புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிக்கும் நிகழ்வு..! (அறிவித்தல்)

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிக்கும் நிகழ்வு..! (அறிவித்தல்)

இலங்கை முழுவதும் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 “புலமைப் பரிசில்” பரீட்சையில் “புங்குடுதீவில்” அதிகூடிய புள்ளிகளை பெற்று வெற்றியடைந்த, புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களான செல்வன்.வசிகரன் மேதையன் 176 புள்ளிகளையும், செல்வி.குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் ஆகவே மேற்படி மாணவர்கள் இருவரையும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டுமெனும் கோரிக்கை புங்குடுதீவு மக்களினால், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்டது.

இதனைஅடுத்து இருதினங்களுக்கு முன்னர் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) தலைமையில் கூடிய நிர்வாக சபையினர், இதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டதுடன், இரண்டு மாணவர்களுக்கும் தலா இருபத்தையாயிரம் ரூபா வீதம் இலங்கை வங்கியில் வைப்பில் இட்டு, அவர்களின் “எதிர்கால கல்விக்கு” உதவுவதென எடுத்த முடிவின் பிரகாரம் இலங்கை வங்கியில் வைப்பில் இடப்பட்டு உள்ளது.

இதனை மிகவிரைவில் அவ் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்படும் என்பதையும், அதன்பின்னர் அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்களுடன் முழுமையான செய்தி தரப்படும். நன்றி..

(குறிப்பு..; “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை அடுத்தமாத முடிவில் (25.11.2018) அன்று மாலை 04.30 க்கு (16.30) நடத்துவதென தீர்மானித்து உள்ளோம், ஏனெனில் இவ்வருட முடிவுக்குள் அனைத்து கணக்கு விபரங்கள், ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கத்தில் அறியத் தரவேண்டி உள்ளதினால் இக்கூட்டத்தை ஒழுங்கு பண்ணி உள்ளோம்.)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
25.10.2018

Comments (0)
Add Comment