குட்­டையைக் குழப்பும் விக்­னேஸ்­வரன்!! (கட்டுரை)

வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் இரண்டு வேட்­பா­ளர்கள் தொடர்­பாக, வடக்கின் முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் இரண்டு கேள்வி- – பதில் அறிக்­கை­களை வெளி­யிட்டு, தமிழ் மக்கள் மத்­தியில் தனது குழப்­ப­மான மன­நி­லையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அவ­ரது முத­லா­வது அறிக்கை, சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிப்­பது போன்ற தொனியில் இருந்­தது. இரண்­டா­வது அறிக்கை அதனைச் சமன் செய்­வது போல, கோத்­தா­பய ராஜபக் ஷ வென்றால் தமி­ழர்­க­ளுக்கு பாதிப்­பில்லை என்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

இந்த அறிக்­கையின் மூலம் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கூற வரு­கி­றாரா என்ற சந்­தேகம் தமிழ் மக்­களில் பல­ருக்கு ஏற்­பட்­டி­ருப்­பது உண்மை.

ஆனால் அவ­ரது அறிக்­கையைக் கவ­ன­மாகப் படித்துப் பார்த்தால், ஒரு பக்கம் கோத்­தா­பய ராஜபக் ஷவைத் தூக்கிப் பிடித்­தாலும், இன்­னொரு பக்கம் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தா­கவும் இருக்­கி­றது.

தமிழ் மக்கள் எடுக்­கப்­போகும் முடிவு கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்றி- தோல்­வியைத் தீர்­மா­னிக்கும் ஒன்­றாக இருக்கும் என்­பதால், தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு ஒன்றை முன்­வைக்க வேண்டும் என்று சஜித்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகை­யி­லேயே அவ­ரது இரண்­டா­வது அறிக்கை அமைந்­தி­ருந்­தது.

ஆனால் அந்த அறிக்கை, சஜித்­துக்கு அழுத்தம் கொடுப்­ப­தற்குப் பதி­லாக, கோத்­தா­பய ராஜபக் ஷவின் பக்கம் தமிழ் மக்­களைத் திருப்பி விடும் வகை­யி­லான தொனியை உரு­வாக்கி விட்­டது.

சில மாதங்­க­ளுக்கு முன்னர், கோத்­தா­ப­ய­வுக்கு எந்தத் தன்­மானத் தமி­ழனும் வாக்­க­ளிக்­க­மாட்டான் என்று, தானே கூறி­ய­தையும் அவர் இந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தாலும், கோத்­தா­பய ராஜபக் ஷவின் வருகை தொடர்­பாக அச்சம் கொள்ள வேண்­டி­ய­தில்லை என்ற கருத்தை தமி­ழர்­களின் மனதில் விதைப்­ப­தற்கு அவர் முற்­பட்­டி­ருப்­பது வேடிக்கை.

இது சி.வி.விக்­னேஸ்­வரன் இரட்டை நிலைப்­பாட்டில் இருக்­கி­றாரோ என்ற சந்­தே­கங்­களை- அவரை ஆத­ரிக்க முனைந்த பல­ரி­டமும் ஏற்­படுத்தி­யி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே பல சர்ச்­சை­களில் சிக்­கி­யி­ருக்கும் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கு, கோத்­தா­பய ராஜபக் ஷ தொடர்­பாக முன்­வைத்­துள்ள கருத்து இன்­னமும் அழுத்­தங்­களை அதி­க­ரிக்கும்.

அது­சார்ந்த விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­பது இந்தப் பத்­தியின் நோக்­கல்ல.

கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்றி பெற்றால் தமி­ழர்கள் அச்­சப்­பட வேண்­டி­ய­தில்லை, அது அவர்­க­ளுக்கு நல்­ல­தா­கவே அமையும் என்று அவர் முன்­வைத்­தி­ருக்­கின்ற வாதமும், அதற்­காக பூகோள அர­சி­யலை முன்­வைத்து அவர் கூற­வந்­தி­ருக்­கின்ற கார­ண­முமே இங்கு ஆரா­யப்­பட வேண்­டி­யவை.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால், மீண்டும் பழைய நிலை­மைக்கு செல்ல நேரிடும் என்று தமி­ழர்கள் அஞ்­சு­வதில் அர்த்­த­மில்லை, அவ்­வாறு நடக்­காது என்­பது போல அவர் ஒரு உறு­தி­மொ­ழியைக் கொடுக்க முனைந்­தி­ருக்­கிறார்.

அதற்­காக சி.வி.விக்­னேஸ்­வரன் முன்­வைத்­தி­ருக்­கின்ற ஒரே காரணம், சர்­வ­தேச சமூகம் தான்.

சர்­வ­தேச சமூகம் கோத்­தா­பய ராஜபக் ஷவை கட்­டிப்­போட்டு வைக்கும் என்­பதே, விக்­னேஸ்­வ­ரனின் கருத்­தாக உள்­ளது.

இது முற்­றிலும் சரி­யா­னதா –- அதற்கு வாய்ப்­புகள் உள்­ளனவா? இது முத­லா­வது கேள்வி.

தற்­போ­தைய நிலையில் கோத்­தா­பய ராஜபக் ஷ சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்­டிய நிலையில் உள்ளார். இதை இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் விரும்­பாது, அதனால் இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் தமிழ் மக்கள் சார்­பாக நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வார்கள். அது எமக்கு நன்மை தரும் என்­பது விக்­னேஸ்­வ­ரனின் கருத்­தாக உள்­ளது.

கோத்­தா­பய ராஜபக் ஷ சீனாவைச் சார்ந்து செயற்­பட்டால், இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் தமி­ழர்­களின் பக்கம் திரும்பும் என்­பது சரி­யா­னதா? இது இரண்­டா­வது கேள்வி.

அமெ­ரிக்­கா­வுடன் “கள்ள உறவு” கோத்­தா­ப­ய­வுக்கு இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. அப்­படி இருந்­தாலும் கூட அமெ­ரிக்கா, கோத்­தா­ப­யவை வழி நடத்­தவே பார்க்கும். அது தமி­ழர்­க­ளுக்கு சார்­பா­கவே இருக்கும். ஏனென்றால் புலம்­பெயர் தமி­ழரின் செல்­வாக்கு அமெ­ரிக்­காவில் இருப்­பது கண்­கூடு. இதுவும் விக்­னேஸ்­வ­ரனின் கூற்று.

தமி­ழர்­க­ளுக்கு சார்­பாக அமெ­ரிக்கா செயற்­படும் அள­வுக்கு அங்கு செல்­வாக்குச் செலுத்­தக்­கூ­டிய நிலையில் தமி­ழர்கள் இருக்­கின்­ற­னரா? இது மூன்­றா­வது கேள்வி.

இப்­போது முத­லா­வது கேள்­வியில் இருந்து தொடங்­கலாம்.

சர்­வ­தே­சத்தின் கவனம் குவிந்­தி­ருப்­பதால், கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னரைப் போல செயற்­ப­ட­மாட்டார், தமிழ் மக்கள் அவ­ரை­யிட்டு அஞ்ச வேண்­டி­ய­தில்லை என்று விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார். அது ஓர­ள­வுக்கு உண்­மை­யாக இருக்­கலாம். ஆனால் முழு­மை­யா­ன­தாக இருக்க முடி­யாது.

2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த பின்னர், ராஜபக் ஷ சகோ­த­ரர்கள் அனை­வரும், தமது ஆட்­சிக்­கா­லத்தில் பல தவ­றுகள் நிகழ்ந்­தன என்று ஒப்­புக்­கொண்­டி­ருந்­தார்கள். அதனை திருத்திக் கொள்வோம் என்றும் உறு­தி­ய­ளித்­தார்கள்.

ஆனால், கடந்த ஒக்­டோபர் மாதம், நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்புக் காலத்தில் நடந்த சம்­ப­வங்கள் எல்­லாமே, அவர்கள் தவ­று­களில் இருந்து பாடம் கற்றுக் கொண்­டுள்­ளனர் என்றோ, தவ­று­களைத் திருத்திக் கொண்­டுள்­ளனர் என்றோ நம்­பு­கின்ற நிலையை ஏற்­ப­டுத்­த­வில்லை.

52 நாள் ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற பல சம்­ப­வங்கள், மஹிந்த ராஜபக் ஷவின் 2005 – 2014 ஆட்­சிக்­கால ஞாப­கங்­க­ளையே கொடுத்­தி­ருந்­தன

எனவே, கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னரைப் போல இருக்­கா­வி­டினும், அவ­ரை­யிட்டு தமிழ் மக்கள் முழு­மை­யாக அச்சம் கொள்ள வேண்­டி­யி­ராத நிலை இருக்­கி­றது என்று கூற­மு­டி­யாது.

கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் நல்ல தொடர்­புகள், உற­வு­களை வைத்துக் கொண்­டுள்­ள­வர்­களின் கருத்தே அவ்­வா­றா­ன­தாகத் தான் உள்­ளது.

சர்­வ­தேச சமூ­கத்­துடன் ஒத்­தி­சைந்து செல்­வ­தற்கு ராஜபக் ஷவினர் முற்­ப­டு­வார்கள் என்­றாலும், சர்­வ­தேச சமூ­கத்தின் வழி­ந­டத்­தலை அவர்கள் ஏற்று நடப்­பார்கள் என்று கரு­து­வது முட்­டாள்­தனம்.

மனித உரி­மைகள் விவ­கா­ரத்தில் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அவர்கள் அஞ்சக் கூடும், முன்­னை­யதைப் போன்ற நிலைக்குள் வைத்­தி­ருப்­பதை தவிர்க்க நினைக்­கலாம்.

ஆனால், தற்­போ­துள்­ளதைப் போன்ற அல்­லது இதனை விட மேம்­பட்­ட­தொரு ஜன­நா­யக வெளியை தமிழ் மக்கள் மாத்­தி­ர­மன்றி யாருமே எதிர்­பார்க்க முடி­யாது.

ராஜபக் ஷ ஆட்­சிக்­காலம் என்­பது தடி­யெ­டுத்­தவன் எல்லாம் தண்­டல்­காரன் என்­ப­தா­கவே இருந்­தது.

சர்­வ­தேச சமூ­கமும் கூட இலங்­கையை உற்று நோக்­கி­னாலும், அதனைக் கட்­டுப்­ப­டுத்தக் கூடிய நிலையில் இருக்­குமா என்­பது சந்­தேகம் தான்.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை சர்­வ­தே­சத்­தினால் கட்­டுப்­ப­டுத்தக் கூடிய நிலை இருக்­க­வில்லை.

இனி, இரண்­டா­வது கேள்­விக்கு வரலாம்.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யானால், அவர் சீனாவைச் சார்ந்தே செயற்­ப­டுவார், அதனை விரும்­பாத இந்­தி­யாவும், அமெ­ரிக்­காவும் தமி­ழர்­களைச் சார்ந்து முடி­வு­களை எடுக்கும் என்­பது விக்­னேஸ்­வ­ரனின் கருத்து.

தாம் ஆட்­சிக்கு வந்தால், அணி­சேரா கொள்கை கடைப்­பி­டிக்­கப்­படும் என்றும், பலம்­வாய்ந்த சக்­தி­க­ளுடன் நல்ல உறவு பேணப்­படும் என்றும் கோத்­தா­பய ராஜபக் ஷ. கூறி­யி­ருக்­கிறார்.

அத­னையும் மீறி அவர் சீனாவின் பக்கம் சாய்வார் என்­பதே பொது­வான கருத்து.

அவ்­வா­றான சூழலில் அமெ­ரிக்­காவும் இந்­தி­யாவும், தமி­ழர்­களை கைக்குள் போட்டு ஆட்­டத்தை ஆடுமா அல்­லது கொழும்பை கைக்குள் போட முனை­யுமா என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

வரும் தேர்­தலில், யார் ஆட்­சிக்கு வந்­தாலும் அவர்­க­ளுடன் உற­வு­களை பேண அமெ­ரிக்கா முயற்­சிக்கும் என்று அமெ­ரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் கூறி­யி­ருக்­கிறார்.

ஆட்­சிக்கு வரும் தரப்பு யாராக இருந்­தாலும், அவர்­களை எவ்­வாறு கையா­ளலாம் என்­பது தொடர்­பான ஒரு திட்­டத்தை வகுத்து செயற்­ப­டுவோம் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இது கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்­தாலும், அவ­ருடன் முரண்­பட அமெ­ரிக்கா விரும்­ப­வில்லை என்­ப­தற்கு முதல் உதா­ரணம்.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், இலங்­கையில் தனது நலன்­களை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­வதை, அதற்கு பாதிப்பு ஏற்­ப­டாமல் இருப்­பதை யார் உறு­திப்­ப­டுத்­தி­னாலும் அவர்­களை அமெ­ரிக்கா தொந்­த­ர­வுக்கு உட்­ப­டுத்­தாது. இது முதல் விடயம்.

அடுத்து, இந்­தியா தொடர்­பாக அண்­மையில் சி.வி.விக்­னேஸ்­வ­ரனின் பங்­கா­ளி­களில் ஒரு­வ­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் ஒரு, செவ்­வியில் கூறி­யுள்ள விட­யத்தைப் பார்க்­கலாம்.

“ரணில் – மைத்­திரி ஆட்சிக் காலத்தில் இந்­தியா மகிழ்ச்­சி­ய­டையும் வகையில் இலங்­கைக்கும் சீனா­விற்கும் இடை­யி­லான உறவு காணப்­ப­ட­வில்லை. யார் ஆட்­சிக்கு வந்­தாலும் சீனாவின் செயற்­பாட்டை முழு­மை­யாக அகற்­றி­விட முடி­யாது என்­பது கடந்த நான்­கரை ஆண்­டு­களில் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, இலங்­கையை கையாள்­வது தொடர்­பான அணு­கு­மு­றை­க­ளிலும் இந்­தியா மாற்று வழி­வ­கை­களை ஆராயும் என்றே நினைக்­கின்றேன்.

எனவே ஜனா­தி­பதி த்தேர்­தலில் கடந்த முறை போன்று இந்­தி­யாவின் நிலைப்­பாடு ம|ஹிந்த தரப்­பிற்கு பாத­க­மாக இருக்­காது” என்று சிவ­சக்தி ஆனந்தன் தொலைக்­காட்சி செவ்வி ஒன்றில் தெரி­வித்­துள்ளார்.

இதன் அர்த்தம், கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்தால், அவ­ருடன் உற­வு­களைப் பேணு­வ­தற்கு இந்­தியா மாற்று வழி­களில் முயற்­சிக்கும் என்­ப­தா­கவே உள்­ளது.

அதை­விட, சி.வி. விக்­னேஸ்­வ­ரனை வைத்து பூகோள அர­சியல் செய்ய வேண்­டிய தேவை இந்­தி­யா­விற்கு இல்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இது விக்­னேஸ்­வ­ரனின் கருத்­துக்கு முற்­றிலும் எதிர்­மா­றா­னது.

விக்­னேஸ்­வ­ரனை வைத்து பூகோள அர­சியல் நடத்த வேண்­டிய தேவை இந்­தி­யா­வுக்கு இல்லை என்ற கருத்து, தமிழர் தரப்பை வைத்து அர­சியல் நடத்த வேண்­டிய தேவை இல்லை என்­ப­தற்கும் பொருத்­தப்­பா­டா­னது தான்.

அவ்­வா­றாயின், விக்­னேஸ்­வரன் எதிர்­பார்ப்­பது போல, கோத்­தாவின் கொட்­டத்தை அடக்க இந்­தி­யாவோ அமெ­ரிக்­காவோ வரப் போவ­தில்லை.

அவை அவ­ருடன் ஏதோ ஒரு வழியில் உறவை உறு­திப்­ப­டுத்திக் கொள்ளும். அது தமி­ழரை மீண்டும் நிர்க்­கதி நிலைக்குத் தள்­ளுமே தவிர, சாத­க­மாக அமையும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.

இனி மூன்­றா­வது கேள்­விக்கு வரலாம்.

அமெ­ரிக்­கா­வுடன் “கள்ள உறவு” கோத்­தா­ப­ய­வுக்கு இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. அப்­படி இருந்­தாலும் அமெ­ரிக்கா, கோத்­தா­ப­யவை வழி நடத்­தவே பார்க்கும். அது தமி­ழர்­க­ளுக்கு சார்­பா­கவே இருக்கும். ஏனென்றால் புலம்­பெயர் தமி­ழரின் செல்­வாக்கு அமெ­ரிக்­காவில் இருக்­கி­றது என்று நம்­ப­வைக்க முனை­கிறார் விக்­னேஸ்­வரன்.

தாங்கள் யாரையும் ஆத­ரிக்­க­வில்லை, யாரு­டனும் கள்ள உறவைக் கொண்­டி­ருக்­க­வில்லை என்று அமெ­ரிக்கா கூறு­கி­றது.

ஏன் கோத்­தா­பய ராஜபக் ஷ கூட, கள்ள உறவு இருப்­ப­தாக கூற­மாட்டார். அவ்­வாறு கூறினால் அமெ­ரிக்க எதிர்ப்பு உணர்வைத் தூண்டி ஆட்­சியைக் கைப்­பற்றும் அவ­ரது வேடம் கலைந்து விடும்.

அமெ­ரிக்­காவின் வழிநடத்தலின் படி கோத்தாபய ராஜபக் ஷ செயற்படுவார் என்பது மிகையான எதிர்பார்ப்பு.

அமெரிக்காவின் நிலைப்பாடுகளுடன் கோத்தாபய ராஜபக் ஷ இணங்கிச் செயற்பட்டால் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், அதற்காக அமெரிக்கா தமிழர்களின் பக்கம் நிற்கும் என்றோ, புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தினால் அவ்வாறு செயற்படும் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

அமெரிக்காவில் புலம்பெயர் தமிழர்கள் குறைவு. அவர்கள் அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையிலும் இல்லை.

அவ்வாறு அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்திருந்தால், ஏன் இதுவரை அவர்களால் அமெரிக்காவின் மூலம், சாதிக்க முடியாமல் போனது ?

தமிழர்கள் முதலில் தமது உண்மையான பலத்தை உணர்ந்து கொள்வதே முக்கியம். தமது பலம் குறித்து மிகையான நம்பிக்கையை கொண்டிருந்தால், எல்லா இடங்களிலும் முட்டிக் கொண்டு மூக்குடைபடும் நிலையே ஏற்படும்.

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி்.விக்னேஸ்வரன் அவ்வாறான ஒரு நிலைக்குள் தான் தமிழர்களை தள்ள முனைவதாக தெரிகிறது.

Comments (0)
Add Comment