புங்குடுதீவில் புலமைப்பரிசில் பரீட்சையில், இரண்டு மாணவர்கள் அதிசித்தி அடைந்துள்ளனர்…

புங்குடுதீவில் புலமைப்பரிசில் பரீட்சையில், இரண்டு மாணவர்கள் அதிசித்தி அடைந்துள்ளனர்… (படங்கள்)

இன்றையதினம் வெளியாகிய முடிவின்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் புங்குடுதீவில் யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்விகற்ற இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வசிகரன் மேதையன் 176 புள்ளிகளையும், குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளையும் பெற்று சித்தியடைந்துள்ளனர். இவர்களுக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இதேவேளை “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பினால், மேற்படி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு “யாழ் அன்பொளி கல்வி நிலையத்தினால்” நடாத்தப்பட்ட பயிற்சிப் பரீட்சை வினாத்தாள்களை பெற்றுக் கொள்வதற்கான சிறியதொரு நிதி உதவித் தொகை வழங்கப்பட்டது.

மேற்படி நிதி உதவித் தொகையை, “தாயகம்” அமைப்பின் லண்டன் பிரதிநிதிகள் வழங்கி, புங்குடுதீவு தாயகம் சமூக சேவையத்தின் செயலாளர் செல்வி.ஜெகநந்தினி முத்துக்குமாரு மூலம் 20.02.2018 அன்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

மேற்படி இருமாணவர்கள் உட்பட புங்குடுதீவில் சித்தியடைந்த அனைத்து மாணவர்கள் மற்றும் இலங்கை பூராவும் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

Comments (0)
Add Comment