“புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், நினைவுதினத்தில் உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-03

“புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், நினைவுதினத்தில் உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-03

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் பத்தொன்பதாவது நினைவுதினம் “புளொட்” மற்றும் அதன் அரசியல் பிரிவான “டிபிஎல்எப்” தோழர்கள், ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகின்றது…

மேற்படி தோழர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களையும், மற்றும் “விடுதலைப் போராட்டத்தில் மரணித்த” புளொட் செயலதிபர் உட்பட மரணித்த புளொட் தோழர்கள், ஏனைய அனைத்து இயக்கத் தலைவர்கள் & அனைத்துப் போராளிகள், பொதுமக்கள் ஆகியோரின் நினைவாக, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) வெளிநாட்டுக் கிளைத் தோழர்கள் சிலரின் நிதிப் பங்களிப்பில், “அதிரடி” இணையத்துக்கு ஊடாக, இலங்கையில் “வாழ்வாதார உதவிகள்” மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக இன்றையதினம் மறைந்த தோழர் மாணிக்க தாசன் மற்றும் தோழர்கள் நினைவாக “அதிரடி” இணையதளத்தின் சார்பில், வெளிநாட்டு புளொட் தோழர்கள் சிலரின் நிதி அணுசரனையில், வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய மாணவர்கள் இருவருக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் வைபவம், தமிழ் தேசிய இளைஞர் கழக செயலாளர் திரு.பிரான்சிஸ் கெர்சோன் (ஹரீஷ்) அவர்களின் ஒழுங்கமைப்பில், அவ்வித்தியால அதிபர் திருமதி மேரி மோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.காண்டீபன், பண்டாரவன்னியன் சனசமூக நிலைய தலைவர் திரு.கணேசமூர்த்தி, திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ரவி, வவுனியா நகரசபை உறுப்பினர் காண்டீபனின் மக்கள் நலத்திட்ட ஆலோசகர் திரு.சோதிநாதன், அவ்வித்தியாலய ஆசிரியர்களான திரு.திலகரெட்ணம், திருமதி.ரோய் ஜெயக்குமார் ஆகியோருடன் அவ்வித்தியாலய மாணவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.காண்டீபன், “மறைந்த தோழர்களை நினைவு கூர்ந்து இதுபோன்ற வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்து வரும் “அதிரடி” இணையத்துக்கும், நிதி உதவியளித்த புலம்பெயர் தோழர்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய அதிபர் திருமதி மேரி மோகன் அவர்கள் “கல்விக்கு முதலிடம் கொடுத்து, தேவையறிந்து உதவி செய்த அனைவரையும் பாராட்டி நன்றியெனக்” குறிப்பிட்டார்.

மேற்படி மாணவர்கள் இருவரும் இறுதியுத்தத்தின் போது பெற்றோரை இழந்து உறவுகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” உதவி வழங்கல்.. -பகுதி-01 (படங்கள் & வீடியோ)

“புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-02

Comments (0)
Add Comment