ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் வாக்­குகள்!! (கட்டுரை)

ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் எப்­படி வாக்­க­ளிக்கப் போகின்­றனர் அவர்­களை எவ்­வாறு வாக்­க­ளிக்கத் தூண்­டு­வது என்ற ஆரோக்­கி­ய­மான விவாதம் ஊட­கங்­களில் இப்­போது உலாவத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

ஜனா­தி­பதித் தேர்தல் என்­பது, தமக்­கா­னது அல்ல என்று எப்­போ­துமே தமிழ் மக்­களால் உண­ரப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. ஏனென்றால், ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான கட்­சி­களில் ஒன்­றினால் தான், வெற்­றி­பெற முடியும். அத்­துடன், வெற்றி பெறு­வ­தற்கு 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­க­ளையும் பெற வேண்டும்.

தமிழர் ஒரு­வரை எந்­த­வொரு பிர­தான கட்­சியும் தமது வேட்­பா­ள­ராக அறி­விக்கப் போவதும் இல்லை. தமிழர் ஒரு­வ­ருக்கு 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­குகள் கிடைக்கப் போவதும் இல்லை.

சிங்­கள , பௌத்த பேரி­ன­வாத மேலா­திக்க சிந்­தனை மிகுந்த இலங்கை அர­சி­யலில் சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது.

இவ்­வா­றான நிலையில், ஜனா­தி­பதித் தேர்தல், தமக்­கு­ரிய ஒரு தேர்தல் என்ற கருத்து தமி­ழர்கள் மத்­தியில் உரு­வா­காமல் இருப்­பது ஆச்­ச­ரி­ய­மில்லை.

ஆனால், அவ்­வப்­போது, ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் தமிழ் மக்கள் ஆத­ரவு, எதிர்ப்பு மற்றும் புறக்­க­ணிப்பு என வெவ்­வேறு வடி­வங்­களில் தமது பிரதி­ப­லிப்­பு­களை வேட்­பா­ளர்­களின் மீது வெளிப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கி­றார்கள்.

1982 இல், ஜே.ஆரும் சிறி­மாவோ அம்­மை­யாரும் போட்­டி­யிட்ட போது, பெரும்­பாலும் குமார் பொன்­னம்­ப­லத்தை ஆத­ரித்த தமி­ழர்கள் 1988இல், பிரே­ம­தா­ஸவும் சிறி­மாவோ அம்­மை­யாரும் மோதிய போது, வாக்­க­ளிப்பில் பெரிதும் ஆர்வம் காட்­டா­வி­டினும், சிறி­மா­வோ­வுக்கே அதிக வாக்­கு­களை அளித்­தனர்.

அதற்குப் பின்னர், 1999 இல் சந்­தி­ரிகா- –ரணில் மோதிய போது, சந்­தி­ரி­கா­வுக்கு எதி­ராக மன­நி­லையை வெளிப்­ப­டுத்த ரணி­லுக்கு ஆத­ரவு கொடுத்­தனர்.

2005இல், புலி­களின் கோரிக்­கைக்கு அமைய வாக்­க­ளிப்பை புறக்­க­ணித்து ஒரு­வித தீர்­மா­னத்தை வெளிப்­ப­டுத்­தினர்.

2010இல் மஹிந்த ராஜபக் ஷ- சரத் பொன்­சேகா மோதிய போது, பெரும்­பா­லான மக்கள் இரு­வ­ரை­யுமே புறக்­க­ணித்­தனர். வாக்­க­ளித்­த­வர்­களில் அநேகம் பேர் சரத் பொன்­சே­கா­வையே ஆத­ரித்­தனர்.

2015இல் தான், தமி­ழர்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரான மன­நி­லையை அலை­யாகத் திரண்டு வெளிப்­ப­டுத்­தினர். அது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சார்­பா­ன­தாக அமைந்­தது.

இப்­போது, கோத்­தா­பய ராஜபக் ஷ கள­மி­றங்­கி­யி­ருக்­கிறார். ஐ.தே.க தரப்பில் சஜித் பிரே­ம­தா­ஸவோ, ரணில் விக்கி­ர­ம­சிங்­கவோ கள­மி­றங்கக் கூடும். ஜே.வி.பி சார்பில் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க போட்­டி­யி­டு­கிறார்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில், பெரும்­பா­லான தமி­ழர்கள் யாருக்கு வாக்­க­ளிக்கப் போகின்­றனர். உதிரிக் கட்­சிகள் தவிர்ந்த, பலம் வாய்ந்த தமிழ்க் கட்­சிகள் யாருக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கோரப் போகின்­றன? என்று கேள்வி எழு­கி­றது.

இந்­திய ஊடகம் ஒன்­றுக்கு அண்­மையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன், தமிழ் மக்கள் யாருக்கும் வாக்­க­ளிக்கும் மனோ­நி­லையில் இல்லை என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ, ரணில் விக்­கி­ரம­சிங்க, மைத்­தி­ரி­பால சிறி­சேன

எல்­லோ­ருமே தமி­ழர்­களை நம்ப வைத்து ஏமாற்­றி­ய­வர்கள் என்று கூறி­யி­ருக்கும் அவர், இறுதிப் போர் காலத்தில் நிகழ்ந்த படு­கொ­லை­க­ளுக்குக் கார­ண­மான கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்­க­ளிக்­க­மாட்­டார்கள் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அது­போ­லவே வடக்கில் உள்ள தமிழ் மக்கள் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஆத­ரிக்­க­மாட்­டார்கள் என்ற உறு­தி­யான நம்­பிக்­கையை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்­தனும் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

2015இல் மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதி­ரான மனோ­நி­லையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே, பெரு­வா­ரி­யாக தமி­ழர்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­தார்கள்.

அவ்­வாறு பார்க்கும் போது, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான மனோ­நி­லையை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக தமிழ் மக்கள் பெரு­ம­ளவில் வாக்­க­ளிக்க வேண்டும்.

ஆனால், வாக்­க­ளிக்கும் மனோ­நிலை தமிழ் மக்­க­ளிடம் குறைந்­தி­ருக்­கி­றது என்ற சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனின் கூற்று சரி­யா­ன­தென்றால், அதற்கு என்ன காரணம்?

யாருக்கு வாக்­க­ளிப்­பது என்ற சிக்­கலே அந்தக் கார­ண­மாக இருக்­கலாம்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை எதிர்ப்­பது என்றால் யாரை ஆத­ரிப்­பது, மீண்டும் மைத்­தி­ரி­பால சிறி­சேன போன்ற ஒரு­வ­ருக்கு முட்டுக் கொடுப்­பதா என்ற கேள்வி அவர்­க­ளிடம் இருக்கக் கூடும்.

ஆனால், தமிழ் மக்கள் இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிக்­காமல் ஒதுங்கிக் கொள்­வது பிரச்­சி­னைக்­கான தீர்­வாக இருக்­குமா என்­பது சந்­தேகம் தான்.

அண்­மையில் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சி.வி.விக்­னேஸ்­வரன், இந்தத் தேர்­தலில் தமிழ் மக்கள் அதி­க­ளவில் வாக்­க­ளிக்க வேண்­டி­யது அவ­சியம் என்று கூறி­யி­ருந்தார்.

அதன் மூலமே, தமிழ் மக்­களின் பலத்தை உணர்த்த முடியும் என்­பது அவ­ரது கருத்து.

ஆனால் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பதை அவரோ பிர­தான தமிழ்க் கட்­சி­களின் தலை­வர்­களோ இன்­னமும் தீர்­மா­னிக்­க­வில்லை. அதற்­கான பேரத்தை நடத்­து­வ­தற்கு அவர்கள் சந்­தர்ப்­பத்தை எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கி­றார்கள்.

மற்­றொரு புறத்தில், கடந்த வாரம் யாழ்ப்­பா­ணத்தில் செய்­தி­யாளர் சந்­திப்பு ஒன்றை நடத்­திய கலா­நிதி விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன, இந்தத் தேர்­தலில் தமிழ் மக்கள் அதி­க­ளவில் வாக்­க­ளிக்க வேண்டும் என்­ப­தற்கு ஒரு கார­ணத்தை முன்­வைத்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்­த­வொரு வேட்­பா­ளரும் 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களைப் பெறாமல் போனால், இரண்­டா­வது சுற்று வாக்கு எண்­ணிக்கை நடத்­தப்­படும். அதில் இரண்­டா­வது விருப்பத் தெரிவு வாக்­குகள் அதி­க­மாக யாருக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றதோ அவரே தெரிவு செய்­யப்­ப­டுவார்.

இவ்­வாறு இரண்­டா­வது சுற்று வாக்கு எண்­ணிக்கை இடம்­பெற்றால், பெரும் கல­வரம் வெடிக்கும். அதனை தவிர்ப்­ப­தற்கு, தமிழ் மக்கள் அதி­க­ளவில் வாக்­க­ளிக்க வேண்டும் என்று விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன கூறி­யி­ருக்­கிறார்.

தமிழ் மக்கள் வாக்­க­ளிப்பில் இருந்து ஒதுங்கும் போது, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத மேலா­திக்­கத்தின் கை இன்­னமும் மேலோங்கும். சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் வெற்றி பெற்று ஒரு ஜனா­தி­பதி தெரிவு செய்­யப்­படும் போது, அவர் தமிழ் மக்­களின் கருத்­துக்­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் இல­கு­வா­கவே தட்­டிக்­க­ழித்து விடும் வாய்ப்­பு­க­ளையும் மறுக்க முடி­யாது.

அண்­மையில் ஒரு செவ்­வியில், மஹிந்த ராஜபக் ஷ, தனக்கு வாக்­க­ளித்து விட்டு தமிழ் மக்கள் தன்­னிடம் தீர்வைக் கேட்டு வர வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

வாக்­க­ளிக்­காமல் தன்­னிடம் யாரும் தீர்வு கேட்கக் கூடாது என்­பது அவ­ரது இப்­போ­தைய வாதம்.

இவ்­வா­றான நிலையில் மஹிந்த ராஜபக் ஷ மாத்­தி­ர­மன்றி, ஐ.தே.க வேட்­பா­ளரும் கூட சிங்­கள மக்­களால் தெரிவு செய்­யப்­படும் சூழல் ஒன்று உரு­வானால், அவர்கள் தமிழ் மக்­களின் கோரிக்­கை­களை கருத்தில் கொள்­வார்­களா ? என்­பது சந்­தேகம் தான்.

தமிழ் மக்­களை ஜனா­தி­பதித் தேர்தல் புறக்­க­ணிப்பு நிலையை நோக்கித் தள்ளிச் செல்­வது தான், அல்­லது தமிழ் மக்கள் மத்­தியில் வாக்­க­ளிப்பின் மீது அக்­க­றை­யின்­மையை தூண்­டு­வது தான் தமிழ்க் கட்­சி­களின் வேலை­யாக இருந்தால், தேசிய அர­சி­யலின் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக தமி­ழர்கள் இருக்க முடி­யாது,

2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமிழ் மக்­களின் வாக்­கு­களால் ஜனா­தி­ப­தி­யா­னவர் என்ற கருத்து உள்­ளது. ஆனால் அவர் தமிழ் மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்­பது பொது­வாக ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­கின்ற ஒரு விடயம்.

வரும் ஜனா­தி­பதி தேர்­த­லிலும் ஒரு வேட்­பா­ளரை ஆத­ரித்து அதே நிலையை எதிர்­கொள்ள வேண்­டுமா என்ற கேள்வி தமி­ழர்கள் மத்­தியில் இருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

ஆனால், அர­சியல் என்­பது, முற்­றிலும் நீதி­யா­னதோ, கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்­று­வதோ அல்ல. அது ஒரு இரா­ஜ­தந்­தி­ரமும் கூட.

அர­சி­யல்­வா­தி­களால் மாத்­திரம் அர­சி­யலில் இரா­ஜ­தந்­தி­ரத்­துடன் ஆட முடியும் என்­றில்லை. வாக்­கா­ளர்­க­ளாலும் அவ்­வாறு ஆட்­டத்தை ஆட முடியும்.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில், இந்தத் தேர்­தலில் பேரம் பேச பெரும் வாய்ப்­புகள் உள்­ளன என்று கூறப்­பட்­டாலும், அவர்­க­ளுக்­கென இருப்­பது ஒரு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஆடு களம் தான். அதற்குள் தான், ஆட வேண்டும்.

ஆனால் அந்த ஆட்­டத்தை எந்­த­ள­வுக்கு வெற்­றி­க­ர­மாக ஆட வேண்டும் என்­பது தான் முக்­கி­ய­மா­னது. அதற்­கான வழி­காட்­டல்­களை தமிழ்க் கட்­சிகள் தான் வழங்க வேண்டும்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்­னமும் மூன்று மாதங்கள் வரையே உள்ளன. அதற்குள் தீர ஆலோசிக்க முடியும்.

முதல் விருப்பு வாக்கை பிரதான கட்சிகளுக்கு அளிக்காமல், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு தள்ளுவதற்கு முயற்சிப்பதன் சாதக பாதகங்களையும் இத்தருணத்தில் கலந்துரையாடுவது முக்கியம்.

பிரதான வேட்பாளர்களை ஆதரித்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போன அனுபவத்தைக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மாற்றுத் தெரிவுகளையும் அதற்கான வாய்ப்புகளையும் ஆராய்வதில் தவறில்லை.

ஆனாலும், இது எமக்கான தேர்தல் இல்லை என்ற மனோநிலை தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் வரை, அவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவது என்பது கடினமானது தான்.

ஒருவேளை இந்தத் தேர்தலில் வாக்களிப்பு மனோநிலையை விட, கோத்தா எதிர்ப்பு மனோநிலை தீவிரமானதாக இருந்தால் அது தமிழ் மக்களின் வாக்களிப்பை அதிகப்படுத்தக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது.

Comments (0)
Add Comment