அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கு எதி­ரான அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை!! (கட்டுரை)

தமது அர­சியல் வாழ்க்­கையில் தாம் போட்­டி­யா­ள­ராக நினைக்கும் ஒரு­வரை தார்­மீக எல்­லை­க­ளுக்குள் தைரி­ய­மாக எதிர்­கொள்ளும் அர­சி­யல்­வா­தி­களைக் காண்­பது மக்­களின் அவா.

எந்த வழி­யி­லா­வது போட்­டி­யா­ள­ருக்கு பெரும் இழுக்கை ஏற்­ப­டுத்தி, அவரை வில்­ல­னாக சித்­த­ரித்து குறுக்கு வழியில் வெற்றி பெற முனையும் அர­சி­யல்­வா­திகள் மக்­களின் துர­திர்ஷ்டம் எனலாம்.

இது மூன்றாம் உலக நாடு­க­ளாக வர்­ணிக்­கப்­படும் தேசங்­களில் மாத்­தி­ர­மன்றி, உண்­மை­யான ஜன­நா­யகம் பற்றி சுய­தம்­பட்டம் அடித்துக் கொள்ளும் வளர்ச்சி கண்ட நாடு­க­ளிலும் காணக்­கூ­டிய பொது அம்சம்.

இதுவே இன்று அமெ­ரிக்­காவில் தலை­தூக்­கி­யுள்ள பிரச்­சினை. ஜனா­தி­ப­திக்கு எதி­ரான அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை. அதா­வது impeachment.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்­சியின் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கக் காத்­தி­ருக்கும் டொனால்ட் ட்ரம்­பிற்கு பெரும் சவா­லாகத் திக­ழக்­கூ­டி­யவர், ஜோ பைடன். இவர் ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்­தவர். பராக் ஒபா­மாவின் ஆட்சி காலத்தில் துணை ஜனா­தி­ப­தி­யாகக் கட­மை­யாற்­றி­யவர். தவிர, செல்­வாக்கு மிக்க அர­சி­யல்­வாதி.

ஜோ பைடனின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் விளை­வித்து, அவரை சிறையில் அடைத்து விடும் நோக்­கத்­துடன் டொனால்ட் ட்ரம்ப் மேற்­கொண்­ட­தாகக் கூறப்­படும் முயற்சி, பெரும் அர­சியல் சர்ச்­சை­யாக மாறி­யி­ருக்­கி­றது. அது அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் பத­விக்கே ஆப்பு வைத்து விடும் அள­விற்குத் தீவிரம் பெற்­றி­ருக்­கி­றது.

டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜூலை மாதம் யுக்­ரே­னிய ஜனா­தி­ப­தி­யுடன் நடத்­திய தொலை­பேசி உரை­யாடல் பிரச்­சி­னையின் மையம். இதன் அடிப்­ப­டையில், அவ­ருக்கு எதி­ராக அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை தாக்கல் செய்யும் முயற்­சிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ஜூலை 25ஆம் திகதி வொலொ­திமிர் ஸெலென்ஸ்க்­கி­யுடன் அமெ­ரிக்க ஜனா­தி­பதி 30 நிமி­டங்கள் வரை பேசி­யுள்ளார். இந்த உரை­யா­டலில் ட்ரம்ப் விடுத்த கோரிக்கை பற்றி அமெ­ரிக்க புல­னாய்வு சமூ­கத்தைச் சேர்ந்த ஆளொ­ருவர் அம்­ப­லப்­ப­டுத்­தி­யுள்ளார்.

மேற்­கு­லகில் whistle–-blower என்ற பதம் பிர­ப­ல­மா­னது. இதற்கு சட்­ட­வி­ரோ­த­மான அல்­லது தார்­மீ­கத்­திற்கு முர­ணான செயல்­களை அம்­ப­லப்­ப­டுத்தும் ஆளொ­ருவர் என்று பொருள் கொள்­ளலாம்.

ஜோ பைடனை கம்­பிக்குப் பின்னால் தள்ள யுக்­ரே­னிய அர­சாங்கம் உத­வினால், தம்மால் யுக்­ரே­னுக்கு பிர­தி­யு­ப­காரம் செய்ய முடியும் என ட்ரம்ப் கூறி­ய­தாக, இந்தக் கதையில் வரும் whistle-–blower முறைப்­பாடு செய்­தி­ருக்­கிறார்.

டொனால்ட் ட்ரம்ப் ஏன் யுக்­ரே­னிய ஜனா­தி­ப­தியின் உத­வியை நாட வேண்டும்?

ஜோ பைடனின் மகன் தான் காரணம். மக­னுக்கு 49 வயது. அவ­ரது பெயர் ரொபர்ட் ஹன்டர் பைடன் என்­ப­தாகும்.

இந்த ரொபர்ட் யுக்­ரே­னிய எரி­பொருள் கம்­ப­னி­யொன்றில் உயர் பதவி வகித்­தவர். அதன் பெயர் புரிஸ்மா என்­ப­தாகும். கம்­ப­னியின் உரி­மை­யாளர் பற்றி கடந்த காலத்தில் யுக்­ரே­னிய சட்­டமா அதிபர் விக்டர் ஷோக்கின் விசா­ரணை செய்தார். ஆனால், ஷோக்கின் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் பதவி நீக்கம் செய்­யப்­பட்டார்.

இந்தப் பதவி நீக்­கத்தில் ஜோ பைட­னுக்குத் தொடர்பு உள்­ளதா என்­பதை யுக்­ரே­னிய ஜனா­தி­பதி விசா­ரிக்க வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக் கொண்­ட­தாக குறித்த whistle-blower குற்­றஞ்­சாட்­டு­கிறார்.

இதில் ஜோ பைடனைத் தொடர்­பு­ப­டுத்தும் பட்­சத்தில், உக்­ரே­னுக்கு 400 மில்­லியன் டொலர் இரா­ணுவ உத­வியை வழங்க முடி­யு­மென அமெ­ரிக்க ஜனா­தி­பதி கூறி­ய­தாக அவர் சாடு­கிறார்.

2016ஆம் ஆண்டில், துணை ஜனா­தி­ப­தி­யாக கட­மை­யாற்­றிய ஜோ பைடன், ஷோக்கின் பற்றி பேசி­யி­ருந்­தது உண்­மையே. இந்த மனிதர் ஊழல் விவ­கா­ரங்­களைக் கண்டு கொள்­வ­தில்லை என்­பது பைடனின் குற்­றச்­சாட்­டாக இருந்­தது. இவரைப் பதவி விலக்­காத பட்­சத்தில், யுக்­ரே­னுக்­கான ஒரு பில்­லியன் டொலர் உத­வியை நிறுத்தப் போவ­தா­கவும் பைடன் எச்­ச­ரித்­தி­ருந்தார்.

ஆனால், ரொபர்ட் வேலை செய்த புரிஸ்மா கம்­ப­னியின் தகிடு தத்­தங்கள் வெளியில் வரக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே அது பற்றி விசா­ரித்த ஷொக்­கினைத் தூக்­கி­யெ­றி­வ­தற்கு பைடன் முனைந்­த­தாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்­டு­கிறார்.

இதில் முக்­கி­ய­மான விஷயம் யாதெனில், பைடன் அல்­லது ரொபர்ட் மீது குற்றம் சுமத்த அவ­ருக்கு எது­வித ஆதா­ரங்­களும் கிடை­யாது என்­பது தான்.

தொலை­பேசி சம்­பா­ஷணை விவ­காரம் அம்­ப­ல­மா­னதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் பேசி­யி­ருக்­கிறார். தம்மீது விரல் நீட்­டு­வதைத் தவிர்த்து, பைட­னுக்கும் யுக்­ரே­னுக்கும் இடையில் இருந்த தொடர்­பு­களை ஊட­கங்கள் விசா­ரிக்க வேண்டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

ட்ரம்பின் கருத்து தர்க்க ரீதி­யா­னது அல்ல என்று ஜன­நா­யகக் கட்­சியின் அங்­கத்­த­வர்கள் சாடு­கி­றார்கள். அவர் தமது சுய­நலம் கருதி, தமது பகை­யா­ளியை இழி­வு­ப­டுத்­து­வ­தற்­காக வெளி­நாட்டின் உத­வியைப் பெற்­றி­ருக்­கிறார், இது அப்­பட்­ட­மான அதி­கார துஷ்­பி­ர­யோகம் என ஜன­நா­யகக் கட்­சியின் அங்­கத்­த­வர்கள் கூறு­கி­றார்கள்.

இந்த whistle- blower யார் என்ற விட­யமோ, அவ­ரது முறைப்­பாட்டின் முழு வடி­வமோ பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­திலும், இது தொடர்­பான விட­யங்­களை வெள்ளை மாளிகை அமெ­ரிக்க மக்­க­ள­வைக்குத் தெரி­யப்­ப­டுத்­தாமல் மறைக்க முனைந்­த­தாக வொஷிங்டன் போஸ்ட் முத­லான பத்­தி­ரி­கைகள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், பல படி­மு­றை­களைத் தாண்­டியே ஜனா­தி­ப­தி­யொ­ரு­வ­ருக்கு எதி­ராக அர­சியல் குற்­ற­வியல் பிரே­ர­ணையைத் தாக்கல் செய்­யலாம்.

தேசத்­து­ரோகம், இலஞ்சம் உள்­ளிட்ட பாரிய மூன்று குற்­றங்­களில் ஒன்றை ஜனா­தி­பதி புரிந்­தி­ருக்­கிறார் என நிரூ­பிக்கும் பட்­சத்தில், அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை மூலம் அவரைப் பத­வியில் இருந்து நீக்க முடியும்.

இதில் முத­லா­வது படி­மு­றை­யாக விசா­ரணை இடம்­பெறும். இதன்­போது போதிய தக­வல்­களும், ஆதா­ரங்­களும் திரட்­டப்­படும். அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பை நடத்த தேவை­யான சான்­றுகள் உள்­ளன என்­பதை உறுதி செய்­வது அவ­சியம்.

இதனைத் தொடர்ந்து, அமெ­ரிக்­காவின் பிர­தி­நி­திகள் சபையில் வாக்­கெ­டுப்பை நடத்த வேண்டும். இதில் 435 அங்­கத்­த­வர்கள் உள்­ளனர். குறைந்­த­பட்சம் 218 பேர் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்தால், பிர­தி­நி­திகள் சபையில் பிரே­ரணை நிறை­வே­றி­ய­தாகக் கரு­தப்­படும்.

அதனைத் தொடர்ந்து, அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை செனட் சபையில் வாக்­கெ­டுப்­பிற்கு விடப்­பட வேண்டும். அங்கு பிரே­ரணை நிறை­வே­று­வ­தற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை வாக்­குகள் அவ­சியம்.

அமெ­ரிக்­காவின் கடந்த கால வர­லாற்றை ஆராய்ந்தால், எந்­த­வொரு அர­சியல் குற்­ற­வியல் பிரே­ர­ணையும் செனட் சபையைத் தாண்டிச் சென்­ற­தில்லை.

1868ஆம் ஆண்டு அன்ட்ரூ ஜொன்­ச­னுக்கும், 1998ஆம் ஆண்டு பில் கிளின்­ட­னுக்கும் எதி­ராக அர­சியல் குற்­ற­வியல் பிரே­ர­ணைகள் கொண்டு வரப்­பட்­டன. இரு பிரே­ர­ணை­களும் பிர­தி­நி­திகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டன. எனினும், செனட் சபையில் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

வோட்டர் கேட் ஊழல் விவ­கா­ரத்தில், ஜனா­தி­பதி ரொபர்ட் நிக்­ஸ­னுக்கு எதி­ராக அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­டது. இந்த நடை­முறை பூர்த்­தி­யா­வ­தற்கு முன்­ன­தாக அவர் பதவி வில­கி­யி­ருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப்பைப் பொறுத்­த­வ­ரையில், அர­சியல் குற்­ற­வியல் பிரே­ர­ணையில் தோல்வி காணக்­கூ­டிய வாய்ப்­புக்கள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன.

சம­கால பிர­தி­நி­திகள் சபையில், ஜன­நா­யகக் கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டிய 235 பேரும், குடி­ய­ரசுக் கட்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டிய 100 பேரும் உள்­ளனர். இங்கு குற்­ற­வியல் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டலாம்.

ஆனால், செனட் சபையில் பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டு­வது கடினம். ஏனெனில், செனட் சபையில் 53இற்கு 47 என்ற விகி­தத்தில் குடி­ய­ரசுக் கட்­சிக்கே பெரும்­பான்மைப் பலம் உள்­ளது.

செனட் சபையில், டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி என முறையாக நிரூபித்து அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இருபது பேராவது பிரேரணைக்கு சார்பாக வாக்களிப்பது அவசியம். அவ்வாறு நடக்குமா என்பது கேள்விக்குறியே.

இதன் அடிப்படையில் ஆராய்ந்தால், ட்ரம்பிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை என்பது ஒரு குற்றத்தை நிரூபிக்கும் நடைமுறை என்பதைத் தாண்டி, ஒரு அரசியல் நடைமுறை என்ற தீர்மானத்திற்கு வர முடியும்.

அவர் குற்றவாளி என்பதை நிரூபிப்பது கடினமான விடயமாக இருக்கையில், அவர் தார்மீகத்தை மீறியிருப்பதை எளிதாக நிரூபித்து விடலாம்.

பின்னையதை நிரூபித்தால் போதும். மீதியை அடுத்த தேர்தலில் வாக்காளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

ட்ரம்ப் யாரென்பதை அவரது தார்மீக எல்லைகள் எவை என்பதை உலக நாடுகள் அறிந்தே வைத்துள்ளன.

Comments (0)
Add Comment