லண்டனில் வடமாகாண ஆளுநருடன், “இலங்கையில் வாழாத இலங்கையர் (NRSL)” சந்திப்பு..! (படங்கள்)

லண்டனில் வடமாகாண ஆளுநருடன், “இலங்கையில் வாழாத இலங்கையர் (NRSL)” சந்திப்பு..! (படங்கள்)

லண்டனில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வரும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்றுமுன்தினம் இரவு லண்டன் Watford அமைந்துள்ள imperial சைனா விடுதியில் “இலங்கையில் வாழாத இலங்கையர் (NRSL)” என்ற அமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினார் .

இந்த சந்திப்பில் மருத்துவர்கள், சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், உள்ளிட்ட புத்திஜீவிகள் கலந்து கொண்டிருந்தனர் .

நல்லாட்சி அரசு மலர்ந்த பின்பு வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பாராட்டிய அவர்கள் ஆளுநர் தமிழ் மொழியில் பேசுவது மட்டுமல்ல தமிழ் மக்களின் பிரச்சினைகள் மீது கொண்டுள்ள அக்கறையும் தாம் பாராட்டுவதாக தெரிவித்தனர்.

நிரந்தர தீர்வுக்கு மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகள் என்ன? என்பது குறித்தும், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது தொடர்பாகவும், வட மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட ஆளுநர்..,

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை மறுபக்கத்தில் அம்மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்துவது கட்டாயமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

“எனது ஐரோப்பிய பயணம் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாதது, வட மாகாணத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள், முதலீடுகளைச் செய்து அங்கு பொருளாதாரத்தினை வளப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். வாரம் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் என்னை சந்தித்து வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகள் பலவற்றை என்னால் முடிந்த அளவு அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படுத்தி வந்திருக்கின்றேன்.

ஆனாலும் அங்கு பெருமளவில் வருவோர் இளைஞர்களாக இருக்கின்றனர், அவர்கள் என்னிடம் தமது வாழ்க்கைக்கு ஒரு வேலையில்லாது உள்ளது என்று கூறுகின்றனர். அதற்காக பல தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும், அப்போது தான் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என நான் நினைக்கின்றேன் அதுவே எனது வருகையின் நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.

.

Comments (0)
Add Comment