புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற, “சிறுவர் தின” நிகழ்வுகள்..! (வீடியோ & படங்கள்)

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற, “சிறுவர் தின” நிகழ்வுகள்..! (வீடியோ & படங்கள்)

புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை காலை “சிறுவர் தின” நிகழ்வு புங். அம்பலவாணர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி சிறுவர்தின நிகழ்வானது, முதலில் விருந்தினர்களின் வரவேற்பு, மங்கள விளக்கேற்றலைட் தொடர்ந்து, வணக்கத்துக்குரிய முரளிதர சர்மா (புங்குடுதீவு தெங்ஙத்திடல் பிள்ளையார் ஆலய குரு), வணக்கத்துக்குரிய செபமாலை ஜெபஜீவன் (பங்குத்தந்தை, புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயம்) ஆகியோரின் ஆசியுரையுடன் ஆரம்பமாகியது.

மேற்படி நிகழ்வானது திருமதி.த.சுலோசனாம்பிகை (புங்குடுதீவு தாயகம் அமைப்பின் தலைவர்) அவர்களின் தலைமையில், திரு.க.குகபாலன் (புவியியல்துறை பேராசிரியர்) அவர்கள் பிரதம விருந்தினராகவும், திருமதி.கி.சாரதாதேவி (கல்விக்கோட்டப் பணிப்பாளர்-தீவகம்), திரு.கு.சண்முகலிங்கம் (தவிசாளர், சமாதான நீதவான், சமூக சேவகர்), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி நிகழ்வில் புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் வரவேற்பு நடனம், கவிதை வாசிப்பு, நாட்டிய நிகழ்வுகள், நாடகம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் கனடாவில் இருந்து தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்த திருமதி.கோபாலகிருஷ்ணன் அருள்மதி, திருமதி.சுப்பிரமணியம் ஞானாம்பிகை ஆகியோர் முன்பு அன்பளிப்பு செய்த சிறிய அளவிலான “கற்றல் உபகரணங்களுடன்”, திரு.திருமதி சேனாதிராஜா நினைவாக வழங்கப்பட்ட உதவிகளுடன் மேற்படி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன், கலந்து கொண்ட மாணவர்களும், கலைநிகழ்வு வழங்கிய அனைவரும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்..

Comments (0)
Add Comment