கோத்­தா­வினால் மீட்க முடி­யுமா? (கட்டுரை)

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி பதி வேட்­பா­ள­ராக அறி­விக்­கப்­பட்ட பின்னர், கோத்­தா­பய ராஜபக் ஷ இப்­போது பொரு­ளா­தாரம், வெளி­வி­வ­காரம் போன்ற விட­யங்­களைப் பற்றி சற்று விரி­வாகப் பேசத் தொடங்­கி­யி­ருக்­கிறார். கடந்­த­வாரம், மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் மாநாட்டில் கோத்­தாபய ராஜபக் ஷ நிகழ்த்­திய உரையில், வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள் மற்றும் அதனைச் சார்ந்த பிரச்­சி­னை­களைத் தொட்டுச் சென்­றி­ருந்தார். அது­போல, வியத்­மக மாநாட்­டிலும் பேசி­யி­ருந்தார். ஆனால் அந்த விட­யங்­களைப் பற்றி அவர் விரி­வாகப் பேச­வில்லை.

எந்த மேடையில் எதைப் பற்றி அதிகம் பேச வேண்டும், எதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அர­சியல் வித்தை கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு கொஞ்சம் கொஞ்­ச­மாக கையில் கிட்டத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

அந்­நியத் தலை­யீ­டுகள், உடன்­பா­டுகள் விட­யத்தில், கடு­மை­யான போக்­கையும், எதிர்ப்­பையும் வெளிப்­ப­டுத்­து­கின்ற- பொது­ஜன பெர­மு­னவின் பங்­காளிக் கட்­சி­களில், மக்கள் ஐக்­கிய முன்­னணி, தேசிய சுதந்­திர முன்­னணி, பிவி­துரு ஹெல உறு­மய ஆகி­யன முக்­கி­ய­மா­னவை.

இட­து­சாரிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளான திஸ்ஸ விதா­ரண, டியூ குண­சேகர போன்­ற­வர்கள் சித்­தாந்த ரீதி­யாக வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள், முத­லீ­டுகள், உடன்­பா­டு­க­ளுக்கு எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்­தாலும், அவர்கள் கடும்­போக்­கு­வா­தத்தை வெளிப்­ப­டுத்­து­ப­வர்கள் அல்ல.

கடும்­போக்­கு­வா­தத்­தையும் அதே­வேளை, அந்­நியத் தலை­யீ­டு­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை அர­சி­ய­லுக்­கா­கவும் பயன்­ப­டுத்தி வரு­ப­வர்­களின் மேடை­களில் கோத்­தா­பய ராஜபக் ஷ அதற்­கேற்­ற­வாறு உரை­யாற்ற ஆரம்­பித்­தி­ருக்­கிறார். மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் மாநாட்டில் அவர் நிகழ்த்­திய உரை அவ்­வா­றான ஒன்று தான்.

அந்­நியத் தலை­யீ­டு­க­ளுக்கு இட­மளிக்­க­ மாட்டேன் என்­பதை ஆரம்­பத்தில் இருந்தே வலி­யு­றுத்தி வரும் கோத்­தா­பய ராஜபக் ஷ, மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் மாநாட்டில் கூறி­யுள்ள விடயம் ஒன்று முக்­கி­ய­மான ஒன்­றாகத் தெரி­கி­றது. வெளி­நா­டு­க­ளிடம் உள்ள பொரு­ளா­தார கேந்­தி­ரங்­களை மீட்­டெ­டுப்போம் என்­பதே அந்த விடயம்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் பொரு­ளா­தார முக்­கி­யத்­துவம் வாய்ந்த எந்த இடங்­களும் வெளி­நா­டு­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை, இப்­போது, பொரு­ளா­தார முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்கள் வெளி­நா­டு­க­ளிடம் தான் இருக்­கின்­றன என்று அவர் கூறி­யி­ருந்தார். இது எந்­த­ள­வுக்கு உண்­மை­யான கருத்து என்ற கேள்வி உள்­ளது. அம்பாந்­தோட்டை துறை­முகம் சீனாவின் கையில் இருக்­கி­றது என்­பது உண்மை. கொழும்பு துறை­முக நகரத் திட்டம் சீனாவின் கையில் இருக்­கி­றது. கொழும்பு துறை­மு­கத்தின் தெற்கு கொள்­கலன் முனையம் சீனாவின் கையில் இருக்­கி­றது,

திரு­கோ­ண­மலை எண்ணெய்க் குதங்கள் இந்­தி­யா­விடம் இருக்­கின்­றன.

இவை தவிர வேறெந்த பொரு­ளா­தார கேந்­தி­ரங்­களும் வெளி­நா­டு­களின் கைகளில் இருக்­க­வில்லை.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு குத்­த­கைக்கு வழங்­கி­யது தற்­போ­தைய அர­சாங்கம் தான். ஆனால், அந்த துறை­மு­கத்தை அமைப்­ப­தற்கு சீனாவை அழைத்து வந்து, அதன் மூலம் பாரிய கடன் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­ய­தற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டி­யது மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் தான்.

மஹிந்த அர­சாங்­கத்தின் கடனை அடைப்­ப­தற்­கா­கவே, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை 99 ஆண்டு கால குத்­த­கைக்கு கொடுக்க வேண்­டிய நிலை தற்­போ­தைய அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டது. கொழும்பு தெற்கு கொள்­கலன் முனையம் சீனா­வினால் அமைக்­கப்­பட்­டது. அதனை 35 ஆண்­டுகள் சீனாவே நிர்­வ­கிக்கப் போகி­றது. இதற்­கான அனு­ம­தியைக் கொடுத்­தது மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் தான்.

திரு­கோ­ண­மலை சீனக்­கு­டாவில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்­தி­யாவின் அர­சுத்­துறை நிறு­வ­ன­மான இந்­தியன் ஒயில் நிறு­வ­னத்­திடம் இருக்­கி­றது.

இதனை 2003இல் இந்­தி­யா­வுக்குக் கொடுத்­தது ஐ.தே.க அர­சாங்கம்.

அதற்குப் பின்னர், பத்து ஆண்­டுகள் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பத­வியில் இருந்­த­போது, எண்ணெய்க் குதங்­களை மீட்­ப­தற்கு எந்த நட­வ­டிக்­கை­யையும் எடுத்­தி­ருக்­க­வில்லை.

கொழும்பு துறை­முக நகரை உரு­வாக்கும் திட்­டத்தை சீனாவே முன்­னெ­டுத்­தது, அந்த நகரை அமைப்­ப­தற்­கான அனு­ம­தியைக் கொடுத்­தது மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் தான்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் நாட்டின் தேசிய வளங்கள் அனைத்தும் வெளி­நா­டு­க­ளிடம் விற்­கப்­பட்டு விட்­ட­தா­கவும், அந்­நி­யர்­களின் ஆதிக்கம் வந்து விட்­ட­தா­கவும் சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­திகள் கொந்­த­ளித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இதன்­மூலம் சிங்­கள மக்­களை உசுப்­பேற்றி, அர­சியல் ஆதா­யத்தை அடை­வதே இவர்­களின் திட்டம்.

இலங்­கை­யி­லேயே பொரு­ளா­தாரப் பெறு­மானம் அதி­க­மான இடம் காலி­முகத் திடல் தான். காலி­மு­கத்­தி­டலில் இருந்த நிலத்தை சீனாவின் ஷங்­ரிலா நிறு­வ­னத்­துக்கு விற்­பனை செய்­தது கோத்­தா­பய ராஜபக் ஷ தான் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும்.

அந்த இடத்தில் ஷங்­ரிலா நிறு­வனம் எழுப்­பி­யுள்ள நட்­சத்­திர விடு­தியில் தான், மஹிந்த – கோத்தா தரப்­பு­களின் முக்­கி­ய­மான நிகழ்­வுகள் இப்­போது நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. வியத்­மக அமைப்பின் மாநாடும் அங்கு தான் நடந்­தது,

வெளி­நா­டு­க­ளுக்கு நாட்டின் பொரு­ளா­தாரக் கேந்­தி­ரங்­களை வழங்­கி­யதில் இரண்டு பிர­தான அர­சியல் சக்­தி­களும் சளைத்­த­வை­யாக இருக்­க­வில்லை.

அதே­வேளை, இவ்­வாறு வெளி­நா­டு­க­ளுக்கு வழங்­கப்­பட்ட கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­களின் மூலம் மட்டும் தான், வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள் அதி­க­ரித்­துள்­ளன என்ற வாதம் சரி­யா­னதா?

அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனாவின் கைக்குச் சென்­றதால் இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் ஆதிக்கம் அதி­க­ரித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அதன் எதிர்­ம­றை­யான தாக்­க­மாக, அமெ­ரிக்­காவின் செல்­வாக்கும், தலை­யீ­டு­களும் இலங்­கையில் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

ஆனால், இலங்­கையில் உள்ள குறிப்­பிட்டுச் சொல்லக் கூடிய, எந்த பொரு­ளா­தாரக் கேந்­தி­ரமும், அமெ­ரிக்­கா­விடம் கொடுக்­கப்­ப­டவோ அதன் கட்­டுப்­பாட்டில் இருக்­கவோ இல்லை. எனினும், அமெ­ரிக்க தலை­யீ­டுகள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன.

அந்­நிய நாடு­க­ளிடம் பொரு­ளா­தாரக் கேந்­தி­ரங்கள் இருப்­ப­தாக சொல்லும் கோத்­தா­பய ராஜபக் ஷ, 2015இற்கு முன்னர் அது­பற்றி அறி­யாமல் இருந்­த­வ­ரல்ல.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை அமைக்கும் பணி சீனா­விடம் கொடுக்­கப்­பட்ட போதே, இது இலங்­கையில் வெளி­நா­டு­களின். தலை­யீ­டு­களை அதி­க­ரிக்கச் செய்யும், அதி­காரப் போட்­டியை உரு­வாக்கும் என்­றெல்லாம் பிராந்­திய அர­சியல், பாது­காப்பு ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­தி­ருந்­தார்கள்.

அவை எதையும் காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் இருக்­க­வில்லை.

இப்­போது திடீ­ரென பொரு­ளா­தாரக் கேந்­தி­ரங்கள் வெளி­நா­டு­க­ளிடம் சிக்­கி­யுள்­ளது போல மஹிந்த – கோத்தா தரப்­புகள் வெளிப்­ப­டுத்­து­கின்ற கருத்­துக்­களும் சரி, அவற்றை மீட்கப் போவ­தாக கொடுக்­கின்ற வாக்­கு­று­தி­களும் சரி முற்­றிலும் அர­சியல் நலன்கள் சார்ந்­த­வையே ஆகும்.

கோத்­தா­பய ராஜபக் ஷ மாத்­தி­ர­மன்றி, வேறு யார் ஆட்­சிக்கு வந்­தாலும், வெளி­நா­டு­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பொரு­ளா­தாரக் கேந்­தி­ரங்­களை மீட்க முடி­யாது.

ஓரிரு மாதங்­க­ளுக்கு முன்னர் கூட ராஜபக் ஷவினர் அதனை ஒப்புக் கொண்­டி­ருந்­தனர். இப்­போது வெளி­நா­டு­க­ளிடம் இருந்து அவற்றை மீட்கப் போவ­தாக கூறு­கின்­றனர். இது நடை­முறைச் சாத்­தி­ய­மான விட­ய­மன்று.

இப்­படித் தான், 2015ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த தற்­போ­தைய அர­சாங்கம் அவ­சர அவ­ச­ர­மாக கொழும்பு துறை­முக நகரத் திட்­டத்தை இடை­நி­றுத்தி வைத்­தது, அதனை அடுத்து சீனா­வுடன் முறுகல் நிலை ஏற்­பட்­டது. ஆறு மாதங்கள் நீடித்த போராட்­டத்தை அடுத்து, மீண்டும் அதற்கு அனு­மதி கொடுக்­கப்­பட்­டது.

அது­போலத் தான், சீனா­விடம் இருந்து அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையோ கொழும்பு தெற்கு கொள்­கலன் முனை­யத்­தையோ, பறித்துக் கொள்ளும் துணிச்சல் யாருக்கும் வரப் போவ­தில்லை. அதனைச் செய்தால் பொரு­ளா­தார ரீதி­யாக பாரிய விளை­வு­களை எதிர்­கொள்ள நேரிடும்.

சர்­வ­தேச அளவில் செய்து கொள்­ளப்­படும் உடன்­பா­டுகள் மீறப்­படும் போது, சம்­பந்­தப்­பட்ட நாடுகள் அதனைப் பொறு­மை­யுடன் பார்த்துக் கொண்­டி­ருக்­க­மாட்­டாது, அது சீனா­வாக இருக்­கட்டும், அமெ­ரிக்­கா­வாக இருக்­கட்டும், இந்­தி­யா­வாக இருக்­கட்டும். எந்த நாடு என்­றாலும் அதனை சும்மா விட்டு வைக்­காது.

ஏற்­க­னவே, தற்­போ­தைய அர­சாங்­கத்­துடன் செய்து கொண்­டுள்ள உடன்­பா­டு­களை, அடுத்து வரும் அர­சாங்­கங்கள் மதித்து செயற்­பட வேண்டும் என்று அமெ­ரிக்க தூத­ரகப் பேச்­சாளர் ஒருவர் கூறி­யி­ருந்தார் என்­பதை இங்கு நினை­வு­ப­டுத்­து­வது பொருத்தம்.

இவ்­வா­றான நிலையில், மஹிந்த – கோத்தா தரப்பு மீட்கப் போகும் பொரு­ளா­தார கேந்­திரம் எது என்ற கேள்­விக்கும், அதனை மீட்டு எப்­படி இலா­ப­க­ர­மாக செயற்­ப­டுத்­து­வது என்ற கேள்­விக்கும் சரி­யான பதில் கிடைக்­காது.

சீன சார்­பு­டைய மஹிந்த – கோத்தா தரப்பு, சீனா­விடம் இருந்து அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தையோ, கொழும்பு தெற்கு கொள்­கலன் முனை­யத்­தையோ, துறை­முக நகரத் திட்­டத்­தையோ பிடுங்­கி­யெ­டுக்கப் போவதில்லை.

அது அவர்களுக்கிடையிலான உறவுகளை முறித்து விடும். அது ஆபத்தின் மீது கை வைத்ததற்கும் சமமாக இருக்கும்.

சீனாவிடம் இருந்து பொருளாதாரக் கேந்திரங்களை பறித்துக் கொள்ளாமல், சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் இருந்து பறித்துக் கொள்ள முடியாது, அவ்வாறு செய்தால் அது இரண்டு நாடுகளுக்கும் இடையில் பெரும் பகையை தோற்றுவிக்கும்.

சரி, இதையெல்லாம் தாண்டி இந்த பொருளாதாரக் கேந்திரங்களை பறித்து விட்டுத் தான், இவற்றை இலாபகரமாக எப்படி இயக்குவது என்ற திட்டமாவது இருக்கிறதா என்றால் எதுவும் கிடையாது.

வெறும் அரசியல் ஆதாயத்துக்காக சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளை கிளறி விடுவது தான், இவர்களின் நோக்கமே தவிர, பொருளாதார கேந்திரங்களை மீட்பது என்பது வெற்றுக் கோஷமாகவே இருக்கும்.

அந்நிய தலையீடுகள் என்றால் சிங்களவர்கள் ஆவேசம் கொள்வார்கள். அவர்களை ஆவேசமான நிலைக்குள் கொண்டு செல்லும் வேலை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

Comments (0)
Add Comment