தனி­ம­னித நிறை­வேற்­ற­தி­காரம் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரா­னது!! (கட்டுரை)

சர்­வா­தி­கார 18 ஆம் ஷரத்­துக்கு ஆத­ர­வ­ளித்த பின் மன்­னிப்பு கேட்­டது யார்? நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தாயின் எல்லாத் தரப்­பி­ன­ரோடும் பேசியே அதைச் செய்ய வேண்­டுமே தவிர பின்­வ­ழியால் அது நிகழ இட­ம­ளிக்க மாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இது­பற்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்தை நிகழ்ந்­தி­ருப்­பது பற்றி குறிப்­பி­டு­கை­யி­லேயே இவர் இவ்­வாறு கூறி­யி­ருக்­கிறார்.

அதா­வது நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிக்கப் பிர­தமர் ஜனா­தி­ப­தி­யிடம் ஆத­ரவு கோரி­யது தனக்குத் தெரி­யாது எனவும் அவ்­வாறு நிகழ்ந்­தி­ருப்பின் முறை­யற்ற செயல் எனவும் பின் வழியால் சென்று அதை மேற்­கொள்ள முடி­யாது எம்­மோடு பேசியே செயற்­பட வேண்டும் எனவும் கூறி­யி­ருக்­கிறார். அவ­ரது கட்­சியின் செய­லாளர் நீதி­மன்­றமும் செல்­வாராம். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிக்க வேண்டும் என்­பது 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் வழங்­கிய ஆணை­களில் ஒன்­றாகும். மைத்­தி­ரியும் ரணிலும் இணைந்தே அதைப் பெற்­றி­ருந்­தார்கள். அந்த வகையில் முதற்­கட்ட 100 நாள் வேலைத்­திட்­டத்­தி­லேயே அதற்­கான முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்டு இப்­போது நடை­மு­றைக்குக் கொண்டு வரப்­பட்­டி­ருக்க வேண்டும். அந்த சூழலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையும் கிடைத்­தி­ருக்கும் சர்­வ­ஜன வாக்கு வைத்தும் மக்­களின் ஏகோ­பித்த அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றி­ருக்­கலாம்.

காரணம் இவ்­வி­ரண்­டு­மின்றி நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிக்க முடி­யாது. எனினும் மைத்­தி­ரியும் ரணிலும் அந்த வாய்ப்­பான சூழலை உரிய முறையில் பயன்­ப­டுத்திக் கொள்­ளாமல் அந்த அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­துக்கும் பகிர்ந்து கொண்­டார்கள். அதன் பிறகு அந்த சூழல் மாறி எதிர்க்­கட்­சியின் கைப­ல­மா­கி­யதும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­ப­தற்­கான மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறும் சாத்­தி­யமும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெற்றி பெறும் சாத்­தி­யமும் இல்­லா­மற்­போ­யின.

2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்­கிய ஆணைப்­படி மைத்­தி­ரியும் ரணிலும் உட­ன­டி­யாக செயற்­பட்­டி­ருப்பின் அப்­போதே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை இல்­லா­ம­லாக்கி அந்த அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­திடம் வழங்­கி­யி­ருக்க முடியும். எனினும் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைக்­கவும் பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்­களைக் கூட்­டவும் என்னும் புது­வி­ளக்கம் வகுக்­கப்­பட்­டது. 19 ஆம் ஷரத்தில் ஜன­நா­யக அம்­சங்கள் இருந்­த­போதும் இது மைத்­தி­ரியும் ரணிலும் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பகிர்ந்து கொள்­ள­வெனச் செய்த முறை­யாகும். ஏனெனில் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் முற்­றிலும் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாரா­ளு­மன்­றத்­துக்கு வழங்­கவே மக்­க­ளாணை வழங்­கப்­பட்­டது. அது நிக­ழா­ததால் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்ட ஜன­நா­யக அம்­சங்­க­ளுக்­குள்ளும் இழு­பறி நிகழ்ந்து கொண்­டுதான் இருக்­கின்­றன.

இப்­போது 19 ஆம் ஷரத்­துக்குள் மைத்­தி­ரியும் ரணிலும் மாட்டிக் கொண்டு கழற முடி­யா­தி­ருக்­கி­றார்கள். அதன் வெளிப்­பா­டா­கவே இரு­வரும் கலந்து பேசி­யி­ருக்­கலாம் என எண்­ணு­கிறேன்.

மைத்­திரி பொது அபேட்­ச­க­ராகப் போட்­டி­யிட்டு வென்­ற­படி பொது ஜனா­தி­ப­தி­யா­கவே செயற்­பட்­டி­ருந்­தி­ருப்­பா­ராயின் பக்­கச்­சார்­பின்றி தன்­னோடு நிறை­வேற்று அதி­கார முறையை நிறைவு செய்து கொண்டு தனது ஆட்சிக் காலத்­துக்­குள்­ளேயே அந்த அதி­கா­ரத்தை முழு­தாகப் பாரா­ளு­மன்­றத்­துக்கு வழங்­கி­யி­ருக்­கலாம்.

எனினும் பொது அபேட்­ச­க­ராகப் போட்­டி­யிட்டு பொது ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வான அவர் தன்­னிடம் தோல்­வி­யுற்ற ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் தனது வெற்­றிக்கு அடித்­த­ள­மிட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியைத் தனது எதிர்த்­த­ரப்­பாக ஆக்கிக் கொண்டார்.

அத்­தோடு தன்­னிடம் தோற்ற மஹிந்­த­வோடு நெருக்­க­மா­கியும் கொண்டார். ஆரம்­பத்தில் 19 ஆம் ஷரத்­துக்கு முழு ஆத­ர­வையும் வழங்கிப் பாரா­ளு­மன்­றத்தில் ஏக­போ­க­மாக நிறை­வேற உத­வி­யவர் பிற்­பாடு 19 ஆம் ஷரத்தில் என்ன இருக்­கி­றது தெரி­யாது என்றார்.

நிறை­வேற்று அதி­காரம் இரு அதி­கார கட்­ட­மைப்பு மையங்­க­ளாக வகுக்­கப்­பட்­ட­தால்தான் அரச நிர்­வாகம் சீர்­கு­லைந்து போயி­ருப்­ப­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன இப்­போது குறிப்­பி­டு­கிறார். அதன் பாதிப்பை இப்­போ­துதான் ரணிலும் உணர்ந்­தி­ருக்­கிறார் போலும். அத­னால்தான் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை நீக்­கப்­பட வேண்டும் என ரணில் இப்­போது மைத்­தி­ரி­யிடம் கூறி­யி­ருக்­கி­றாரோ? தற்­போது அதற்­கான அர­சியல் சூழல் இல்­லை­யென்­பதே உண்­மை­யாகும். காரணம் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் போது இது சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கலாம். தற்­போது எதிர்த்­த­ரப்­பா­கிய மஹிந்த ராஜபக் ஷவின் அணி­யினர் அதி­வ­லிமை பெற்­றி­ருப்­பதால் மஹிந்­த­வோடு ரணில் கூட்டு சேர்ந்தால் மட்­டுமே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிக்க முடியும். காரணம் அதன் மூலமே மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்று சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிலும் மக்­க­ளா­ணையைப் பெற முடியும்.

எனினும் மஹிந்த ராஜபக் ஷ

அது இப்­போது முடி­யாது 2020 ஆம் ஆண்டு நிக­ழ­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின் என் வசம் முழு­மை­யான நிர்­வாகம் அமைந்­தபின் பார்ப்போம் எனக் கூறி­விட்டார். 19 ஆம் ஷரத்­துப்­படி அந்த தேர்­தலில் வெற்­றி­யீட்டும் எந்த ஜனா­தி­ப­திக்கும் நிறை­வேற்று அதி­காரம் இருக்­காது. 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக மட்டும் சில அமைச்­சுக்கள் மைத்­தி­ரிக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தன.

மைத்­தி­ரிக்கு இந்த விடயம் நன்­றாகத் தெரியும். பிற­கெ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் முழு ஆத­ர­வோடும் பொது அபேட்­ச­க­ராகி வென்ற பின் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையை ஏற்க வேண்டும். பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையை வைத்துக் கொண்டே சந்­தி­ரி­கா­வுக்கு சவால் விட்ட ரணில் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பகிர்ந்து கொடுத்தால் என்ன செய்வார் கடை­சியில் ரணி­லிடம் தாக்குப் பிடிக்க முடி­யாமல் மஹிந்­தவைத் துணைக்­க­ழைத்து 19 ஆம் ஷரத்தால் அதிலும் தோல்­வி­யுற்று விட்டார்.

19 ஆம் ஷரத்து மூலம் மைத்­தி­ரியை ரணில் தனது கட்­டுக்குள் கொண்­டு­வந்­தது மட்­டு­மல்ல மஹிந்­த­வையும் முடக்­கியே இருந்தார். மூன்றாம் முறை­யா­கவும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்­பது மஹிந்­த­வுக்கும் இரட்டைப் பிரஜா உரிமை கூடாது என்­பது கோத்த­பா­ய­வுக்கும் வயது வரம்பு என்­பது நாம­லுக்கும் கட்­டப்­பட்ட அடைப்­பு­க­ளாகும்.

மஹிந்­த­வுக்கு எதி­ராகத் தன்னை ரணில் பயன்­ப­டுத்திக் கட்­டுக்குள் வைத்­தி­ருப்­ப­தாக மைத்­திரி எண்­ணி­ய­தா­லேயே இடையில் பிர­தமர் பத­வியை விட்டும் ரணிலை நீக்கி மஹிந்­தவைப் பிர­த­ம­ராக ஆக்­கி­யி­ருந்தார். செய்த குற்­றத்­துக்குப் பிரா­ய­ச்சித்­த­மா­கவும் எதிர்­கால பாது­காப்­புக்­கா­கவும் தான் செல்­வாக்கை இழந்து விட்­டதை மீட்டிக் கொள்­வ­தற்­கா­க­வுமே இவ்­விதம் இவ­ரது செயற்­பாடு நிகழ்ந்­தி­ருக்­கலாம் என நினைக்­கிறேன்.

ஆக நிறை­வேற்று அதி­கா­ர­மற்ற ஜனா­தி­பதிப் பத­விக்­காக ஏன் இந்த கடு­மை­யான போட்டி என நீங்கள் வின­வலாம். முழு­மை­யான நிறை­வேற்று அதி­கா­ரமும் பாரா­ளு­மன்­றத்­துக்கே என இருப்­பினும் நாட்டின் தலை­மையும் ஆட்­சியின் தலை­மையும் பாது­காப்பின் தலை­மையும் ஜனா­தி­ப­தி­யி­டமே இருக்கும். எனவே ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒரே கட்­சியில் இருப்­ப­தையே ரணில் விரும்­பு­கிறார் என நினைக்­கிறேன். உண்­மையில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வெவ்­வேறு கட்­சி­களில் இருப்­பது மீண்டும் நிர்­வாக இழு­ப­றிக்கே நாட்டை இட்­டுச்­சென்று விடும்.

மக்­களால் தெரிவு செய்­யப்­ப­டாமல் பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையால் தெரிவு செய்­யப்­படும் கட்சி சார்­பற்ற ஜனா­தி­ப­தியே சரி­யான தேர்வு என்னும் உண்மை விளங்கிக் கொள்­ளப்­ப­டாத வரை நிர்­வாக முடக்­கத்தை அடக்­கி­விட முடி­யாது. அதுபோல் சர்வ கட்சி இடைக்­கால அரசு மூலமும் சர்வ கட்சி மகா­நாட்டின் மூலமும் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்­காக தீர்வை இல­குவில் அணு­கலாம் என்னும் யதார்த்­தமும் புரிந்து கொள்­ளப்­ப­ட­வில்லை.

இத்­த­னைக்கும் காரணம் சீராக நிகழ்ந்த பாரா­ளு­மன்ற ஜன­நா­யக முறைக்குள் தனி நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் புகுத்தி ஜே.ஆர். 1978 ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெரும்­பான்மை எம்.பி.க்களி­ட­மி­ருந்து திக­தி­யி­டப்­ப­டாத பத்­தி­ரங்­களில் எந்த எழுத்­துக்­க­ளு­மின்றி வெற்­றுத்­தாளில் ஒப்­பங்­களை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்­களைத் தனது கட்­டுக்குள் வைத்துக் கொண்­ட­தே­யாகும். இதனால் மக்­க­ளுக்­காக மக்­களால் மக்­களே ஆளும் முறை என்னும் ஜன­நா­யகப் பரி­பா­லன முறை அழிந்து போனது. அந்த தனி­ம­னித நிறை­வேற்று அதி­காரம் எப்­போதும் அழி­யா­த­வாறு நிபந்­த­னை­க­ளாக அதை அகற்­று­வ­தெனில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பாரா­ளு­மன்­றத்தில் வேண்டும் எனவும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு மூலம் அனு­ம­தியைப் பெற வேண்டும் எனவும் விதித்­து­விட்டு மூன்றில் இரண்டைப் பெறா­த­வாறு விகி­தா­சாரத் தேர்தல் முறையைக் கொண்டு வந்­தி­ருந்­த­தோடு 12 ½ வீத வெட்டுப் புள்­ளியைக் கொண்­டு­வந்து சிறு­கட்­சி­யையும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளையும் கூட முடக்­கினார்.

ஜே.ஆர். முஸ்­லிம்­களைத் தேசிய இனம் எனக் கரு­தி­யி­ருந்தால் தமிழ் தரப்­போடு 1984 இல் அவர் செய்த திம்பு பேச்­சு­வார்த்­தை­யிலும் 1987 ஆம் ஆண்டு அவர் இந்­தி­யா­வோடு செய்த உடன்­ப­டிக்­கை­யிலும் உள்­ள­டக்­கி­யி­ருப்பார். முஸ்­லிம்­களை இனக்குழுமம் மட்­டுமே என அவர் தவிர்த்­த­தா­லேயே உள்­ள­டக்­க­வில்லை. ஹக்­கீ­மோடு பேசிய பிர­பா­க­ரனும் முஸ்­லிம்கள் தேசிய இன­மல்ல ஒரு இனக் குழுமம் என்னும் கருத்­தையே முன்­வைத்­தி­ருந்தார். அந்த வகையில் இலங்கை இனப் பிரச்­சினை கூர்­மை­யுற்று மாற்­றி­னத்­தாரால் முஸ்­லிம்கள் தவிர்க்­கப்­பட்ட நிலை­யில்தான் அஷ்ரப் சிங்­கள அதி­காரப் பேரி­ன­வா­தத்­தையும் தமிழ் ஆயுதப் பேரி­ன­வா­தத்­தையும் எதிர்த்து நின்றார்.

அஷ்ரப் தனது அர­சியல் இருப்பை மேலும் வலுப்­ப­டுத்திக் கொள்­ளவே சந்­தி­ரிக்­காவின் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி என்னும் வலு­வோடும் இணைந்து அமைச்­ச­ர­வை­யிலும் இடம்­பெற்­றி­ருந்தார். இதன் மூலம் கட்சித் தொண்­டர்­களை நாடு முழுக்க பலம் பெறச் செய்­த­தோடு பல்­வேறு அபி­வி­ருத்­தி­க­ளையும் மேற்­கொண்டார். அவரும் பங்­க­ளிப்பு வழங்­கி­யி­ருந்த பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் என்னும் திட்டம் நடை­மு­றை­யா­கி­யி­ருந்தால் தீர்வு அப்­போதே கிடைத்­தி­ருக்கும். எனினும் போட்டி அர­சியல் கார­ண­மாக ரணில் குழுவின் அந்த நகலைப் பாரா­ளு­மன்­றத்தில் எரித்து விட்­டனர்.

ஆக சந்­தி­ரிக்­கா­விடம் தனி­நபர் நிறை­வேற்று அதி­காரம் இருந்தும் கூட பாரா­ளு­மன்றப் பெரும்­பான்மை இல்­லா­ததால் அது கைகூ­ட­வில்லை. ரணில் தனது பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையால் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­கா­விடம் கேட்­காமல் ஒஸ்லோ உடன்­ப­டிக்­கை­யையும் புலி­க­ளுடன் செய்து கொள்­ளவே சந்­தி­ரிக்கா தனது அதி­கா­ரத்தைக் கொண்டு பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்­து­விட்டார்.

ஆக ஒரே கட்­சி­யிடம் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இருந்­த­வரை இரு அதி­கார கட்­ட­மைப்­புக்கள் உரு­வா­க­வில்லை. கொள்கை ரீதி­யி­லான இரு­வேறு கட்­சி­க­ளிடம் அவைகள் இருந்­ததே பாதிப்­பாக அமைந்­தது.

ஜே.ஆரின் காலத்தில் தனி­நபர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை எதிர்த்த அஷ்ரப் பின்னர் பிரே­ம­தா­சவின் காலத்தில் அதை ஆத­ரிக்கக் காரணம் தனது முக்­கிய சில நோக்­கங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கே­யாகும்.

தனிமனித நிறைவேற்றதிகாரி……..

தமிழ் ஆயுதப் போரா­ளி­களின் அச்­சு­றுத்தல் கார­ண­மாக அவ­ரது தனித்­துவக் கொள்­கையும் செயற்­பா­டு­களும் தடை செய்­யப்­பட்­டி­ருந்­தன.

அவ­ருக்கும் அவரைச் சார்ந்­தோ­ருக்கும் உயி­ர­ழி­வுகள் ஏற்­படும் நிலையும் உரு­வா­கி­யது.

இவை­களே கொழும்­புக்குப் புக­லிடம் தேடி­வந்த அவர் பிரே­ம­தா­சவின் தனி மனித நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி நோக்­கத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்கக் கார­ணங்கள் ஆகின. இதனால் பின்­வரும் அனு­கூ­லங்­களை அஷ்ரப் பெற்றுக் கொண்டார்.

அவ­ருக்கும் அவ­ருக்குச் சார்ந்­தோ­ருக்கும் பாது­காப்பு

தேர்தல் முறையில் 12 ½ வீத வெட்டுப் புள்­ளியை 5 வீத­மாகக் குறைத்­ததால் கிழக்கில் மூன்று அல்­லது நான்கு ஆச­னங்­களைத் தனித்­துவக் கட்­சி­யாகப் பெறும் வாய்ப்பு

தனித்­துவக் கட்­சியைப் பதிவு செய்­வ­தற்­கான ஏற்­பாடு

வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களின் பாது­காப்பில் ஈடு­பாடு.

இவற்­றுக்­கா­கவே அஷ்ரப் 1988 ஆம் ஆண்டு பிரே­ம­தா­சவின் தனி­நபர் நிறை­வேற்று அதி­கார முறையை ஆத­ரித்­தி­ருந்தார்.

ஆரம்பம் முதற்­கொண்டே ரணி­லோடு சேர்ந்து மைத்­தி­ரியும் மஹிந்­தவை முடக்கி வைக்கப் பல­வாறும் செய்­தனர். அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் அதிக ஆச­னங்­களைப் பெற்றும் கூட மைத்­திரி அவ­ரது கட்சித் தலை­மையைப் பெற்றுக் கொண்டு இரு கட்சி இணைப்­பாட்சி எனக்­கூறி மஹிந்த பிர­த­ம­ரா­வ­தையும் கூடத் தடுத்­து­விட்டார். பின்னர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ஆவ­தையும் கூடத் தடுத்தார். முடிவில் மஹிந்த எதிர்க்­கட்சித் தலை­வ­ராக ஆன பின்பும் எதிர்த்த மைத்­திரி திடீ­ரென ரணிலைக் கவிழ்த்தி மஹிந்­த­வையே பிர­த­ம­ராக்­கினார். எனினும் நான் முன்பு கூறி­யது போல 19 ஆம் ஷரத்தால் ரணில் மேல்­நீ­தி­மன்றத் தீர்ப்பு மூலம் பத­வியை மீட்டுக் கொண்டார்.

முடிவில் இப்­போது தான் ரணில் 19 ஆம் ஷரத்தால் இரு அதி­காரக் கட்­ட­மைப்­புக்கள் உரு­வா­னதன் பாதிப்பை அனு­ப­வ­பூர்­வ­மாக உணர்ந்து கொண்டு மைத்­தி­ரியைக் கண்டு முழு­மை­யா­கவே தனி­நபர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறையை மாற்றி நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாகப் பாரா­ளு­மன்­றத்­துக்கு வழங்­குவோம் எனக் கூறி­யுள்ளார். ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த தரப்­பு­வென்றால் மஹிந்­த­விடம் மைத்­திரி சிக்கிக் கொள்ள வேண்­டி­வரும். ரணிலும் முரண்­பாட்டு அழுத்­தங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­வரும்.

அண்­மையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 68 அம் ஆண்டு பொதுக் கூட்­டத்தில் 2020 ஆம் ஆண்டு நிக­ழ­வி­ருக்கும் ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் வென்­றாலும் அவ­ருக்கு எந்த அதி­கா­ரமும் இருக்­காது. பாரா­ளு­மன்­றத்­தி­டமே அனைத்தும் இருக்கும். எனவே பிர­த­ம­ரா­வ­தற்கே முயற்­சிக்க வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டி­ருந்தார். 19 ஆம் ஷரத்­தி­லி­ருக்கும் அடிப்­ப­டையை இப்­போ­துதான் இவர் வெளிப்­ப­டுத்­து­கிறார். இவ­ரது கட்­சி­யினர் இரண்­டாகப் பிரி­யாமல் இவ­ரையே இரண்டாம் முறையும் போட்­டி­யிட வைத்­தி­ருந்தால் இவ­ரது கருத்து எப்­படி இருந்­தி­ருக்கும். அப்­போதும் கூட 2020 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆட்­சியே உரு­வாகும் எனவும் கூறி அசத்­து­கிறார்.

பதவிப் பிர­மாணம் செய்த காலத்தின் அடிப்­ப­டையில் பதவிக் காலத்தை மேலும் அதி­க­ரித்துப் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஆளுமை செலுத்தும் நோக்­கமும் இருக்­கி­றது. அதற்­கி­டையில் மாகா­ண­சபைத் தேர்தலை முற்படுத்தி மக்கள் மனநிலையைப் பரீட்சிக்கவும் அரசியலைத் திருப்பவும் அதன் மூலம் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டால் அதைக் காரணம் காட்டி நாட்டின் பாதுகாப்புக்காக எனக்கூறி இருப்பை மேலும் நீடித்துக் கொள்ளவும் அவரால் முடிந்திருக்கும்.

பழைய முறையிலோ புதிய முறையிலோ மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாயின் தொகுதி நிர்ணயம் குறித்த அறிக்கையைப் பாராளுமன்றம் அங்கீகரிக்கும் வரை முடியாது என உயர்நீதிமன்றம் பொருட்கோடல் வழங்கியதால் அவரது துருப்புச் சீட்டு ஏற்கப்படவில்லை.

இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாயின் எல்லாத் தரப்பினரோடும் பேசியே அதைச் செய்ய வேண்டுமே தவிர பின்வழியால் இதுபற்றி பிரதமர் ஜனாதிபதியிடம் கோரியது பற்றித் தனக்குத் தெரியாது. இது நிகழ்ந்திருப்பின் முறையற்ற செயல் எம்மோடு பேசியே அதைச் செய்ய வேண்டும் என ரவூப் ஹக்கீம் ஏன் குறிப்பிட வேண்டும். அவரது கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் இதற்கெதிராக உயர்நீதிமன்றம் செல்லவிருப்பதாக ஏன் கூற வேண்டும்.

2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தலில் மைதிரியும் அதே ஆண்டு நிகழ்ந்த பாராளுமன்றத் தேர்தலில் ரணிலும் தனி மனித நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரத்தை நீக்கி அதைப் பாராளுமன்றத்திடம் வழங்கப் போவதாகத் தானே மக்களாணை பெற்றிருந்தார்கள். அதை நிறைவேற்ற எல்லாக் கட்சிகளினதும் அனுமதி தேவையா? பல்வேறு கருத்துக்களுமுள்ள கட்சிகளிடமிருந்தும் இதைப் பெறுவது சாத்தியமா? இது ரவூப் ஹக்கீம் பெற்ற மக்களாணையிலும் இருக்கத்தானே செய்கிறது.

Comments (0)
Add Comment