புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு பொன்னன் கிணறு, புங்குடுதீவு ஊரதீவுப் பொதுக் கிணறு ஆகியவற்றினைத் தொடர்ந்து, இன்றையதினம் புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி பொதுக்கிணறு” மற்றும் புங்குடுதீவு நான்காம் வட்டார நுனுக்கல் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஆகியவற்றை, புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் வேலைகளும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்படி “கரந்தெளி பொதுக்கிணற்றை” மீளபுனரமைத்து புதிதாகக் கட்டித் தருமாறும், மூன்று வட்டார மக்களும் பாவிக்கக்கூடிய இக்கிணறானது இடிந்து போய்க் காணப்படுவதுடன், அந்த கிணற்றுப் பகுதி, மிகவும் புதர்கள் அடங்கி காட்டுப் பிரதேசம் போன்று காணப்படுவதாகவும், ஆகவே இதனை புனரமைத்து புதிதாகக் கட்டித் தந்தால் இப்பிரதேச மக்கள் நன்மை அடைவார்களென” சுமார் நாற்பது குடும்பத்தினர் எழுத்து மூலம் (இரு கடிதங்கள் எமக்கு நேரடியாகவும், அங்குள்ள எமது செயற்பாட்டாளர் திருமதி.த.சுலோசனாம்பிகை மூலமும்) முன்வைத்த கோரிக்கையை ஏற்று, இந்நடவடிக்கை இன்றையதினம் ஆரம்பமாகி உள்ளது.

அதேபோல் புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுனுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு விட்டதாகவும்..,

இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் உள்ள போதிலும், அக்காணியின் உரிமையாளர்கள், பொதுமக்களின் தேவை கருதி எல்லை விட்டு தரப்பட்டு உள்ளதாகவும், இக்கிணறை “சுவிஸ் ஒன்றியம்” மீள புதிதாக கட்டி தரும்படியும், அதனை செய்தால் இக்கிணற்றை அண்டி உள்ள சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரயோசனப்படும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் திரு.வசந்தகுமார் ஊடாக, அப்பிரதேச மக்கள் கேட்டு இருந்தனர்.

இதுகுறித்து கடந்தவாரம் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” நிர்வாக சபையானது, தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில் ஒன்றுகூடி, “மழை காலத்துக்கு முன்பாக, முடிந்தவரை கிணறுகளை புனரமைத்து புதிதாகக் கட்டி கொடுப்பதென” எடுத்த தீர்மானத்துக்கு அமைய இவ்வேலைகள் இன்றையதினம் ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முன்பு கிணறாக பாவித்துள்ள போதிலும், இப்போது “குப்பைக் குழியாக” உள்ளதினால், “புனரமைத்தும், தண்ணீர் வராவிடில் என்ன செய்வதென?” ஒன்றியத் தலைவர் திரு.ரஞ்சன் அவர்கள் சந்தேகத்தை முன்வைத்த போதிலும், “முயற்சித்துப் பார்ப்போம், வெற்றி (தண்ணீர்) கிடைக்குமென நம்புவோம்” என அனைவரும் இறுதியாக முடிவெடுத்ததுக்கு அமைய இன்றையதினம் புங்குடுதீவு நுணுக்கல் கிணறு புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கும் வேலைகள் ஆரம்பமாகி சில மணித்தியாலங்களில் அக்கிணற்றில் தண்ணீர் பெருமளவில் ஊற்றெடுப்பதும் சந்தோசத்துக்குரிய விடயம்.

அதேபோல் “புங்குடுதீவுக் கறந்தெளிக் கிணறானது” மிகவும் புதர்கள் அடங்கிய காட்டுப் பகுதி போல் உள்ளதினாலும், இக்கிணறு புதிதாக அமைக்கப்படும் “குடியிருப்புத் திட்டத்துக்கு” முன்பாகக் காணப்படுவதினாலும், முதலில் அப்பகுதி துப்பரவாக்கியே, கிணறை புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்க வேண்டுமெனும் நிலைப்பாட்டில், இன்று அக்கிணற்றின் பிரதேசம் இயந்திரம் மூலம் துப்பரவாக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது.

மேற்படி நிகழ்வுகளில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதிவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான திருமதி.த.சுலோசனாம்பிகை, புங்குடுதீவில் இப்பிரதேசத்து மக்களினால் வேலணை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட, பிரதேச சபை உறுப்பினரான திரு.வசந்தகுமார், மற்றும் அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

(புங்குடுதீவில் உள்ள கறந்தெளிக் கிணறு, மற்றும் நுணுக்கல் கிணறுகளின் தற்போதைய நிலை குறித்த படங்களும் வீடியோக்களும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
25.08.2018

புங்குடுதீவு “கரந்தெளிக் கிணற்றின்” அகோர நிலை.. 25.08.2018

புங்குடுதீவு நுணுக்கல் பொதுக்கிணறு புனரமைப்பு -2018

*** ஏற்கனவே புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் கடந்த இரு மாதத்துக்குள் செய்து முடிக்கப்பட்ட “புங்குடுதீவு பொன்னன் கிணறு”, & “புங்.ஊரதீவு பொதுக் கிணறு” ஆகியவற்றின் வீடியோக்களும் கீழே இணைக்கப் பட்டுள்ளது.

புங்குடுதீவு “ஊரதீவுப் பொதுக்கிணறு” மீள்புனரமைத்து, புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்டது -2018

புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்டது -2018

Comments (0)
Add Comment