சுவிஸ் பெர்னில் விறுவிறுப்பாக நடைபெறும் “சுவிஸ் கிரிக்கெட் சம்மேளனத்தின்” தமிழீழக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் பெர்னில் விறுவிறுப்பாக நடைபெறும் “சுவிஸ் கிரிக்கெட் சம்மேளனத்தின்” தமிழீழக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி..! (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட சம்மேளனம்” முதன் முறையாக நடாத்தும் “தமிழீழக் கிண்ணம்” உள்ளூர் பிரபல பலம் பொருந்திய இருபது அணிகளும், ஐரோப்பாவில் பலம் பொருந்திய அணிகளும் பங்குபற்றும் இக்கிரிக்கற் சுற்றுப்போட்டி தற்போது, பேர்ண் வங்டோர்ப் மைதானத்தில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் முதல் நிகழ்வாக விடுதலைப் போராடடத்தில் மரணித்த அனைத்துப் போராளிகள் பொதுமக்களுக்கான மௌன அஞ்சலியுடன், புலிக்கொடியும் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

தகவல் & படங்கள் & வீடியோக்கள்… “சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட சம்மேளனம்”

** இதேவேளை கடந்த இருபத்திமூன்று வருடமாக “சுவிஸ் மென்பந்து துடுப்பாட்ட சம்மேளனத்தால்” நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டியானது, சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால்” இன்றையதினம் வின்டெர்ட்டூர் எனுமிடத்தில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் நடத்த முனைந்த போதிலும் பெரும்பாலான விளையாட்டுக் (கிரிக்கெட்) கழகங்கள், “சுவிஸ் கிரிக்கெட் சம்மேளனம்” நடாத்தும் கிரிக்கெட் போட்டியிலேயே பங்குபற்றி உள்ளனரென “அதிரடி”யின் சுவிஸ் நிருபர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் புலிகளின் உள்ளக செய்திகளையும், தமக்கு எதிரானவர்களை மிகக்கேவலமாக விமர்சிக்கும் உரிமை கோரப்படாத, உத்தியோகப்பூர்வ சுவிஸ் புலிகளின் ஊடகமான “சிலுப்பர் கட்டை”யில் இந்நிகழ்வு நடைபெறாது, தமது நிகழ்வு மட்டுமே நடைபெறுமென அறிவித்து இருந்த போதிலும், சுவிஸ் கிரிக்கெட் சம்மேளனம்” நடாத்தும் கிரிக்கெட் போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சுவிஸில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் “சமூக சேவையாளர்” ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “ஏற்கனவே சுவிஸ் புலிகள், சுவிஸில் உள்ள பெரும்பான்மையான கோவில்கள், பாடசாலைகளை கைப்பற்றி “உழைப்பை” கண்டுள்ள காரணத்தினால், தற்போது விளையாட்டுக் கழகங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உழைக்கலாம் எனும் நோக்கிலேயே, இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்த முனைகின்றனர்”.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “சுவிஸ் புலிகளைப் பொறுத்தவரை, “கலியாண வீடு என்றால், தாமே மாப்பிள்ளை” எனவும், “மரணவீடு என்றால் தாமே பிணம்” எனும் சித்தாந்தத்தை உடையவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது” எனவும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment