புளொட் சுவிஸ் “வீரமக்கள் தினத்தை” முன்னிட்டு, “கிளிநொச்சி சக்தி சிறுவர் இல்லத்திற்கு” உதவி..! (படங்கள் &வீடியோ)

புளொட் சுவிஸ் “வீரமக்கள் தினத்தை” முன்னிட்டு, “கிளிநொச்சி சக்தி சிறுவர் இல்லத்திற்கு” உதவி..! (படங்கள் &வீடியோ)

கடந்த நான்காம் திகதி “புளொட்” ஐரோப்பிய ஒன்றியம் சார்பில், மறைந்த கழக செயலதிபர் மற்றும் கழகத் தோழர்கள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்கள் நினைவாக சுவிஸில் “வீரமக்கள் தினம்” நடத்தப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதேவேளை கிளிநொச்சி சக்தி இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் “யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்களும், உறவுகள் இல்லாத பிள்ளைகளும், தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த பிள்ளைகள் என பலதரப்பட்ட வறிய குடும்பத்தைச் சேர்ந்த 32 பெண் பிள்ளைகளும் 4 சிறுவர்களும் இல்லத்தில் தங்கியுள்ளனர். குறிப்பாக யுத்தம் நடந்த பிரதேசத்தை சேர்ந்த பிள்ளைகளே இங்கு உள்ளனர்.

இந்தப் பிள்ளைகள் உழைத்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தயாராகவே உள்ளனர். இவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட விருப்பம் கொண்டாலும், தண்ணீர் மோட்டார் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். அத்துடன் இவர்களின் நாளாந்த உணவு உட்பட பல்வேறு தேவைகளுக்கு சிரமத்தை எதிர் நோக்கியுள்ள இந்தப் பிள்ளைகளின் உணவுத் தேவை பற்றி அவர்களால் முன்னர் கோரிக்கை விடப்பட்டதையடுத்து..,

“புளொட்” ஐரோப்பிய ஒன்றியத்தால், சுவிஸில் நடத்தப்பட்ட புளொட் “வீரமக்கள் தினத்தை” முன்னிட்டு சுவிஸ் தோழர்கள், ஆதரவாளர்களினால் கவனத்தில் எடுக்கப்பட்டு, வீரமக்கள் தினத்தை கௌரவிக்கும் முகமாக, கேட்டுக் கொண்ட உணவுப் பொதிகள் குறித்த “கிளிநொச்சி சக்தி சிறுவர் இல்லத்து” பிள்ளைகளிடம் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வு, மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களுக்கான நிதிப் பங்களிப்பை சுவிஸில் உள்ள கழகத் தோழர்கள், ஆதரவாளர்களான தோழர்கள் வரதன், செல்வபாலன், பாபு, ரமணன், அசோக், சூரிச் குமார், சூரிச் ஜெகன், ஆனந்தன், குழந்தை, ஒபேர்புர்க் குமார், ரஞ்சன் ஆகியோர் அளித்து உள்ளனர்.

இன்று 13.08.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மேற்படி நிகழ்வில், உணவுப் பொதிகளை “புளொட்” தோழர் சூரி அவர்களினால், கிளிநொச்சி சக்தி இல்லத்தில் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வுதவி வழங்கும் நிகழ்வில் கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களும் “இவ்வுதவி வழங்கும் செயற்பாட்டில் இணைந்து” தனது பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள் & வீடியோ… “அதிரடி”யின் விசேட நிருபர்.

சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவரின் வீரமக்கள் தின செய்தி..!

சுவிஸில் மிகச்சிறப்பாக நடைபெற்ற, “புளொட்” அமைப்பின் வீரமக்கள் தின நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

Comments (0)
Add Comment