சுவிஸ் புலிகளுக்குள், “ஒட்டுக்குழுக்கள் பெருக்கம்?” எனும் குழப்பம்: நடந்தது என்ன?.. (புகைப்படங்கள் இணைப்பு)

சுவிஸ் புலிகளுக்குள் “ஒட்டுக்குழுக்கள் பெருக்கம்?” எனும் குழப்பம்.. நடந்தது என்ன?..

16.11.2019 சுவிஸ் மூத்த பரதநாட்டிய ஆசிரியைகளின் ஒத்துழைப்புடன், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், சுவிஸ் நாட்டில் சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” முன்னாள் பொறுப்பாளர், “போராளிகள் கட்டமைப்பின்” மாநிலப் பொறுப்பாளர், முக்கிய பணியாளர்கள், பொதுமக்கள், ஒத்துழைப்புடன் தோழமைக் கரங்கள் கலைமாலை 2019 நிகழ்வு சுவிஸ் சொலத்தூண் மாநிலத்தில், மண்டபம் நிறைந்த மக்களோடு நடைபெற்றது.

இதன் படங்கள் முகநூலில் வெளிவந்த பின்னர் அதில் சில படங்களை தெரிவு செய்து “யார் இந்த ஒட்டுக்குழுக்கள்” என்று குறிப்பிட்டு Whatsapp குழுவில் ஒரு செய்தியை சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” முன்னாள் துணைப்பொறுப்பாளரும், தற்போதைய பேர்ண் மாநில பொறுப்பாளருமான மூர்த்தி எனப்படும் திரு.கந்தர் விஷ்ணுமூர்த்தி என்பவர் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இவர் (திரு.மூர்த்தி) குறிப்பிட்டுள்ள நபர்கள் யாவரும், சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” அமைப்பிலோ அன்றில் அது சார்ந்தோ இப்போதும் “நேரடியாகவும், மறைமுகமாகவும்” பணியாற்றி வருவதுடன், இவருடன் நெருங்கிப் பழகுபவர்கள் எனவும் தெரிய வருகிறது.

இருப்பினும் சுவிஸ் புலிகளிடையே உள்ள குழப்பம், அதாவது,”ரி.சி.சி”, “போராளிகள் கட்டமைப்பு”, “தமிழர் இயக்கம்”, “அக்கினிப் பறவைகள்” என நான்கைந்து பிரிவாக “சுவிஸ் புலிகள்” பிரிந்து செயல்படுவதே இக்குழறுபடிக்கு முழுக்காரணமெனத் தெரிய வருகிறது. “தம்மை விட வேறு எவருமே” புலிகள் அமைப்புக்கு உரிமை கோரக்கூடாது என்பதில், “பிள்ளை” எனும் செல்லப்பெயர் கொண்ட திரு.ரகுபதி தலைமையிலான சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு” திடமான முடிவுடன் செயல்படுவதே இவற்றுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இப்புகைப்படங்களில் உள்ளவர்களில் ஒருவரான, “கதிரவன்” இணைய ஆசிரியர் திரு.சண்ரவி என்பவரிடம், “அதிரடி” இணையம் சார்பாக கருத்துக் கேட்ட போது, “எனது வாட்சப் குரூப்பில் பதிவிட்டவர், உடன் அழித்து விட்டார். நான் எனக்கு தெரிந்தவர்கள் ஊடாக மக்கள் மத்தியில், இதனைக் கொண்டு போயுள்ளேன். மக்கள் தீர்மானிக்கட்டும் நாம் யாரென்று?” எனக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து இப்புகைப்படங்களில் உள்ளவர்களில் ஒருவரான, ஊடகவியலாளரான திரு.சன் தவராஜா என்பவரிடம், “அதிரடி” இணையம் சார்பாக கருத்துக் கேட்ட போது, “என்னைக் குறித்து இதுபோன்று வருவது இது முதல் முறையல்ல, இதுபோன்றதை பார்த்தே சலித்து விட்டது, இதைவிட இது பகிரங்கத்தில் (இணையங்களில்) வரவில்லை, இதுவோர் தனிப்பட்ட வாட்சப் குரூப்புக்கு வந்ததினால், அவர்களே இதுக்கு தீர்வு காண வேண்டுமெனவும்” தெரிவித்தார்.

இதேவேளை இந்நிகழ்வில் புகைப்படங்களை எடுத்தவரென அறியப்பட்ட, சுவிஸ் புலிகள் எனும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” முன்னைய தீவிர செயற்பாட்டாளரான புகைப்படப் பிடிப்பாளர் திரு.பகீர் என்பவருடன், “அதிரடி” இணையம் சார்பாக தொடர்பு கொண்டு கேட்ட போது, “இந்நிகழ்வில் இப்புகைப்படங்களை எடுத்தது நான் தான் எனவும், நீங்களும் தேவையெனில் எனது முகப்பக்கத்தில் சென்று எடுக்கலாம் எனவும், ஆயினும் இப்புகைப்படங்களை தவறான முறையில் எவரும் பாவிப்பது பிழையெனவும், அப்படித் தவறாகப் பாவித்த ரி.சி.சி.யின் பேர்ண் மாநிலப் பொறுப்பாளர் மூர்த்தி மன்னிப்புக் கேட்க வேண்டுமெனவும்” குறிப்பிட்டார்.

§§§§§§§§§§§§§§§§§§§§ (இதேவேளை “ஒட்டுக்குழு நபர்கள்” எனக் குறிப்பிட்ட படங்களில் உள்ளவர்கள் சார்பில் வெளியான அறிக்கையில், “சுவிஸ் புலிகள் எனும் ரி.சி.சியே, மாவீரர் தினத்துக்கென வரும் மக்கள் தொகையைப் பார்த்து, மக்கள் உங்களுக்கு ஆதரவென பகற்கனவு காணாதீர்களெனக்” குறிப்பிடப்பட்டு உள்ளது) §§ அவர்கள் வெளியிட்ட அறிக்கையை கீழே முழுமையாகப் பிரசுரித்து உள்ளோம்……§§§§

அன்பான சுவிஸ்வாழ் தமிழ் மக்களே ..!
உங்களுக்கொரு அறைகூவல் ..!

சென்ற சனிக்கிழமை 16.11.2019 சனிக்கிழமை சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சிறையில் இருந்து வெளிவந்து நூற்றுக்கணக்கான போராளிகளின் விடுதலைக்காகவும் , அவரகளின் குடும்ப ஏழமையை ஆகக்குறைந்தளவு ஒருவேளை கஞ்சி குடிக்க உதவும் நோக்குடனும் செங்கோள், அகிலன் போன்ற போராளிகளின் முன்னெடுப்போடு ஏற்பாடு செய்யப்பட்ட “தோழமைக்கரங்கள் 2019 ” என்ற நிகழ்ச்சியில் வெறும் 10 சுவிஸ் பிராங்குகள் பற்றுச்சீட்டு பெற்று அந்த நிகழ்வில் பங்குபற்றி ஆதரவுக்கரம் கொடுத்ததற்காக ..!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக “வெள்ளைச்சேட்” போட்டு சுவிஸ் பணியகப் பொறுப்பாளராக விடுதலைப்புலிகளின் சக பணியாளரான சண்ரவி அவர்களையும் , மக்கள் பணியாளரான ஆசிரியர் முருகவேள் அவர்களையும் , விடுதலைப்புலிகளின் முன்நாள் பணியகப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா அவர்களையும், விடுதலைப்புலிகள் பத்திரிக்கை ஆசிரியர் திரு.ரவிமாஸ்டர் அவர்களையும், ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில் அருச்சுனையர் திரு.சசிகுமார் அவர்களையும், அருச்சுனையர் திரு.விஜய சுரேஷ் அவர்களையும் அவரது மனைவியையும், மூத்த பத்திரிக்கையாளர்”நிலவரம்” திரு.சண்தவரசா அவர்களையும், திரு50 பினான்ஸ் உரிமையாளர் திரு.ஐயாத்துரை திரு அவர்களையும், நடனாசிரியை நிமலினி, அவர்களின் கணவர் திரு.ஜெயக்குமார் அவர்களையும், தமிழீழ நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தியப்பாவின் தமையன் திரு.சுப்பிரமணியம் அவர்களையும், அவரது மனைவியையும், போராளிகள் கட்டமைப்பின் தோழமைக்கரங்கள் 2019 நிகழ்வில் கலந்து கொண்டதற்காக .. “யார் இந்த ஒட்டுக்குழுக்கள் “ என்ற தலைப்பிட்டு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முன்நாள் பேர்ன் மாநிலப் பொறுப்பாளர் திரு மூர்த்தி அவர்கள் வாட்சப் குறூப்பில் இவர்களது புகைப்படங்களை அனுமதியின்றிப் போட்டு சமூக ஊடகங்களில் பரப்பி விட்டது எந்தவகையில் நியாயமாகும்?

இவர்கள் என்ன ஶ்ரீலங்கா அரசின் மாற்று அரசியல் அமைப்பின் அல்லது கருணா, பிள்ளையான், இனியபாரதி, டக்கிளசின் நிகழ்வுக்கா சென்றார்கள்? மானமும் வீரமும் நிறைந்து விடுதலைப்புலிகளாக களத்தில் போராடி சிறை சென்றவர் மீட்புக்காக நடாத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டது மட்டுமே இவர்கள் செய்தது .

இவர்களைத் துரோகிகள் அல்லது ஒட்டுக்குழு என்றால் இத்தனை ஆண்டுகள் இவர்கள் ஆற்றிய பணியும் பெருளாதார பணமும் எத்தகையது? பதில் சொல்வாரா மூர்த்தியும், அவருக்கு வால்பிடிக்கும் (பிள்ளை ) ரகுபதி குழு சிண்களும் .

சிலுப்பர்கட்டை என்ற முகநூலில் “மாவீரர் நாளுக்கு வேவுப் பணியாளர்களுடன் களப்பணியாற்ற சிலுப்பர்கட்டை அணிகளும் பங்குபற்றுகின்றன” என பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்தல் விட்டுள்ளனர். அப்படியானால் அது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமா? இதற்கு பகிரங்க மறுப்பறிக்கை விடாதவரை தனிநபர் விமர்சனங்களை மற்றும் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பயன்படுத்தும் சிலுப்பர்கட்டை யாரெனத் தெரிந்து, அவருக்கு தர்மஅடி விழுந்தால் அது “சு .த . ஒ. குழுவிருக்கு” விழுந்த அடியாக எடுத்துக் கொள்ளப்படுமா?

இந்த ஈனச் செயல்களுக்கு மூர்த்தியும், அவரது ஊதுகுழல்களும் பகிரங்க மன்னிப்புக் கோரும்வரை தாக்குதல்கள் அதி உச்சக்கட்டமாகத் தொடரும்.. புலிவேசம் போட்டு மக்களை சுரண்டும் இவர்களுக்கு மக்கள் தக்கநேரத்தில், தகுந்த பாடம் புகட்டுவார்கள் என நம்புவோம் !

ராசா நாங்க ஒதுங்கியிருக்கிறோமே அன்றி பயந்து அல்ல ..! புரியுங்கள் இல்லை புரிய வைக்கபடுவீர்கள்.
2009 க்குப் பிறகு சருகுப்புலி வேசம் போடாதீர் அதுதான் எல்லாமே முடிஞ்சுதே ! இனியேன் அறுந்த றீலில் படத்தை ஓட்டப் பார்க்கிறீங்க? இப்பத்தான் டிஜிற்றல் சிஸ்டம் வந்திட்டுதே ..!

சிவாஜிலிங்கத்திற்கும், சீமானுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் காசைக் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து உங்கட பிசுபிசுத்த அரசியல் செய்யாம.. பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நீங்க உதவியிருந்தா ஏன் இவர்கள் மன உழைச்சல்பட்டு போகப் போறாங்கள்?

பல முதலீடுகளும், இலட்சக்கணக்கில் சீட்டு, வட்டி என்றுஉங்கள் தில்லுமுல்லு கபட நாடகங்கள் மக்களுக்குத் தெரியாதது அல்ல! மாவீரர் நிகழ்வுக்கு உயிர்ப்பலி கொடுத்த மக்களின் வரவை வைத்து, மக்கள் உங்கள் பக்கமென பகல்கனவு காணாதீர்கள். உங்களால் முன்னெடுக்கப்படும் ஏனைய நிகழ்வுகளை மக்கள் கணக்கில் கூட எடுக்காமல் புறக்கணிப்பதை வைத்தே புரியுங்கள் “உங்கள் பருப்புக்கள் இனியிங்கு வேகாது” என்று …!

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

சுவிஸில் நடைபெற்ற “தோழமைக் கரங்கள் கலைமாலை 2019” நிகழ்வு புகைப்படங்கள்… (புகைப்பட உதவி.. திரு.பகீர்– அவரது அனுமதியுடன், அவரது முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது))
Comments (0)
Add Comment