சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு அமைய, “புங்குடுதீவில்” முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தனால், 15 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு..! (படங்கள்)

சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு அமைய, புங்குடுதீவில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தனால், 15 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு..! (படங்கள்)

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.என்.விந்தன் கனகரட்ணம் அவர்களால், புங்குடுதீவில் ரூபா இரண்டு இலட்சத்து இருபத்து ஐந்து ஆயிரம் பெறுமதியான பதினைந்து துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

இவ்வருட ஆரம்பத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” “வேரும் விழுதும்” விழாவுக்கு பிரதம விருந்தினராக வந்திருந்த போது, புங்குடுதீவு சுவீஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளின் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் வடக்கு மாகாண சபையின் யாழ். மாவட்ட உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கிட்டின் மூலம் யா/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட வித்தியாலயம் மற்றும் யா/ புங்குடுதீவு ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயம் என்பவற்றிற்கு தூர தேசங்களில் இருந்து கால்நடையாகச் செல்லும் மாணவர்களுக்கு ரூபா இரண்டு இலட்சத்து இருபத்து ஐந்து ஆயிரம் பெறுமதியான 15 துவிச்சக்கர வண்டிகளை 26.10.2018 அன்று யா/ புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட வித்தியாலய மண்டபத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

பாடசாலையின் அதிபர் திருமதி சிவனேஸ்வரி இராசரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான திருமதி யசோதினி சாந்தகுமார், திரு. கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், திரு. கருணாகரன் நாவலன், வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்கள அதிகாரி திரு. கலையழகன், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதி திரு. தயாபரன் (தயா) மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் திருமதி ஜெயரூபி கருணானந்தன், தமிழ்ப் பாட ஆசிரியர் ஆ.டேவிட்சன், வரலாற்றுப் பாட ஆசிரியர் திருமதி நளினி தினேஸ்குமார் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் பதிவுகளை படங்களில் காணலாம். ..

(தகவல் & படங்கள்; திரு.விந்தன் கனகரத்தினம் -முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்)

Comments (0)
Add Comment