“புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், நினைவுதினத்தை முன்னிட்டு உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-04

“புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசனின், நினைவுதினத்தை முன்னிட்டு உதவி வழங்கல்.. (படங்கள் & வீடியோ) -பகுதி-04

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் பத்தொன்பதாவது நினைவுதினம் “புளொட்” மற்றும் அதன் அரசியல் பிரிவான “டிபிஎல்எப்” தோழர்கள், ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்பட்டது நீங்கள் அறிந்ததே…

மேற்படி தோழர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களையும், மற்றும் “விடுதலைப் போராட்டத்தில் மரணித்த” புளொட் செயலதிபர் உட்பட மரணித்த புளொட் தோழர்கள், ஏனைய அனைத்து இயக்கத் தலைவர்கள் & அனைத்துப் போராளிகள், பொதுமக்கள் ஆகியோரின் நினைவாக, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) வெளிநாட்டுக் கிளைத் தோழர்கள் சிலரின் நிதிப் பங்களிப்பில், “அதிரடி” இணையத்துக்கு ஊடாக, இலங்கையில் “வாழ்வாதார உதவிகள்” மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக இன்றையதினம் மறைந்த தோழர் மாணிக்கதாசன் மற்றும் தோழர்கள் நினைவாக “அதிரடி” இணையதளத்தின் சார்பில், வெளிநாட்டு புளொட் தோழர்கள் சிலரின் நிதி அணுசரனையில், வவுனியா கற்குளம் பிரதேச மதுராநகர் “மலரும் மொட்டு” முன்பள்ளிக்கு மின்சார இணைப்பை பெறும் பொருட்டு நிதிப் பங்களிப்பு வழங்கப்பட்டது.

வவுனியா கற்குளம் பிரதேச மதுராநகர் “மலரும் மொட்டு முன்பள்ளிக்கு” மின்சார இணைப்பை பெறும் பொருட்டு நிதிப் பங்களிப்பு வழங்கும் வைபவம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) மற்றும் அதன் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (டிபிஎல்எப்) உபதலைவர்களில் ஒருவரும், மத்தியகுழு உறுப்பினர்களில் ஒருவரும், வவுனியா மாவட்டப் பொறுப்பாளரும், வவுனியா நகரசபை முன்னால் உப நகரபிதாவும், தற்போதய நகரசபை உறுப்பினருமான திரு.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட நிதிப் பொறுப்பாளர் திரு.நிஷாந்தன், பிரதேச சபை உறுப்பினர் திரு.உத்தரியநாதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாலர் திரு.கரிஸ், அப்பிரதேச கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ராஜன், மலரும் மொட்டு முன்பள்ளி ஆசிரியர் திருமதி.நிறோ மற்றும் அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

இங்கு கருத்துத் தெரிவித்த புளொட் அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளரான திரு.சந்திரகுலசிங்கம் (மோகன்) “மறைந்த தோழர்களை நினைவு கூர்ந்து இதுபோன்ற வாழ்வாதாரத் திட்டங்களை முன்னெடுத்து வரும் “அதிரடி” இணையத்துக்கும், நிதி உதவியளித்த புலம்பெயர் தோழர்களுக்கும் நன்றி எனவும், இந்த கிராமம் புளொட் அமைப்பின் குடியேற்றத் திட்டத்தினால் நிறுவப்பட்டது என்பதையும், இதனை நிறுவியவர்களில் ஒருவரான தோழர்.மாணிக்கதாசனின் நினைவாக இதனை வழங்குவது, உண்மையில் அவருக்கு நாம் செய்யும் அஞ்சலி” எனக் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த வவுனியா கற்குளம் மதுராநகர் “கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ராஜன், அவர்கள் “எமது முன்பள்ளிக்கு “கற்றல் உபகரணங்கள்” வழங்குவதாகவே மோகண்ணார் முதலில் தீர்மானித்து தெரிவித்து இருந்தார். ஆயினும் எமது முன்பள்ளியின் அத்தியாவசிய தேவையான “மின்சார வசதியின்மை” குறித்து எடுத்தியம்பியவுடன், உடனேயே “மின்சார வசதி பெறுவதுக்கான” நிதிப் பங்களிப்பை “அதிரடி” இணையத்தின் மூலம் வழங்கினார்கள்.., கல்விக்கு முதலிடம் கொடுத்து, தேவையறிந்து உதவி செய்த அனைவரையும் பாராட்டி நன்றியெனக்” குறிப்பிட்டார்.

தகவல் & புகைப்பட உதவி.. தோழர் சதீஷ் -வவுனியா.

Comments (0)
Add Comment