“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், பத்தொன்பதாம் ஆண்டு “நினைவு நாள்” நாளை.. (வீடியோ & படங்கள்)

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவு நாள் நாளை.. (வீடியோ & படங்கள்)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோர் கடந்த 02.09.1999 அன்று வவுனியாவில் வைத்து “பாசிச நயவஞ்சகர்களினால்” படுகொலை செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இவர்களின் நினைவுதினம் நாளை உலகெங்கும் உள்ள புளொட் தோழர்கள், ஆதரவாளர்களினால் நினைவு கூறப்படுவதுடன், இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் உறவுகள், தோழர்கள், நண்பர்களினால் “நினைவஞ்சலி சுவரொட்டி” வடகிழக்கு எங்கும் பரவலாக ஒட்டப்படுவதுடன், இவர்களின் நினைவாக புளொட் வெளிநாட்டுக் கிளைத் தோழர்கள் சிலரின் நிதிப் பங்களிப்பில், பல்வேறு “வாழ்வாதார உதவித் திட்டங்களும்,” அதிரடி” இணையத்தின் சார்பில் நடைபெறுகின்றது.

தகவல் & வீடியோ உதவி.. சுவிஸ்ரஞ்சன் -புளொட்.

(** இதேவேளை கடந்த சில வருடங்களாக, இவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட பிரசுரங்கள், சுவரொட்டிகளில் சில புகைப்படங்கள் இவை..)

வவுனியாவில் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், இறுதி அஞ்சலி (1999) நிகழ்வு.. (முழுமையான வீடியோ வடிவில்)

Comments (0)
Add Comment