“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” உதவி வழங்கல்.. -பகுதி-01 (படங்கள் & வீடியோ)

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், நினைவுதினத்தில் உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-01

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் பத்தொன்பதாவது நினைவுதினம் “புளொட்” மற்றும் அதன் அரசியல் பிரிவான “டிபிஎல்எப்” தோழர்கள், ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகின்றது…

மேற்படி தோழர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களையும், மற்றும் “விடுதலைப் போராட்டத்தில் மரணித்த” புளொட் செயலதிபர் உட்பட மரணித்த புளொட் தோழர்கள், ஏனைய அனைத்து இயக்கத் தலைவர்கள் & அனைத்துப் போராளிகள், பொதுமக்கள் ஆகியோரின் நினைவாக, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) வெளிநாட்டுக் கிளைத் தோழர்கள் சிலரின் நிதிப் பங்களிப்பில், “அதிரடி” இணையத்துக்கு ஊடாக, இலங்கையில் “வாழ்வாதார உதவிகள்” மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக இன்றையதினம் மறைந்த தோழர் மாணிக்க தாசன் மற்றும் தோழர்கள் நினைவாக “அதிரடி” இணையதளத்தின் சார்பில், வெளிநாட்டு புளொட் தோழர்கள் சிலரின் நிதி அணுசரனையில் நெடுங்கேணி ஒலுமடுவில் பெற்றோரை இழந்த மற்றும் வறிய நிலையில் உள்ள 32 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், கிராம அபிவிருத்தி சங்க உப தலைவர் மகேந்திரன், கமக்கார அமைப்பு மற்றும் கீரிசுட்டான் பிள்ளையார் ஆலயத் தலைவர் பாலசுப்பிரமணியம், ஊடகவியலாளர் கலைச் செல்வன், தமிழ் விருட்சத்தின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களும் பெருமளவான பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பேசிய பிரதேச சபை உறுப்பினர் தமிழ் அவர்கள், “புலம்பெயர் சமுகத்தின் பங்களிப்பை ஒருங்கிணைத்து இவ்வுதவியை செய்ய முன்வந்த “அதிரடி” இணையதளத்தின் சேவை, காலத்தின் தேவையானது. தமிழர்தம் உரிமைகளை, கல்வி மூலமாகவே எமது எதிர்கால சமூகம் வென்றெடுக்க முடியும் என்ற அசைக்க முடியாத உண்மையை பறைசாற்றுகிறது, அந்தவகையில் அவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் நன்றி” தெரிவித்தார்.

பின்னர் உரையாற்றிய தமிழ் விருட்சத்தின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் அவர்கள், “மறைந்த தோழர்கள் நினைவாக, அவரோடு இருந்தவர்கள், ஒன்றாக பழகியவர்கள், ஒரு கொள்கையின் அடிப்படையில் பயணித்தவர்கள் இந்த கற்றல் உதவியை எமது வேண்டுகோளுக்கமைவாக செய்கின்றனர். இது சாதாரண உதவி இல்லை, பலரும் இவ்வுதவிக்காக தேடித்திரியும் நிலையில் உங்களுக்கு “அதிரடி” இணையதளம் ஊடாக, புலம்பெயர் தோழர்களில் சிலர் செய்கின்றனர்.

“உங்கள் கற்றல் விருத்தியே, “அதிரடி”யின் இலக்கு, இதனையே தமிழ் விருட்சத்தின் தலையாய கடமையாக எண்ணுகிறோம்” என்றார்.
முடிவில் மாணவி ஒருவரின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதாக முடிந்தது…

(வாழ்வாதார உதவித் திட்டங்களின் செய்தி தொகுப்பு, பகுதி பகுதியாக “அதிரடி” இணையத்தில் வெளிவரும்)

தகவல் & வீடியோ உதவி.. திரு.மாணிக்கம் ஜெகன் -வவுனியா.

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், பத்தொன்பதாம் ஆண்டு “நினைவு நாள்” நாளை.. (வீடியோ & படங்கள்)

வவுனியாவில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், இறுதி அஞ்சலி (1999) நிகழ்வு.. (முழுமையான வீடியோ வடிவில்)

“புளொட்” செயலதிபர் உமா மகேஸ்வரனின், “இறுதி அஞ்சலி” நிகழ்வு.. (வீடியோ வடிவில்)

 

Comments (0)
Add Comment