பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “காற்றுவழிக் கிராமம் 2018″… (அறிவித்தல்)

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “காற்றுவழிக் கிராமம்” 2018… (அறிவித்தல்)

புங்குடுதீவு நலன்புரிச்சங்கம் – பிரித்தானியா நடாத்தும் வருடாந்த மக்கள் ஒன்று கூடலான “காற்றுவழிக் கிராமம்” எனும் நிகழ்வு, வரும் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று Harrow leisure centre இல் இடம்பெறவுள்ளது.

பிரித்தானியாவில் வசிக்கும் புங்குடுதீவு உறவுகள், நலன்விரும்பிகள் மட்டுமல்லாது பிரித்தானியாவில் வாழும், அனைத்தூர் தமிழ் பேசும் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்..

பல்வேறு கலைநிகழ்வுடன் “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரையும் அன்போடு வரவேற்கிறார்கள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்.

“அனைவரும் வருக, ஆதரவு தருக”..

இவ்வண்ணம்..
திரு.பிரேம் ரஞ்ஜீத் (தலைவர்)
திரு.சொக்கலிங்கம் யோகி (செயலாளர்)
மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள்,
-புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியா-

********************************************************

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (மறு அறிவித்தல்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதாவது, 09.12.2018 அன்று மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் நடத்துவதென தீர்மானித்து உள்ளோம், ஏனெனில் இவ்வருட முடிவுக்குள் அனைத்து கணக்கு விபரங்கள், ஒன்றியத்தின் செயற்பாடுகள் குறித்து பகிரங்கத்தில் அறியத் தரவேண்டி உள்ளதினால் இக்கூட்டத்தை ஒழுங்கு பண்ணி உள்ளோம்.

மேற்படிக் கூட்டத்தில், செயலாளரின் கடந்த கூட்டறிக்கை, பொருளாளரின் இவ்வருடக் கணக்கறிக்கை ஆகியவற்றுடன் நிர்வாகசபையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களான..

1) அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்தவுள்ள, 2019 க்கான “வேரும் விழுதும்” நிகழ்வு..
2) ஆளுநரின் முன்முயற்சியில் முன்னெடுக்கப்படும் புங்குடுதீவெங்கும் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை..
3) ஆளுநரின் முன்முயற்சியில் முன்னெடுக்கப்படும் குளங்கள் புனரமைப்புக்கான நடவடிக்கை..
4) ஆளுநரின் முன்முயற்சியில் முன்னெடுக்கப்படும் பெரியகிறாய், சின்னக்கிறாய் மேலதிக புனரமைப்பு நடவடிக்கை..
5) கடல்நீரை நன்னீராக்கும் நடவடிக்கை (இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள திரு.சத்தி அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்படும்)
போன்றவை தொடர்பாக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன..

இக்கூட்டத்தில் அனைத்து ஒன்றிய உறுப்பினர்களையும் (குறிப்பாக பொறுப்பில் உள்ளோர்) தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். (பொறுப்பில் உள்ள எவராயினும் தகுந்த காரணங்களின்றி மூன்று கூட்டத்துக்கு மேல் சமூகம் அளிக்காவிடில், அவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்) நன்றி..

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

03.12.2018

Comments (0)
Add Comment