சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

திருமதி.சுதா செல்வி அவர்கள், கடந்த வருடம் இலங்கை சென்று இருந்த போது, புங்குடுதீவு முதலாம், நான்காம் வட்டாரத்தை உள்ளடக்கிய “பொன்னன் கிணறு” சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாவிப்பதாகவும், அதனை முழுமையாகத் திருத்தி புதிதாக கட்டித் தருமாறும் கோரிக்கை வைப்பதாக அங்கிருந்தபடியே ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கு தெரிவித்து இருந்தார். நாம் இதுகுறித்து, எழுத்து மூலம் கோரிக்கை வைத்தால், அதனை ஏற்று செய்து கொடுப்போமென கடந்த நிர்வாக சபையால் முடிவெடுத்து இருந்தோம்.

அதன் நிமித்தம் மேற்படி “பொன்னன் கிணற்றை” முழுமையாகத் திருத்தித் தருமாறு, சுமார் இருபத்தைந்து குடும்பங்கள் கையொப்பமிட்டு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, திருத்தி புதிதாக கட்டிக் கொடுப்பதென தீர்மானித்து கடந்த கூட்டத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம், இன்றையதினம் (28.06.2018) காலை, “சுவிற்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” சார்பாக, புங்குடுதீவு பொன்னன் கிணறை முழுமையாகத் திருத்தி, புதிதாக கட்டிக் கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியது.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான திருமதி.த.சுலோசனாம்பிகை, புங்குடுதீவில் இப்பிரதேசத்து மக்களினால் வேலணை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படட, பிரதேச சபை உறுப்பினரான திரு.வசந்தகுமார், மற்றும் அப்பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இன்று ஆரம்பமாகிய மேற்படி “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, புதிதாக கட்டிக் கொடுக்கும் வேலை மிகவிரைவில் பூர்த்தியாகுமென அறிய தந்துள்ளனர். இதேவேளை அண்மையில் தெரிவு செய்யப்படட “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நிர்வாகத்தின்” முதலாவது நடவடிக்கையாக இந்த செயற்பாடு அமைந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது. நன்றி…

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
28.06.2018

Comments (0)
Add Comment