சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் ரகுபதி, இளையோரால் நையப்புடைப்பு.. நேற்று சுவிஸில் நடந்ததென்ன? (படங்கள்)

சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் ரகுபதி, இளையோரால் நையப்புடைப்பு.. நேற்று சுவிஸில் நடந்ததென்ன? (படங்கள்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளரான ரகுபதி எனும் திரு.சிவநேசன் விஜேயரத்னம் அவர்கள் நேற்றையதினம் சுவிஸில் நடைபெற்ற, “மாவீரர்நாள் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின்” போது, அங்கிருந்த இளையோர்களால் நையப்புடைக்கப்பட்டு, “அவசர சிகிச்சை வண்டி” (அம்புலன்ஸ்) மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவது யாதெனில், “நேற்றையதினம் சுவிஸ் சூறிச்சில் நடைபெற்ற “மாவீரர்நாள் நினைவு கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின்” போது, ஒருவர் மீது தாக்குதல் நடத்திய இளையோரை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்த, சுவிஸ் புலிகளின் பொறுப்பாளரும், அவ்விளைஞர்களால் “கிரிக்கெட் மட்டை போன்ற பலத்த ஆயுதங்களால்” தாக்கப்பட்டு, மயங்கி விழுந்த நிலையில் அவ்விடத்துக்கு விரைந்து வந்த சுவிஸ் பொலிஸார் மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு தற்போது ஆபத்துக் கட்டத்தை தாண்டி உள்ளதாகத் தெரிய வருகிறது.

மேற்படி சம்பவம் தொடர்பில், எமது இணையத்துக்கு கருத்து வெளியிட்ட, “ச”, “ப”, “க” ஆகியோர், “லுசேர்ன் மாநிலத்தில் உள்ள “லுசேர்ன் ஜொனி ஸ்ரார்” விளையாட்டுக் கழக பொறுப்பாளரான திரு.யசி என்பவருக்கும், அதே மாநிலத்தை சேர்ந்த மேற்படி “லுசேர்ன் நியூ பேர்ட்ஸ்” விளையாட்டுக் கழக இளையோர்கள் சிலருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த முறுகலானது, முன்பு பொலிஸாரின் சட்ட நடவடிக்கைகளின் பின்னர், சிறிது ஓய்ந்து இருந்தது”.

“இதேவேளை நேற்றையதினம் சுவிஸ் புலிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற “மாவீரர்நாள் நினைவு மென்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டியின்” போது, அவர் மீது இவ்விளையோரால், தாக்குதல் நடத்தப்பட்டது, இதனைத் தடுக்க முயன்ற சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் ரகுபதியும் இவ்விளையோரால் நையப்புடைக்கப்பட்டு உள்ளார்”.

“இதனை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், அவ்விருவரையும் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடி வருகின்றனர். வைத்தியசாலையில் சுமார் மூன்று மணித்தியாலமாக மயக்க நிலையில் இருந்த சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி, தற்போது ஆபத்துக் கட்டத்தை தாண்டி தேறி வருவதாக அறிகிறோம்”.

இதேவேளை “தமிழ் கார்ட்” எனும் சுவிஸ் புலிகளின் பாதுகாப்பு படையினர், பொறுப்பாளரை தனித்து விட்டுற்று எங்கே சென்று இருந்தனர்? என்பதும் எமக்கு புரியவில்லையென” தெரிவித்து உள்ளனர்.

இதேவேளை நேற்றைய தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவரான, திரு.யசி (லுசேர்ன்) என்பவரிடம், எமது இணையம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “இப்பிரச்சினை சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது, இத்தாக்குதலை மேற்கொண்ட இளையோர்களில் பெரும்பாலானோர் சில வருடங்களுக்கு முன்பே நாட்டில் இருந்து வந்ததுடன், இவர்கள் மது, போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்”.

“இதுகுறித்து பொலிஸார் சில நடவடிக்கைகளை எடுத்த போது, என்னாலேயே இது நடைபெற்றதென தவறாக நினைத்து, என்மீது தாக்குதல் தொடுக்க முயற்சி செய்ததுடன், எனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் நான் குழு மோதலில் ஈடுபடாமல், சுவிஸ் பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டேன்,

இதன் காரணமாக என்மீது சிலமுறை தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், நேற்றையதினம் சுவிஸ் புலிகளால் நடைபெற்ற “மாவீரர்நாள் நினைவு, மென்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டியில்” நாம் வெற்றியீட்டி, வெற்றிக் கிண்ணத்தை பெற்றவுடன், முடிவில் என்மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனை சமாளிக்க முடியாமல் தப்பி ஓடும் போது, இதனைத் தடுக்க வந்த சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் ரகுபதி அங்கிள் மீதும் “கொலைவெறித் தாக்குதல்” மேற்கொண்டனர் எனவும்” தெரிவித்தார்..

இதேவேளை பிறிதொரு செய்திகளின்படி சுவிஸ் புலிகளின் பொறுப்பாளர் திரு.ரகுபதி மீது “கிரிக்கெட் மட்டை, பொல்லுகளால் அவரது மண்டை உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தியது மட்டுமல்ல, அவர் தப்பி ஓடிய போது காரினாலும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ள எத்தனித்ததாகத் தெரிய வருகிறது.

இதேவேளை இவ்வளவு சம்பவங்களும் நடைபெற்றவேளை சுவிஸ் புலிகளின் முக்கியஸ்தர்களோ, சுவிஸ் புலிகளின் பாதுகாப்புப் படையணி எனும் “தமிழ் கார்ட்” எவராயினும் இதனைத் தடுக்க முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லையெனத் தெரிகிறது.

இதேவேளை மேற்படி சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த புங்குடுதீவை சேர்ந்த “ச” என்பவர் “ஊரின் நன்மை கருதி நடைபெறும் சாதாரண அரசியல் சந்திப்புகளையே, ஆர்ப்பாட்டம் எனும் பெயரில், “தூஷணப் போராட்டம்” நடத்தத் தெரிந்த “சுவிஸ் புலிகளுக்கு”, தமது நிகழ்வுகளை பிரச்சினை இல்லாமல், அதுவும் தமது பொறுப்பாளருக்கு பாதுகாப்புக் கொடுக்கத் தெரியாமல் போனது, அவர்களின் அரசியல் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது” என்றார்.

இதேவேளை சுவிஸில் உள்ள மாற்று அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “வன்னியில் புலிகள் உயிர்ப்புடன் இருந்த காலத்திலேயே, முனைப்புடன் செயல்பட்ட சிலர் இன்னமும் உள்ளனர் என்பதை சுவிஸ் புலிகள் மறந்து செயல்படுகின்றனர். இதேவேளை அண்மையில் சுவிஸுக்கு வந்தவர்களுக்கு; சுவிஸ் சட்ட திட்டங்களோ, பின்விளைவுகளோ தெரியாமல் போனது கவலைக்கிடம் என்பதையும், விளையாட்டுக்களிலோ, பொது நிகழ்வுகளிலோ, மற்றும் அரசியல் சந்திப்புகளிலோ “வன்முறையில் ஈடுபடுவதும், வன்முறையைத் தூண்டும் விதத்தில் நடப்பதும் ஏற்புடையது இல்லையெனவும்” தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி சம்பவம் குறித்து, “சுவிஸ் புலிகளின்” ஊடகமெனக் கருதப்படும் “சிலுப்பர் கட்டை” எனும் முகநூலில் கருத்து பதிவிடப்பட்டு உள்ளது. அதில்.., “நேற்றைய துடுப்பாட்ட தெரிவுப் போட்டியில் ஏற்பட்ட கைகலப்பின் போது, எமது கிளைப் பொறுப்பாளர் மீதான கொலைவெறித் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சுவிஸில் நேற்றைய துடுப்பாட்ட தெரிவுப் போட்டியில் ஏற்பட்ட கைகலப்பின் போது ஏற்பட்ட குழுமோதலை தடுக்கச் சென்ற எமது பொறுப்பாளர் ரகுபதி மாமா மீது துடுப்பாட்ட மட்டையால் தலையில் தாக்கியதால் அவர் தலையில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கூட இவ்வாறான சம்பவங்களை மேன்மைப் போக்கோடு கையாண்டு சமரசம் செய்த அனுபவத்துடன் நேற்றும் துணிவுடன் செயற்றப்பட்ட அவர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, ரகுபதி மாமா விரைவில் குணமடைய வேண்டுகின்றோம்.

பொதுவாக எமது நிகழ்வுகளுக்கு எமது “தமிழ்காட்” காவல்துறை பாதுகாப்பு வழங்குவது வழமை. ஆனால் நேற்று அது ஏன் தவிர்க்கப்பட்டது என்று எமது வேவு அணிகள் விசாரணை செய்து வருகிறார்கள்”.. எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இச்சம்பவம் நடைபெற்ற போது, அங்கிருந்த தமிழ் பொதுமக்களினால் நடைபெற்ற விடயங்கள் கைத்தொலைபேசி மூலம், அனைத்து விடயங்களும் படமாக்கப்பட்டதுடன், அவை பொலிஸாரிடமும் கையளிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

(புகைப்பட உதவி… – சுவிஸ் புலிகளின் ஊடகங்கள்)

சுவிஸ் புலிகளுக்கு எதிரான வழக்கு; இன்று பேர்ண் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.. நடந்தது என்ன?? (படங்கள் & வீடியோ)

Comments (0)
Add Comment