சுவிஸ் “தூசணப் புலி” பொறுப்பாளர் ரகுபதியின் நாகரிகமற்ற செயல்களும், பனங்காட்டு நரியின் சந்திப்பும்… (முகநூலில் இருந்து)

பனங்காட்டு நரியின் சந்திப்பும்… தமிழர்ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு. ரகுபதியின் நாகரிகமற்ற செயல்களும்...

வணக்கம்,
ஒருவருடன் மாறுபட்ட கருத்துத் தோன்றுமாயின் அவருடன் நேரில் சந்தித்து பண்புடனும் மரியாதையுடனும் கருத்துக்களைப் பரிமாறி ஓர் உடன்பாட்டுக்கு வருவது மேலா? அல்லது விடுதலை புலிகளை ஏற்காத அல்லது மாற்றுக் கருத்தைக் கொண்டவர்களும் “புலிகள் ஒழுக்கமானவர்கள்” என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தை சிதைக்கும் வகையில்; குறிப்பிட்ட மக்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டவரின் படம் மற்றும் அவர்களின் கொடியைத் தாங்கியபடி இலங்கைத் தமிழரால் ஏற்றுக் கொள்ள முடியாத அல்லது சகிக்க முடியாத வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா?

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு.ரகுபதி அவர்களே?
சுவிஸ் பெர்னில் நடைபெற்ற ஆளுநரின் சந்திப்பைப் புறக்கணித்து நீங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியவர்கள் பயன்படுத்திய மிகக் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களும் நடத்து கொண்ட மிகக் கீழ்தரமான செயல்களுக்கும், நீங்களே முழுப்பொறுப்பு.

குறிப்பாகத் தமிழ் பெண்கள் மீது எம்மால் எழுதுவதற்கு கூச்சப்படக் கூடிய வார்த்தைகளைப் பிரயோகித்தமை, ஏற்க முடியாதது… “அவர்கள் கோபத்தில் நடந்து கொண்டார்கள், நான் என்ன செய்ய இயலும்?” என்று கூறுபவர் தலைமை ஏற்க தகுதி இல்லாதவர்..

நீங்கள் விரும்பினால் உங்களது படத்தை தூக்கியபடி, உங்களது வழிகாட்டலில் தமிழராய் அல்லாமல்.. திரு.ரகுபதியாக மிகக் கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டு வீதியில் இருங்கள். அது உங்கள் விருப்பம் அல்லது உங்கள் உரிமையும் கூட.

குறிப்பிட்ட மக்களால் “தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவரின் படம் மற்றும் அவர்களின் கொடியைப் பயன்படுத்தித் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பைத் தடை செய்ய முயற்சித்த உங்களால் அதையாவது செய்ய முடிந்ததா?

பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது என, வடக்கு மாகாண ஆளுனர் மரியாதைக்குரிய திரு.றெஜினோல்ட் கூரே கூறிய பழமொழிக்கு ஏற்ப சந்திப்பு நடைபெற்றது தானே.

சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரும் பொது நலன் சார்ந்தே அவருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர் .

அவ்வாறு மேற்கொண்டதனால்…

1) புங்குடுதீவு மக்களின் குளங்களைச் சீர் செய்தல், சாலை மேம்பாடு போன்றவற்றை செய்து தருவதாக் கூறியுள்ளார்.

2) பொது அமைப்புகள் தங்களின் பொதுத்திட்டங்களை செயல்படுத்தும் போது ஏற்படும் சிரமங்களைச் சரி செய்ய உதவுவதாகவும் கூறியுள்ளார் .

3) திருட்டுப் பிரச்சினையில் கவனம் எடுப்பதாகவும்,

4) சுவிஸ் இலங்கை தூரகத்தின் சில சேவைகளில் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் நடவடிக்கை எடுக்கிறாரா? என்றும் அவ்வாறு அவர் நடவடிக்கை எடுக்கும் போது தமிழ் தலைமைகள் என்று சொல்வோர் தடைகளை ஏற்படுத்துகின்றனரா? அல்லது ஒத்துழைக்கின்றனரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆளுநர் திரு.றெஜினோல்ட் கூரே அவர்கள்,

5) வடமாகாண மாணவர்கள் படிப்பதற்கு இலகு என்று கூறித் தமிழ்ப்பாடம் மற்றும் சமய பாடம் போன்றவற்றையே அதிகம் படிக்கின்றனர். அறிவியல், கணிதம், சட்டம் போன்றவற்றைப் படிப்பது இல்லை என கவலை தெரிவித்துள்ளார்.

6) வன்னி, கிளிநொச்சி, முல்லைதீவு போன்ற இடங்களில் கல்வியை மேம்படுத்த யாழ்ப்பாணத்தில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் பெற்றுச் செல்ல அவர்களை சம்மதிக்க வைக்க உங்களால் இயலுமா? நீங்கள் அவ்வாறு செய்வதன் மூலம் அங்குவாழும் எமது அடுத்த தலைமுறை சிறந்த சமூகமாக உருவாகலாம்.

7) ஆவா குழுவில் ஈடுபடும் அனைவரும்16,17,18 வயது வரை உள்ளவர்கள். அவர்களைக் கொலை செய்யவா முடியும்?, அவர்களைக் காவல்துறை பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தினால் அவர்களுக்காக வாதாட வருவது சிறந்த தமிழ் வழக்கறிஞ்ர்கள் தானே, அவர்களை அவ்வாறு பிணை எடுக்கச் செல்லாமல் சமூக அக்கறையுடன் செயல்பட வையுங்கள் என ஆளுநர் கூறினார்.

8) தமிழர்களின் எண்ணிக்கை இலங்கையில் மிக விரைவாகக் குறைந்து வருகிறது. தமிழ் மக்கள் தங்களது எண்ணிக்கையை கூட்டுவதில் கவனம் கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிடடார்.

மேலும் ஆளுநரை சந்திப்பை புறக்கணித்தவர்களே,

விடுதலைப் புலிகளும் பலருடன் சந்திப்புகளை மேற்கொண்டு இருந்தனர். பலன் கிடைக்காவிடினும் அவர்கள் அதனை தொடர்ந்தனர். மேலும் பலர் இன்றும் இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வரும்போது ஏன் புலம்பெயர் தமிழர்கள் சந்திப்புகளை மேற்கொள்ள கூடாது ?

எதிர் காலத்தில் இவ்வாறான சந்தர்ப்பம் அமைந்தால் நேரடியாக இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பண்புடனும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆதாரங்களுடன் கேள்விகளை அவரிடம் கேளுங்கள்.

கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத காரணத்தால் அவர் சந்திப்புகளைத் தவிர்க்கும் நிலையை ஏற்படுத்துங்கள்.

யாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், “காடையரின்* அட்டகாசமும்… (படங்கள்)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” விளக்கமே இல்லாத கூட்டம்! (முகநூலில் இருந்து -பகுதி-1)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” ஒண்ணுமே புரியலடா சாமி..! (முகநூலில் இருந்து -பகுதி-2)

வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)

Comments (0)
Add Comment