வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-002

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-002

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம் சுவிஸ்லாந்த்து நாட்டுக்கும் விஜயம் செய்தார்.

சுவிஸில் கடந்த மாதம் பத்தாம் திகதி (10.10) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், நடைபெற்ற, வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்றவேளை ஆளுனர், வடக்கின் தற்போதைய நிலைமை, தேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

இதேவேளை சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் சார்பில், அதன் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) “புங்குடுதீவின் அபிவிருத்தி சார்ந்தும், புங்குடுதீவில் உள்ள மக்களின் நன்மை சார்ந்தும்” குடிநீர், வீதி திருத்தம், மின்சாரவசதி உட்பட குளங்கள் புனரமைப்பு சம்பந்தமான பல கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைத்து இருந்தார்.

இதுக்கு பதிலளித்த வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்கள் “தாம் இலங்கை சென்றதும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்து தருவதாக” உறுதி அளித்து இருந்தார்.

இதன் முதல்கட்டமாக, “வடமாகாண ஆளுநர்” திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களின் பணிப்புக்கு இணங்கவும், “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சனின் வேண்டுகோளுக்கு இணங்கவும், உத்தியோகபூர்வமாக வடமாகாண ஆளுநரின் செயலாளரான “புங்குடுதீவு மண்ணின் மைந்தன்” திரு.இ.இளங்கோவன், கமநல சேவையின் பெரும்பாக உத்தியோகத்தர் திரு.நா.முருகதாஸ், ஏனைய அதிகாரிகள் ஆகியோருடன், தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்றுள்ள “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.பா.தயாபரன் (தயா), ஒன்றிய உறுப்பினரான திரு.சுதாகரன் ஆகியோர் நேரடியாக சென்று இன்று முதல்கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு “மின்விளக்கு பொருத்துதல்” சம்பந்தமான முயற்சி குறித்த செய்தியை ஏற்க்கனவே பதிவிட்டு இருந்தோம். (அதுகுறித்த செய்தியை கீழே இணைத்து உள்ளோம்)

இதன் அடுத்தகட்டமாக நேற்றுமுன்தினம் பிரதேச செயலாளர் திருமதி.வாசுதேவன் மற்றும் காணி அபிவிருத்தி, வீதிகள் புனரமைத்தல் பொறுப்பாளர் உட்பட பல அதிகாரிகளுடன், உத்தியோகபூர்வமாக வடமாகாண ஆளுநரின் செயலாளரான “புங்குடுதீவு மண்ணின் மைந்தன்” திரு.இ.இளங்கோவன், கமநல சேவையின் பெரும்பாக உத்தியோகத்தர் திரு.நா.முருகதாஸ், ஏனைய அதிகாரிகள் ஆகியோருடன், தனிப்பட்ட விஜயமாக இலங்கை சென்றுள்ள “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.பா.தயாபரன் (தயா), ஒன்றிய உறுப்பினரான திரு.சுதாகரன் ஆகியோர் நேரடியாக சென்று உரையாடி இருந்தனர்.

இதன்போது புங்குடுதீவு குறிகாட்டுவான் வீதி அபிவிருத்திக்கு வடமாகாணசபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினத்தின் அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிதி ஒதுக்கி உள்ளதினால், அத்துடன் ஏற்கனவே வடமாகாண ஆளுநரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் “ஆலடி வல்லன் வீதி, ஆலடிச்சந்தி சுற்றுவட்ட வீதி (ரவுண்டர் போர்ட்) ஆகியன நிறைவேற்றப்பட்டு உள்ளதினால் (நிறைவேற்றப்பட்டு வருவதினால்), வல்லன் முருகன் வீதி, சென்சேவியர் வீதி ஆகியனவை திருத்தி அமைப்பதுக்கான வேலைகள் “சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற உள்ளதையும்…,

ஏற்கனவே வடமாகாண ஆளுநரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஊரதீவு வண்ணான்குளம், இறுப்பிட்டி நாச்சிமார்குளம் போன்றவை புனரமைக்கப்பட்டு உள்ளதினால், வல்லன்குளம் புனரமைப்பு, பெரியகிறாய், சின்னகிறாய் மேலதிக திருத்த வேலைகள், இவற்றை கள்ளியாற்றுடன் இணைக்கும் இணைப்பு வேலைகளை “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளுக்கு இணங்க, வடமாகாண ஆளுநரின் செயற்திட்டத்தின் கீழ் மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த பிரதேசங்களை வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இளங்கோவன் மற்றும் அதிகாரிகளுடன் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களும் சென்று பார்வையிட்டு இருந்தனர். இதேவேளை புங்குடுதீவு “வெளிச்ச வீடு” புனரமைத்துள்ளது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், அதனை நேரடியாக சென்று பார்வையிட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தவிர மடத்துவெளி, ஊரதீவு பிரதேசங்களுக்கு “மின்விளக்கு” பொருத்துவதுக்கு, “ஒன்றியத்தின்” சார்பில் வடமாகாண ஆளுனருடன் உரையாடியதும், “ஒன்றியத்தின் பொறுப்பில்” செய்வதுக்கு, அதுக்குரிய நிதியை பொறுப்பேற்றுள்ளதும் “மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய நிர்வாக சபையை சேர்ந்த” அப்பிரதேச “ஒன்றிய முக்கியஸ்தர்கள்” தான்.. ஒன்றியத்தின் நிர்வாகசபை எடுக்கும் முடிவு, தனித்து ஒன்றிய தலைவர் எடுக்கும் முடிவு அல்ல..

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” செயற்பாடுகள் குறித்து எவரும் தேவையற்ற விமர்சனங்களை முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களில் வைப்பதை விட, ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்றவர்களுடன் நேரடியாக தொலைபேசி மூலம் கதைக்கலாம் அல்லது ஒன்றியத்தின் மின்னஞசலுக்கு எழுதினால் பதிலளிக்க நாம் தயார்.. இதைவிடுத்து எவராயினும் “பச்சோந்திகளாக” தமது சுரண்டலில் கை வைத்து விட்டார்களே எனும் பொறாமையில் “ஊர் ஒற்றுமையை” குலைக்கும் வகையில் செயல்பட்டால், அதுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்பதை “நிர்வாக சபை” சார்பாக ஆணித்திரமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.. நன்றி..

(குறிப்பு..; “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை அடுத்தமாத முடிவில் (25.11.2018) அன்று மாலை 04.30 க்கு (16.30) நடத்துவதென தீர்மானித்து உள்ளோம், ஏனெனில் இவ்வருட முடிவுக்குள் அனைத்து கணக்கு விபரங்கள், ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கத்தில் அறியத் தரவேண்டி உள்ளதினால் இக்கூட்டத்தை ஒழுங்கு பண்ணி உள்ளோம்.)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
03.11.2018

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001

Comments (0)
Add Comment