்­பதும், கட்­சி­க­ளுக்குள் பிள­வுகள் ஏற்­ப­டு­வதும், காலை வாரி விடும் சம்­ப­வங்கள் நடப்­பதும் வழமை.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தேர்­தல்­களில் தோல்­வி­ய­டைந்து அதி­கா­ரத்தை இழந்து போயி­ருந்த சந்­தர்ப்­பங்­களில், பல உட்­ச­தி­க­ளையும், குழப்­பங்­க­ளையும் எதிர்­கொண்­டி­ருந்தார்.

ஆனாலும் அதனை அவர் வெற்­றி­க­ர­மாக எதிர்­கொண்டு கட்சித் தலை­மையை தக்­க­வைத்துக் கொண்­ட­துடன், இன்­று­வரை பிர­தமர் பத­வி­யையும் காப்­பாற்றி வந்­தி­ருக்­கிறார்.

இப்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐ.தே.கவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை அறி­விக்க வேண்­டிய நிலையில், கடு­மை­யான சவால்­களை எதிர்­கொண்டு வரு­கிறார்.

கட்­சிக்குள் மாத்­தி­ர­மன்றி, அவ­ரது சமூ­கத்­துக்­குள்­ளேயே அவர் சவால்­களைச் சந்­திக்க ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

இது அவ­ரது வீழ்ச்­சிக்­கான அறி­கு­றி­யாக இருக்­கி­றதா அல்­லது அவரை இன்­னமும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒன்­றாக இருக்­குமா என்­பதே இப்­போ­துள்ள கேள்­வி­யாக இருக்­கி­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கட்சித் தலைமைப் பத­வியை விட்டு விலகி ஓய்­வெ­டுக்க வேண்டும் என்று கடந்­த­வாரம் ஐ.தே.கவின் சட்­டத்­த­ர­ணிகள் சங்க கூட்­டத்தில் அதன் தலை­வ­ரான உபுல் ஜெய­சூ­ரிய, கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

ஜே.ஆர்.ஜய­வர்த்­தன 82 வயது வரை ஐ.தே.க. தலை­வ­ராக இருந்­த­போது யாரும் அவ­ரிடம் வெளிப்­ப­டை­யாக இத்­த­கைய கோரிக்­கையை விடுத்­த­தில்லை. அவ்­வாறு கோரும் துணிச்­சலும் யாருக்கும் இருந்­த­தில்லை.

ஆனால் 70 வய­தி­லேயே ரணில் ஓய்­வெ­டுக்க வேண்டும், அடுத்த கட்டத் தலை­வர்­க­ளுக்கு வழி­விட வேண்டும் என்ற பகி­ரங்க கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

ஜே.ஆர்.ஜய­வர்த்­தன தனது 70களில் தான் நிறை­வேற்று அதி­கா­ரத்­தையே கைப்­பற்­றினார். அவ­ரிடம் நிறை­வேற்று அதி­காரம் இருந்­த­போது அவ­ருக்கு எதி­ராக வாய் திறக்கும் துணிச்சல் யாருக்கும் இருக்­க­வில்லை.

ஆனால் ரணில், 70களின் தொடக்­கத்தை எட்டி விட்­டாலும், அவ­ருக்கு இன்­னமும் நிறை­வேற்று அதி­காரம் வசப்­ப­ட­வில்லை. பிர­தமர் பத­வியை அடைந்த திருப்­தி­யுடன் அர­சி­யலை விட்டு வெளி­யே­று­வது அவ­ருக்கு உவப்­பான ஒரு விட­ய­மா­கவும் தெரி­ய­வில்லை.

அதனால் தான் அவர் இன்­னமும், அர­சியல் மைதா­னத்தில் இருந்தே ஆட எத்­த­னிக்­கிறார்.

ஆனால், கட்­சிக்குள் வளர்ந்து விட்ட பல தலை­வர்கள், அவ­ரது இடத்தைக் குறி வைத்­தி­ருப்­பதால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எப்­போதும் தலை­வலி இருந்து கொண்டே இருக்­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஓய்வு பெறு­மாறு சட்­டத்­த­ரணி உபுல் ஜெய­சூ­ரிய, கோரிய அடுத்­த­டுத்த நாட்­க­ளி­லேயே நடந்­தே­றிய ஒரு சம்­பவம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பெரும் அதிர்ச்­சியை கொடுத்­தது.

கள­னிய ரஜ­மகா விகா­ரையின் அறங்­கா­வலர் சபையின் (தாயக்க சபா) தலைவர் பத­வி­யி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கு­கின்ற ஒரு தீர்­மானம் டயக்க சபாவின் உறுப்­பி­னர்­களால் எடுக்­கப்­பட்­டது.

2020 பெர­ஹெ­ரவை நடத்­து­வது தொடர்­பாக ஆராயும் தாயக்க சபா கூட்­டத்தில், அதன் தலை­வ­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க சரி­யாக செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டை ஒரு உறுப்­பினர் முன்­வைத்தார். அதனை இன்­னொ­ருவர் வழி­மொ­ழிந்தார்.

அதை­ய­டுத்து, கள­னிய ரஜ­மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி, அவ்­வா­றாயின், ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்தப் பத­வியில் இருப்­பதை விரும்­பு­வோரை கை உயர்த்­து­மாறு கோரினார்.

300 பேருக்கு மேல் பங்­கேற்ற அந்தக் கூட்­டத்தில் 7 பேர் மாத்­தி­ரமே கை உயர்த்­தினர். இதை­ய­டுத்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்கும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதனை தாயக்க சபாவின் நிறை­வேற்றுக் குழு­வுக்கு அனுப்­பு­வ­தா­கவும் விகா­ரா­தி­பதி கூறினார்.

­மண நிகழ்வு ஒன்றில் பங்­கேற்­றி­ருந்த ரணி­லுக்கு இந்த தகவல் கிடைத்­தது, அடுத்­தநாள் காலையில், மாலை­தீ­வுக்குப் புறப்­ப­டு­வ­தற்கு முன்னர், கள­னிய ரஜ­மகா விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு, தாம் அந்தப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்தார்.

இது ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு கடும் அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ள ஒரு சம்­பவம்.

கள­னிய ரஜ­மகா விகாரை, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் குடும்ப வழி­யி­ன­ரா­லேயே கட்­டப்­பட்­டது. எனவே, அவ­ரது செல்­வாக்கு அங்கு நீண்ட கால­மா­கவே வந்­தது.

அதன்­படி தான், 2010 ஜனா­தி­பதித் தேர்­தலில் சரத் பொன்­சே­கா­வுக்கு கள­னிய ரஜ­மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்தார்.

இப்­போது அவர், கோத்­தா­பய ராஜபக் ஷவின் பக்கம் திரும்­பி­யி­ருக்­கிறார். கோத்­தா­பய ராஜபக் ஷவும் கள­னிய விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் ஒரே வகுப்பில் படித்­த­வர்கள் என்றும் சொல்­லப்­ப­டு­கி­றது.

ஆகஸ்ட் 11ஆம் திகதி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்­ட­வுடன், கோத்­தா­பய ராஜபக் ஷ முதலில் சென்று வழி­பாடு நடத்­தி­யது கள­னிய ரஜ மகா விகா­ரையில் தான்.

இதி­லி­ருந்து ஒன்றைக் புரிந்து கொள்ள முடி­கி­றது, ஆட்சி அதி­கா­ரத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருந்­தாலும், அவரை இல­கு­வாகப் பத­வி­யி­லி­ருந்து தூக்கி விடும் துணிச்சல் கள­னிய ரஜ­மகா விகா­ரையின் டயக்க சபா­வுக்கு வந்­தி­ருக்­கி­றது.

இது, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் சமூ­கத்­தி­ன­ரா­லேயே, அவர் ஒரு இல­கு­வான இலக்­காக பார்க்­கப்­ப­டு­கிறார், தூக்கி வீசப்­ப­டு­கிறார் என்­பதைக் காட்­டு­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் உள்ள பல­வீ­ன­மான அதி­கா­ரமோ, கோத்­தா­பய ராஜபக் ஷ பல­மான அதி­காரம் கொண்­ட­வ­ராக மாறுவார் என்ற எதிர்­பார்ப்போ தான், இவ்­வா­றான ஒரு நிலை­மைக்குக் காரணம்.

பிர­தமர் பத­வியை விட, டயக்க சபா தலைவர் என்­பது பெரிய பத­வி­யல்ல. ஆனாலும், அந்த சபா, நாட்டின் பிர­த­மரைக் கூட தூக்­கி­யெ­றிவோம் என்­பதை காட்­டி­யி­ருக்­கி­றது.

அது ஒரு­பு­ற­மி­ருக்க, டயக்க சபா தலைவர் போன்ற சமூக மதிப்பு மிக்க பத­வி­களைக் கூட சரி­யாக தக்­க­வைத்துக் கொள்ள முடி­யாத தலை­வ­ராக சிங்­கள மக்கள் மத்­தியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிங்­கள மக்கள் மத்­தியில் பெறு­மா­ன­மற்ற அல்­லது கவர்ச்­சி­யற்ற ஒரு தலை­வ­ராக மாறி வரு­கிறார் என்­ப­தற்­கான ஒரு எடு­கோ­ளாக, இந்தச் சம்­ப­வத்தை எடுத்துக் கொள்­ளலாம். இதில் சில­ருக்கு மாறு­பட்ட கருத்­துக்கள் இருக்­கலாம்.

ஆனால், இது­போன்ற ஒரு சம்­பவம், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆளுமை பற்­றிய கேள்­வி­களைப் பர­வ­லாக எழுப்­பி­யி­ருக்­கி­றது என்­பதே உண்மை.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அர­சி­யலில் நரி என்று அழைக்­கப்­ப­டு­பவர். அதே­வேளை முது­கெ­லும்­பில்­லாத தலைவர் என்றும் சொல்­லப்­ப­டு­பவர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சி­யலை இரா­ஜ­தந்­தி­ரத்­துடன் கையாண்டு வரு­பவர் தனது எதி­ரி­க­ளையும் மடக்கிப் போடு­பவர்.

கடந்த நான்­கரை ஆண்­டு­களில் ராஜபக் ஷவினர் எவரும், நீதி­மன்­றங்­களால் தண்­டிக்­கப்­ப­டாமல் இருப்­ப­தற்கும் அவர் காரணம் என்ற குற்­றச்­சாட்டும் உள்­ளது.

மஹிந்த ராஜபக் ஷவையும், அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் ரணில் விக்­ர­ம­சிங்­கவே காப்­பாற்­று­கிறார் என்று அர­சியல் மட்­டங்­க­ளிலும், ஊடக மட்­டங்­க­ளிலும் குற்­றச்­சாட்­டுகள் உலா­வு­கின்­றன. ஆனாலும், அதனை நிரூ­பிக்க யாராலும் முடி­ய­வில்லை.

அதே­வேளை அது பொய்­யான குற்­றச்­சாட்டு என்றும் அவரால் உறு­தி­யாக நிரா­க­ரிக்க முடி­ய­வில்லை.

இவ்­வா­றான ஒரு ஆபத்­தான விளை­யாட்டில் இறங்கப் போய் தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இப்­போது முட்டுச் சந்து ஒன்றில் சிக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வ­ரையில் கள­னிய ரஜ­மகா விகா­ரையின் பொறுப்பில் இருந்து விலக முன்­வந்­தது போல, அர­சியல் பதவிகளிலிருந்து இலகுவாக வெளியேறும் ஒருவராக இல்லை.

அவர் தனது அதிகாரத்தை தக்கவைப்பதிலேயே குறியாக இருப்பவர். அதனால் தான், இன்றுவரை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

பிரதமர் பதவி வரை பார்த்து விட்ட அவருக்கு நிறைவேற்று அதிகாரத்தையும் ருசித்துப் பார்த்து விடும் ஆவல் வந்திருந்தால் அது ஆச்சரியமானதல்ல.

ஆனால், துரதிஷ்டவசமாக, ஐ.தே.கவுக்குள் இருந்தே அவரை வெளியே அனுப்புவதற்கு ஆட்கள் உருவாகத் தொடங்கியுள்ளது போலவே, சிங்கள பௌத்த சமூகத்திலிருந்தும் அவரை வெளியே அனுப்பும் கைங்கரியங்களும் நடந்து கொண்டுள்ளன.

இவ்வாறான ஒரு நிலையில் ரணில் விக்கிரமசிங்க கௌரவமான ஓய்வை நோக்கி செல்லப் போகிறாரா இல்லை, ஜே.ஆர் ஜயவர்த்தனவை போலவே தனது 70களில், நிறைவேற்று அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தீவிர போராட்டத்தில் இறங்கப் போகிறாரா? – விரைவிலேயே அது தெரிந்து விடும்.

Comments (0)
Add Comment