“கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில், சுவிஸில் நடைபெற்ற “பெரியவெள்ளி” ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ)

“கொரோனா புகழ்” சுவிஸ் போதகரின் தலைமையில் சுவிஸில் நடைபெற்ற “பெரியவெள்ளி” ஆராதனை.. (ஆதார படங்கள், வீடியோ)

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ் வந்து, யாழில் உள்ள மக்களுக்கு கொரோனா தொற்றை பரப்பியதாக குற்றம் சாடடப்பட்டு, மீண்டும் சுவிஸ் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியுள்ள, சுவிஸில் “தமிழ் கிறிஸ்தவ சபை” ஒன்றை உருவாக்கி “போதகராக” செயலாற்றும் திரு.பவுல் (போல்) சிவராசா சற்குணராஜா, என்பவர் இன்றையதினம் “ஒன்லைன்” (வீடியோக் கமெரா) மூலம் “பெரிய வெள்ளி ஆராதனையை” சுவிஸில் நடத்தி உள்ளார்.

இதேவேளை இன்றையதினம் சுமார் இருமணித்தியாலமாக நடைபெற்ற ஆராதனையில், (வீடியோ பதிவு நேரம்.. 1:49.45 முதல் – 1:50.35 வரை..) “யாரெல்லாம் மிஷனுக்குரிய காணிக்கையை பேங்க் (வங்கி) மூலம் அனுப்புகிறீர்களோ, நீங்கள் வழமை போல் அனுப்புங்கள்.. ஏனைய மக்களை மிகவிரைவில் நான் சந்திப்பேன், அப்போது உங்கள் காணிக்கையை மறவாது கொண்டு வாருங்கள்.. அப்போது கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நிறைவாய் ஆசீர்வதிப்பார்” எனக் குறிப்பிட்டது தான் “மிகவும் சிறப்பான ஆசீர்வாதம்”.

மேற்படி போதகர் திரு.பவுல் (போல்) சிவராசா சற்குணராஜா அவர்களும், அவரது சபையை சேர்ந்தவர்களும் “கொரோனா வைரஸ்” தாக்குதலில் இருந்து, மீண்டெழ வேண்டுமென “ஜெபிப்பதுக்காக” இவர்கள் சபையின் “வாட்சப் குரூப்பில்” ஜெபித்த அதேவேளை,

“உண்மை செய்திகளை” வெளியிட்டதுக்காக, “ஊழியருக்கும் PMC திருச்சபைக்கும் எதிராக செயல் படுகின்ற பொல்லாத வானமண்டலத்தின் ஆவிகளை கடிந்து கட்டி ஜெபிப்போம்” எனவும் குறிப்பிட்டு ஜெபித்தது தான்… “ஹை லைட்”.

பிரபல ஊடகமென “உண்மையின் தரிசனத்தை” வெளிக்கொணரும் ஊடகங்கள் உட்பட சில ஊடகங்கள் “உண்மையை மூடிமறைத்து” தாம் “மதம்” சார்ந்தவர்களாக செயல்படும் போது,

“அதிரடி” இணையம் உண்மைகளை வெளிக்கொணரும் நோக்கில் செயல்படும் அதேவேளை, “அதிரடி” இணையமானது, “இன, மதம், அரசியல்” வேறுபாடுகளுக்கு அப்பால், “நடுநிலையுடன்” ஆரம்பித்த காலம் முதல், கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக செயல்படுவது அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் & படங்கள்… “உண்மைவிளம்பி”..

https://www.youtube.com/watch?v=Cy3BlTJvun4&feature=youtu.be

https://www.youtube.com/ff562a9e-a6ec-4579-819e-fbe852063b50

https://www.youtube.com/watch?v=Cy3BlTJvun4&feature=youtu.be&t=5736

https://www.youtube.com/watch?v=Cy3BlTJvun4&feature=youtu.be

https://youtu.be/Cy3BlTJvun4

யாழில் “கொரோனா”வை பரப்பிய, சுவிஸ் தமிழ் போதகர் பெரும் “தில்லுமுல்லு” பேர்வழி.. (வீடியோவுடன் வெளிச்சத்துக்கு வரும் சில தகவல்)

Comments (0)
Add Comment