தீவகங்களின் நலத்திட்டத்துக்காக, “புங்குடுதீவு பிரித்தானிய ஒன்றியத்தினர்” வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு..! (படங்கள்)

தீவகங்களின் நலத்திட்டத்துக்காக, “புங்குடுதீவு பிரித்தானிய ஒன்றியத்தினர்” வடமாகாண ஆளுநருடன் சந்திப்பு..! (படங்கள்)

புலம்பெயர் அமைப்புகளுடன் சந்திப்புகளை மேற்கொள்வதற்காக ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வடமாகாண ஆளுநரை லண்டன் புங்குடுதீவு ஒன்றிய பிரதிநிதிகள் (புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியா) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மேற்கு லண்டனில் அமைந்துள்ள பின்னர் பிரதேசத்தில் நேற்று (8) மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

யாழ் குடாநாட்டின் தீவகப் பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் பேச்சு நடத்தினர். குறிப்பாக தீவகத்தில் வாழும் மக்களுக்கான குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டது.

புங்குடுதீவு லண்டன் வாழ் சமூகத்தினால் வேலணை பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வதற்கான நிதி சேகரிக்கப்பட்ட போதும் அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் அங்கு தடைகள் காணப்படுவதாக பிரதிநிதிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

மேலும் தீவகப் பகுதிகளில் பொருளாதாரத்தினை அதிகரிக்கச் செய்து மக்கள் அங்கு மீளக்குடியமர வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும், தீவக பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்தும் புங்குடுதீவு ஒன்றியம் விரிவாக ஆளுநருடன் கலந்துரையாடியது.

“புலம்பெயர்ந்து வாழும் புங்குடுதீவு தீவக மக்கள், இத்தனை காலம் தாய் நாட்டு மக்களுக்கு, தமது ஊருக்கு ஆற்றிய சேவைகளை மனதார பாராட்டுவதாக” தெரிவித்த ஆளுநர் “புங்குடுதீவு ஒன்றியம் மேற்கொள்ளும் அபிவிருத்தி பணிகளுக்கு மத்திய அரசின் உதவிகளையும் சேர்த்து தருவதாக” உறுதியளித்தார்.

*** இதேவேளை எதிர்வரும் வியாழக்கிழமை மாலை சுவிஸ் வாழ் வர்த்தகர்கள் உட்பட, பொதுமக்களுடனான சந்திப்புக்கு “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” ஏற்பாடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” வெளியிட்டுள்ள பிரசுரத்தில்,…

நாளைமறுதினம் 11.10.2018 அன்று வியாழக்கிழமை மாலை 05.30 க்கு (17.30) பேர்ண் மாநிலத்தில் Bümpliz str – 21, 3027 BERN எனும் முகவரியில் ஏற்பாடு செய்து உள்ளோம் எனவும்,

இச்சந்திப்பில் சுவிஸ் வாழ் வர்த்தக பெருமக்கள் உட்பட அனைத்து பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன்,..
“அரசியலை தவிர்த்து” மக்களுக்கு சேவையாற்ற முன்வரும் அனைத்து வடகிழக்கு மக்களையும் அன்புடன் அழைக்கிறோம்,

இடம்:- பேர்ண் மாநிலத்தில் Bümpliz str – 21, 3027 BERN
காலம் & நேரம்:- 11.10.2018 வியாழக்கிழமை மாலை 05.30 க்கு (17.30)

மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கும்….
077.9485214, 079.9373289

“மக்களின் வாழ்வை வளப்படுத்த ஒன்றுபடுவோம்,
ஒன்றுபட்டு மக்களின் வாழ்வை வளப்படுத்துவோம்”

எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தகவல் & படங்கள்… வடமாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு.

வடமாகாண ஆளுநருடன் சிறப்பாக நடைபெற்ற, லண்டன் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பு..! (படங்கள்)

Comments (0)
Add Comment