சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; இன்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; இன்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்தி வந்த முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த வருடம் பத்தாம் மாதம் சுவிஸ்லாந்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த 11.10.2018 அன்று நடைபெற்ற, வடமாகாண முன்னாள் ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே, மற்றும் அவரது செயலாளரும், இலங்கையின் மூத்த சிவில்சேவை அதிகாரிகளில் ஒருவரும், புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான திரு.இலட்சுமணன் இளங்கோவன், டான் டிவி நிறுவனர் திரு.குகநாதன் ஆகியோருடனான, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலைக் குழப்பும் நோக்கில், மண்டபத்துக்கு முன்பாக “சுவிஸ் புலிகள்” எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் (ரி.சி.சி)” ஆர்ப்பாட்டம் எனும் பெயரில், மிகக் கேவலமான முறையில் “தூஷணப் போராட்டம்” நடைபெற்றது அனைவரும் அறிந்ததே.

இதன் எதிரொலியாக “தனதும், தனது குடும்பத்தின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்ததுடன், தன்மீது கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் முயற்சி மேற்கொள்ள முயற்சித்தமை, முகநூல்களில் தன்னையும், தான் சார்ந்த அமைப்பையும் மிரட்டும் வகையில் பதிவுகள் இட்டமை, தன்னைக் குறித்து “உண்மைக்கு புறம்பான” செய்திகளை வாட்சப் போன்ற சமூகவலைத் தளங்களில் பகிர்ந்தமை” ஆகிய குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு,…

இலங்கையில் இணுவிலை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” நிதி பொறுப்பாளரான “குட்டி” எனும் திரு.நாகராஜா மகாராஜா, இலங்கையில் குருநகரை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” முன்னாள் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளரும், தற்போதைய அரசியல் பொறுப்பாளருமான திரு.வளத்தீஷ் கொலம்பஸ், “சுவிஸ் புலிகளின்” மகளிர் அணிப் பொறுப்பாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த திருமதி.சசியின் கணவரும், இலங்கையில் இணுவிலை சேர்ந்தவருமான திரு.பிரபாகரன் ராஜதுரை, இலங்கையில் கோண்டாவில் வடக்கை சேர்ந்தவரும், “சுவிஸ் புலிகளின்” வீடியோப் படப் பிடிப்பாளரும், தகவல் வழங்குநருமாக செயற்படும் “வெடிமுத்து” அல்லது “யதி” எனும் திரு.கந்தவனம் தஜீபன், இலங்கையில் மட்டக்களப்பை சேர்ந்தவரும் (தாய் -மட்.கொத்தியாதுளை, தந்தை -மட்.அரசடித்தீவு) “சுவிஸ் புலிகளின்” அரசியல்துறை முக்கியஸ்தரான “தீபன்” அல்லது “தீபராஜ்” எனும் “தூஷண வித்தகரான” திரு.தில்லையம்பலம் தீபராஜ் ஆகியோர் மீது,..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய தலைவரான “புலிக்குட்டி” அல்லது “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது, இன்றையதினம் சுவிஸ் பேர்ண் விசாரணை நீதிமன்றில், “சமரசப்படுத்தப் போகும்” நோக்கில், சுவிஸ் விசாரணை நீதிபதி திரு.கம்யூஸியன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணையின் ஆரம்பத்தில் “புரிந்துணர்வு அடிப்படையில், சமரசமாகப் போகுமாறு” கூறி வழக்குத் தொடுநர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் கருத்தைக் கேட்ட போது, “தான் வழக்கை வாபஸ் பெற விரும்பவில்லை எனவும், இவர்களின் செயற்பாட்டினால், தனதும் தனது குடும்பத்தினதும் கௌரவத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வழக்கை தொடர்ந்து நடத்தவே விரும்புகிறேன்” என்றார். அதேபோல் புலிகளின் சார்பில் பதிலளித்த குட்டி எனும் திரு.நாகராஜா மகாராஜா அவர்களும், “தாமும் எந்தவொரு பிழையும் விடாதபடியால் வழக்கை தொடர்ந்து நடத்தவே விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து “வழக்கு விசாரணையை இன்றே ஆரம்பிக்க உள்ளதாகவும், மிகவிரைவில் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் முடிவுக்கு சமர்ப்பிக்க உள்ளதாகவும்” விசாரணை நீதிபதி திரு.கம்யூசியன் அவர்கள் தெரிவித்து, முதலில் வழக்குத் தொடுநரான “புலிக்குட்டி” அல்லது “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் “நடந்த சம்பவங்களை விசாரித்து” விளக்கமாக எழுதப்பட்டது.

இதன்போது சுவிஸ் புலிகளின் நிதி பொறுப்பாளர் குட்டி எனும் திரு.நாகராஜா மகாராஜா, சுவிஸ் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.கொளம்பஸ் வளத்தீஷ் ஆகிய இருவரும் தமக்கு “வேலையெனக்” கூறி சென்ற போதிலும், ஏனைய மூவரான திரு.பிரபாகரன் ராஜதுரை, “வெடிமுத்து” அல்லது “யதி” எனும் திரு.கந்தவனம் தஜீபன், “தீபன்” அல்லது “தீபராஜ்” எனும் திரு.தில்லையம்பலம் தீபராஜ் ஆகியோரிடம் விசாரணை நீதிபதி திரு.கம்யூஸியன், வழக்குத் தொடுநரான “புலிக்குட்டி” அல்லது “சுவிஸ்ரஞ்சன்” எனும் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன், அவரது வழக்கறிஞரான திரு.சீமோன் பிளாக் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்து, அவர்களின் தகவலும் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை தன்னால் குற்றம் சுமத்தப்பட்டு உள்ள “சுவிஸ் புலிகளின்” பொறுப்பாளர்களுடன், தற்போது இலங்கையில் புங்குடுதீவை சேர்ந்தவரும், ஈ.பி.டி.பி யின் ஆதரவாளருமான “ஐந்து கரத்தான்” எனும் திரு.கணேஷ் ஐங்கரன் மீதும், மற்றும் சுவிஸ் புலிகளின் ஊடகமெனக் கருதப்படும் “சிலுப்பர் கட்டை” எனும் முகநூல் மீதும் வழக்கு தாக்கல் செய்வதுக்கான முன்னெடுப்பும், திரு.சுவிஸ்ரஞ்சன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில், நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திரு.சுவிஸ்ரஞ்சன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “தன்மீது இரண்டு மூன்றுமுறை, ஐங்கரன் என்பவனால், (தன்னை பயமுறுத்தியது, இளையோரை வைத்துத் தன்னைத் தாக்கியதென) பொய்யான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போதெல்லாம், அதனை மறுதலித்து என்னால் பதில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டன. ஆயினும் நீதிமன்றங்கள் “இருதரப்பும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகக்” கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்தன. ஆயினும் தற்போது, இந்த ஐங்கரன் என்பவன் “என்னைக் குறித்து, பொய்யான தகவல்களை எழுதி, தானே சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புவதுக்கான ஆதாரம் சரியாகக் கிடைத்து உள்ளது. அதனால் அவனையும் இந்த வழக்குடன் இணைக்க முடிவெடுத்து சட்டத்தரணிகளிடம் உரையாடி உள்ளேன்”…

அதுமட்டுமல்ல “சுவிஸ் புலிகளால்” நடத்தப்படுவதாகக் கருதப்படும், “சிலுப்பர் கட்டை” எனும் முகநூலில்; இவராலேயே (ஐங்கரனாலேயே) நான், தங்கள் மீது வழக்குப் போட்டதாக “சுவிஸ் புலிகள்” பதிவிட்டு உள்ளதை மறுதலித்ததுடன், என்னைக் குறித்தும், “சிலுப்பர் கட்டை” எனும் முகநூலில் அடிக்கடி தவறாகப் பதிவிட்டு உள்ளதாகவும், அந்த முகநூலுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்” எனவும் குறிப்பிட்டார்.

மேற்படி “சுவிஸ் புலிகளால்” நடத்தப்படுவதாகக் கருதப்படும், “சிலுப்பர் கட்டை” எனும் முகநூலில்; திரு.கணேஷ் ஐங்கரன் என்பவரின் புகைப்படத்தை பதிவிட்டு, “மேற்படி ஐந்துகரத்தான் ஒட்டுக்குழுவை சேர்ந்தவர் எனவும், இவர் கள்ளமட்டை பேர்வழி எனவும், கள்ளமட்டையுடன் போலீசாரிடம் மாட்டுப்படும் போது, தங்கள் அமைப்பின் (புலிகளின்) பெயரைக் கூறி தப்பிப்பவர் எனவும், இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் உட்பட பல பெண்களை சீரழிப்பவர் எனவும், இவருடன் எமது புலிகள் அமைப்பை சேர்ந்த எவரும் தொடர்பு வைக்க வேண்டாம் எனவும், இவர் குறித்து மக்கள் விழிப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்” எனப் பதிவிடப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

***தகவல்… இலங்கை, சுவிஸ் நிருபர்களுடன் இணைந்து “புங்கையூரான்”
புகைப்பட உதவி.. -சுவிஸ் புலிகளின் (முன்னைய) வீடியோ பதிவு..
(நன்றி..- நிதர்சனம்.நெற்)

யாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், “காடையரின்* அட்டகாசமும்… (படங்கள்)

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள் &வீடியோ)

வடமாகாண ஆளுநரின் “சுவிஸ் சந்திப்பில்” உரையாடியது என்ன? (விரிவான தகவலுடன் படங்கள், வீடியோக்கள்)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” விளக்கமே இல்லாத கூட்டம்! (முகநூலில் இருந்து -பகுதி-1)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: “புலிகளின் தூசணப் போராட்டம்” ஒண்ணுமே புரியலடா சாமி..! (முகநூலில் இருந்து -பகுதி-2)

சுவிஸ் “தூசணப் புலி” பொறுப்பாளர் ரகுபதியின் நாகரிகமற்ற செயல்களும், பனங்காட்டு நரியின் சந்திப்பும்… (முகநூலில் இருந்து)

“சுவிஸ் தூசணப் புலிகளின்” போராட்டம், வடமாகாண ஆளுநருக்கு எதிரானதா? புலிக்குட்டிக்கு எதிரானதா?? (வீடியோ ஆதாரங்களுடன்)

சுவிஸில் வடமாகாண ஆளுநர்: உண்மையில் நடந்தது என்ன? “தன்னிலை விளக்கம் தரும்” சுவிஸ்ரஞ்சன்..! (வீடியோ வடிவில்)

Comments (0)
Add Comment