நான் ஏன் தலையிட்டேன்? ரணில் மீண்டும் விளக்கம்!! (கட்டுரை)

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வதா இல்­லையா என்ற இறுதித் தீர்­மா­னத்தை பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களே தீர்­மா­னிக்க வேண்டும். சிவில் சமூ­கத்­தி­ன­ரது கோரிக்கை மற்றும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனின் வேண்­டுகோள் என்­ப­வற்றை கரு த்­தில்­கொண்டே இந்த விட­யத்தில் தலை­யீடு செய்­தி­ருந்தேன் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அல­ரி­மா­ளி­கையில் நேற்று கட்சி அமைப்­பா­ளர்­களை சந்­தித்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க இந்த விட­யங்­களை தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார்.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கும் யோசனை தொடர்பில் கடந்த வியா­ழக்­கி­ழமை விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஆரா­யப்­பட்­டது. ஆனாலும் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கும் விட­யத்­திற்கு பெரும்­பான்­மை­யான அமைச்­சர்கள் கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­தி­ருந்­தனர். இதனால் இந்த யோசனை தோல்வி கண்­டது. இந்த விடயம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது பல்­வேறு தரப்­பி­னரும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தி­வ­ரு­கின்­றனர்.

இந்த விவ­கா­ரத்தை அமைச்­ச­ர­வையில் ஆரா­ய­வேண்டும் என ஜனா­தி­ப­தியே தன்­னிடம் கோரி­ய­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் இதற்கு மறுப்புத் தெரி­விக்கும் வகையில் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி பொது­நி­கழ்­வொன்றில் உரை­யாற்­றி­யி­ருந்தார். இத்­த­கைய முரண்­பா­டான நிலைமை தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கும்­வ­கை­யி­லேயே பிர­தமர் இந்த அறி­விப்­பினை நேற்று விடுத்­துள்ளார்.்

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது

கடந்த வாரம் என்னை சந்­தித்த சிவில் அமைப்­பினர் எமது ஆட்­சியில் நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் மற்றும் முன்­னெ­டுக்க தவ­றிய வேலைத்­திட்­டங்கள் குறித்து என்­னுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தாக கடந்த 2014 ஆம் ஆண்டு யோசனை ஒன்­றினை நிறை­வேற்­றி­யுள்­ள­துடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்க நாம் தொடர்ந்தும் அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்றோம், எமது நிலைப்­பாட்டில் மாற்றம் இல்லை என்ற கார­ணி­களை நான் இந்தச் சந்­திப்பில் எடுத்­து­ரைத்தேன்.

இந்­நி­லையில் 20 ஆம் திருத்­தத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகையில் அமைச்­ச­ரவை ஒத்­து­ழைப்­பு­களை பெற்­றுக்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அவர்கள் என்­னிடம் வலி­யு­றுத்­தினர். அமைச்­ச­ர­வைக்கு முன்­வைக்கும் அமைச்­ச­ரவை பத்­திர நகல் ஒன்­றி­னையும் என்­னிடம் முன்­வைத்­தனர். எனினும் 20 ஆம் திருத்­தத்தை நிறை­வேற்ற வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தில் ஏனைய கட்­சி­களின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு இருக்க வேண்டும், அவர்­களின் ஒத்­து­ழைப்பு இல்­லாது எம்மால் 20 ஆம் திருத்­தத்தை நிறை­வேற்ற முடி­யாது என்ற கார­ணி­க­ளையும் நான் அவர்­க­ளுடம் முன்­வைத்தேன். ஆகவே இந்த விட­யத்தில் ஏனைய கட்­சி­களின் நிலைப்­பாட்டை என்­னிடம் பெற்­றுத்­த­ரு­மாறும் அவர்­க­ளிடம் நான் கேட்­டுக்­கொண்டேன்.

கடந்த 17 ஆம் திகதி பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் சுமந்­தி­ரனை நான் சந்­தித்த போது அவர் சில கார­ணி­களை என்­னிடம் முன்­வைத்தார். குறிப்­பாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கு­வது குறித்து தாம் ஜே.வி.பியுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கவும் 20 ஆம் திருத்­தத்தை கொண்­டு­வர வேண்­டிய கட்­டாயம் உள்­ள­தாக ஜனா­தி­பதி தன்­னிடம் கூறி­ய­தா­கவும் சுமந்­திரன் எம்.பி என்­னிடம் தெரி­வித்தார்.

சுமந்­திரன் கூறிய கார­ணிகள் இன்­று­வரை நிரா­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. எனினும் 20 ஆம் திருத்தம் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்றால் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஒத்­து­ழைப்­புகள் அவ­சியம் என நான் சுமந்­தி­ர­னிடம் எடுத்­து­ரைத்தேன். 19 ஆம் திகதி காலை 8.16 மணிக்கு ஜனா­தி­பதி என்னை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டார். 20 ஆம் திருத்­தத்தை நிறை­வேற்­று­வது குறித்து ஆராய அவ­சர அமைச்­ச­ரவை கூட்­டத்தை கூட்­டவா என அவர் என்­னிடம் கேட்டார்.

இந்­நி­லையில் சிவில் அமைப்­பு­களும் என்­னிடம் இந்த கோரிக்­கையை முன்­வைத்­ததை நானும் அவ­ரிடம் கூறினேன். 20 ஆம் திருத்தம் குறித்து ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்டை ஏற்­க­னவே சுமந்­திரன் எம்.பி என்­னிடம் கூறி­யி­ருந்த கார­ணத்­தினால் அமைச்­ச­ர­வையை கூட்­டு­வது நல்­ல­தென நான் ஜனா­தி­ப­தி­யிடம் கூறினேன். இந்­நி­லையில் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக என்­னிடம் தொலை­பே­சியில் தொடர்­பு­கொள்­ள­வில்லை. 19 ஆம் திகதி பிற்­பகல் அமைச்­ச­ரவை கூட்டம் கூடு­வ­தாக அமைச்­ச­ரவை செய­லாளர் எனது செய­லா­ள­ருக்கு அறி­வித்தல் விடுத்­தி­ருந்தார். இந்­நி­லையில் அமைச்­ச­ர­வைக்கு தேவைப்­ப­டு­மாயின் பயன்­ப­டுத்­திக்­கொள்ள சிவில் அமைப்­பினர் எனக்கு கொடுத்த 20 ஆம் திருத்தம் குறித்து நகலை எனது செய­லாளர் அமைச்­ச­ரவை செய­லா­ள­ருக்கு அனுப்­பி­யி­ருந்தார். நானும் பிற்­பகல் 2 மணி­ய­ளவில் அமைச்­ச­ரவை அமைச்­சர்­களை அழைத்து இது குறித்து அறி­வித்தேன்.

அமைச்­ச­ரவை கூட்­டத்தில் பேச்­சு­வார்த்தை சூடு பிடித்­தது. அனைத்து உறுப்­பி­னர்­களும் அவர்­களின் கருத்­துக்­களை அமைச்­ச­ர­வையில் முன்­வைத்­தனர். அன்­றைய தினம் 20 ஆம் திருத்தம் குறித்து இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. அமைச்­ச­ர­வைக்கு முன்னர் நான் ஜனா­தி­ப­தியை சந்­தித்து இந்த நிலை­மை­களை தெளிவுபடுத்தினேன். எனினும் அமைச்சரவையில் அனுமதி இல்லாத நிலையில் இது அர்த்தமற்றது என்ற காரணியையும் நான் அமைச்சரவையில் கூறினேன்.

அமைச்சரவையில் அமைச்சர்கள் வெவ்வேறு மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தனர். எனினும் இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை கட்சிகளிடம் நாம் ஒப்படைத்துவிட்டோம். அமைச்சரவையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்கு அமைச்சரவையிலேயே தீர்வு எட்ட வேண்டும்.

Comments (0)
Add Comment