புங்குடுதீவின் பெருமையை எடுத்துக் காட்டும், “ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோவில் நுழைவாயில்” திறப்புவிழா..! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவின் பெருமையை எடுத்துக் காட்டும், ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோவில் நுழைவாயில் திறப்புவிழா..! (படங்கள் & வீடியோ)

 

இலங்கையில் பிரமிப்பூட்டும் வகையில், வடபகுதியின் புங்குடுதீவில் வரவேற்கும் “ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோவில், முகப்புக்கோபுர நுழைவாயில்” திறப்புவிழா நேற்றையதினம் சிறப்பாக நடைபெற்றது.

 

புங்கை மண்ணில் (புங்குடுதீவில்) கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருவோரை மற்றும் புங்குடுதீவிற்குள் சுற்றுலாப் பயணிகளாக வருவோரை வரவேற்கும் வகையிலும், நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு போன்ற அனைத்து தீவுப்பகுதிகளுக்கு செல்வோரை, வரவேற்கும் வகையிலும், இலங்கையில் பிரமிப்பூட்டும் நுழைவாயில் தனிநபர் ஒருவரால் அவரது மனைவியின் நினைவாக கட்டப்பட்டு உள்ளது.

 

மேற்படி “ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோவில், முகப்புக்கோபுர நுழைவாயில்” மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு உள்ளதுடன், “முகப்புக்கோபுர நுழைவாயிலின்” இருபுறமும் மக்கள் இளைப்பாறிச் செல்லும் வகையில் கட்டப்பட்டு உள்ளதும் வியக்கத்தக்க வகையில் உள்ளது.

 

அமரத்துவமடைந்த திருமதி மஞ்சுளா கிருபானந்தன் அவர்களின் நினைவாக, அவரது கணவர் திரு.முத்துக்குமாரு கிருபானந்தன் அவர்களின் முழுமையான நிதி செலவிலும், ஏற்பாட்டிலும் கட்டி முடிக்கப்பட்டு நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

(நேற்றையதின திறப்புவிழா அன்று மாலை மற்றும் இன்று காலை எடுத்த இரு வீடியோக்களும் இணைக்கப்பட்டு உள்ளது)

 

தகவல் & படங்கள் & வீடியோ… (“அதிரடி” இணையத்துக்காக, புங்குடுதீவில் இருந்து) திரு.வனோஜன் & புங்கையூரான்.

 

Comments (0)
Add Comment