சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம்.. நடந்ததென்ன?..! (படங்கள் & வீடியோ)

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம்.. நடந்ததென்ன?..! (படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான “கலந்துரையாடல் கூட்டம்” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில், நேற்றுமுன்தினம் (09.12.2018) மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் “தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லையென திரு.பன்னீர், திரு.கீதன், ஆகியோர் அறியத் தந்திருந்தனர். (அதேவேளை ஒன்றியப் பொறுப்பில் இருக்கும் திரு.நிமலன், திரு.இரவீந்திரன், திரு.பிரதீபன், திரு.அன்பு, திரு.பிரேம், ஆகியோர் எந்தவொரு காரணமும் தெரிவிக்காமல் இருப்பது குறித்து விளக்கம் கேட்டு முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.. -மறுநாள் திரு.நிமலன் தந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.-)

*** செயலாளர், பொருளாளரின் அறிக்கைகள்…

முதலில் கடந்த கூட்டறிக்கை செயலாளரினால் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து “ஒன்றிய பொருளாளர்” திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்களினால் இவ்வருட கணக்கறிக்கை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கையளிக்கப்பட்டு, அனைவராலும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. (விழாமலரில் கணக்கறிக்கை, வெளியிடப்பட உள்ளதினால், இதுவரை இவ்வருட சந்தா கட்டாத அன்பு உறவுகளே, உடன் இதனை செலுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.)

*** வடமாகாண ஆளுனருடன் இணைந்த செயற்பாடு….

இதனைத் தொடர்ந்து, சுவிஸில் நடைபெற்ற வடமாகாண ஆளுநரின் சந்திப்பின் போது, கலந்துரையாடப்பட்ட, புங்குடுதீவெங்கும் மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை, குளங்கள் புனரமைப்புக்கான நடவடிக்கை, பெரியகிராய், சின்னக்கிராய் மேலதிக புனரமைப்பு நடவடிக்கை, கடல்நீரை நன்னீராக்கும் நடவடிக்கை போன்றவைகள் குறித்தும் வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் உட்பட சிலருடன் உரையாடி முடிவெடுக்கப்பட்டது. (“கடல்நீரை நன்னீராக்கும் நடவடிக்கை” குறித்து அமெரிக்காவில் உள்ள திரு.சத்தி அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது.)

*** “ஒன்றியத்தின் ஜனநாயக அணி” எனும் போலித் துண்டுப்பிரசுரம்…

வடமாகாண ஆளுநரின் சுவிஸ் விஜயத்தின் போது, “ஒன்றியத்தின் ஜனநாயக அணி” எனும் பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் குறித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்களென குறிப்பிட்டவர்கள் “தமக்கும், அதுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையெனக்” குறிப்பிட்டபடியால், போலியான துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வன்மையாகக் கண்டிப்பதெனவும், இதுபோன்ற நடவடிக்கை எதிர்காலத்தில் தொடர்ந்தால், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதெனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவராலும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

*** வடமாகாண ஆளுநருடனான சந்திப்பு…

அதேபோல் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான “சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் “புங்குடுதீவின் அபிவிருத்தியை மட்டுமே” நோக்கமாகக் கொண்டு நடைபெற்றதால், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்வதெனவும் தெரிவிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

*** புங்குடுதீவு பிரான்ஸ் ஒன்றியத்தின் வேண்டுகோள்…

புங்குடுதீவு பிரான்ஸ் ஒன்றியம் ஜனவரி மாதம் ஐரோப்பாவில் உள்ள மூன்று புங்குடுதீவு ஒன்றியங்களும், (பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ்) இணைந்து “புங்குடுதீவை வளமாக்குவதுக்கு, இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடல்” குறித்த வாதப் பிரதிவாதங்களின் பின்னர், அக்கூட்டத்தில் “சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் திரு.இலட்சுமணன், திரு.ரமணன், திரு.சஞ்சய் உட்பட சுவிஸ் ஒன்றிய குழுவினர் கலந்து கொள்வதெனவும், “புங்குடுதீவில் தொழிற்சாலை அமைப்பது குறித்து முக்கியத்துவம் கொடுத்து அங்கு கதைக்க வேண்டுமெனவும், இதுக்கு இலங்கை அரசின் நிதியையும் பெற முயற்சி எடுக்க வேண்டுமெனவும்” தீர்மானிக்கப்பட்டது.

*** புங்குடுதீவின் நுழைவாயிலில் வைரவர்சூலம் பிரதிஷ்டை குறித்து…

புங்குடுதீவின் நுழைவாயிலான மடத்துவெளி பிரதேசத்தில் மும்மதத்தினரது சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள போதிலும், ஆரம்பகாலம் முதல் இருந்த “வைரவர் சூலத்தையும்” பிரதிஷ்டை செய்ய வேண்டுமென “சுவிஸ் ஒன்றியத்திடம்” முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, சம்பந்தப்பட்டவர்களுடன் “சுவிஸ் ஒன்றியத் தலைவர்” கதைத்து, உடனடியாக அதுக்குரிய அனுமதி பெறப்பட்டதுடன், கோரிக்கை முன்வைத்தவர்களினால் “வைரவர் சூலம்” செய்து தரப்பட்டவுடன், சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் அதனை பிரதிஷ்டை செய்யப்படுமெனவும் முடிவெடுக்கப்பட்டது.

*** வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன்…

இதேபோல் வடமாகாண ஆளுநரின் செயலாளரும், “மண்ணின் மைந்தருமான” திரு.இ.இளங்கோவன், அவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அனைவருடன் உரையாடிய போது, “சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் தலைவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததுடன், அங்குள்ள நிலைமைகள் குறித்தும் நீண்ட நேரமாக விளக்கம் அளித்தார்.

(அனைத்து தீவகங்களையும் ஒன்றிணைத்து அமைப்பு…)
இதன்போது விளக்கமளித்த திரு.இ.இளங்கோவன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, “நாம் புங்குடுதீவு எனும் ஒருவட்டத்துக்குள் மட்டும்” இருக்காது, அனைத்து தீவகங்களையும் ஒன்றிணைத்து, “தீவக அபிவிருத்திக் கழகம்” எனும் அமைப்பை உருவாக்கி செயற்பட வேண்டுமெனவும், இதன் மூலம் அனைத்து தீவகங்களும் ஒன்றிணைந்து செயற்பட முடியுமெனவும் தெரிவித்ததுடன், “சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று, ஆரம்பிக்கப்பட்ட “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை” ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும்,

சில அமைப்புக்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், மற்றும் தனிநபர்கள் உட்பட ஏற்கனவே ஒருசில மின்விளக்குகள் போடப்பட்டுள்ள போதிலும், இப்போதும் சிலரால் மின்விளக்குகள் வாங்கி தயாராகி வைத்து உள்ளனர், அவர்கள் தருவதையும் பொருத்துவத்துக்கு நாம் தயார்.

(மடத்துவெளி, ஊரதீவுக்கான முக்கிய வீதிக்கான மின்விளக்கு பொருத்துதல்..)
ஆயினும், குறிப்பாக மடத்துவெளி, ஊரதீவுக்கான முக்கிய (மெயின்) வீதிக்கான மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை “சுவிஸ் ஒன்றியத்தாலேயே” மேற்கொள்ளப்படும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லையெனவும், ஏனெனில் மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய நிர்வாகசபை சுவிஸ் அங்கத்தவர்கள் சிலர்; மடத்துவெளி, ஊரதீவு மக்கள் சிலரிடம் நிதி பெற்று “சுவிஸ் ஒன்றியத்துக்கு” ஊடாக மின்விளக்குகளை வாங்கித் தந்துள்ளதால், ஆரம்ப நிகழ்வாக ஒருசில மின்விளக்குகள் தற்போது பொறுத்தப்பட்ட போதும், அடுத்தடுத்த வாரமளவில் இந்நடவடிக்கை பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்ததுடன்.., (இன்று அந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது)

(குளங்களின் புனரமைப்பு…)
தற்போது உங்களின் கோரிக்கையின் எதிரொலியாக “புங்குடுதீவு வெளிச்ச வீடு” புனரமைப்பு முழுமையாக பூர்த்தி அடைந்து உள்ளதாகவும், அதேபோல் புங்குடுதீவில் உள்ள குளங்கள் புனரமைப்பு, தற்போதுள்ள மழைக் காலத்தினால் உடனடியாக புனரமைப்பு செய்ய முடியாத போதிலும், இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் “குளங்களின் புனரமைப்பு” நடவடிக்கை ஆரம்பமாகுமெனத் தெரிவித்தார்.

(திரு.சுரேஷின் கோரிக்கை..)
அத்துடன் “சுவிஸ் ஒன்றிய” ஆலோசனைசபை உறுப்பினர் திரு.சுரேஷ் எழுத்துமூலம் முன்வைத்த கோரிக்கையான ஆலடிச்சந்தி வாசிகசாலையின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தியதுடன், மற்றும் ஆலடி சந்தியில் சுற்றுவட்ட வீதி (ரவுண்டர் போர்ட்) அமைத்து உள்ளதையும், அப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள தையல் பயிற்சி நிலையம்..,உட்பட பல விடயங்கள் குறித்து திரு.இளங்கோவன் அவர்களினால் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டது.

(வீதி புனரமைப்பு…)
அதேபோல் வீதி புனரமைப்புக் குறித்தும் விளங்கப்படுத்தப்பட்டது. குறிப்பாக இறுப்பிட்டி வீதி குறித்து சுவிஸ், இலங்கை, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் “சுவிஸ் ஒன்றியத் தலைவருடன்” உரையாடியது குறித்தும் பிரஷ்தாபிக்கப்பட்ட போது, “எந்தவொரு பகுதியிலும் பொதுமக்கள் குடியிருந்தால், அப்பகுதி மக்களின் கையெழுத்துடன் கூடிய கோரிக்கையையும், கோரிக்கை முன்வைப்பவர்கள் தரும் கடிதத்தையும் முன்வைத்தால், அதுகுறித்து பரிசீலித்து, முடிந்தவரை செய்து தரப்படும் எனவும் திரு.இளங்கோவன் அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.

(திரு.சண்முகத்தின் கோரிக்கை…)
அத்துடன் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.சண்முகம் (சூரிச்) முன்வைத்துள்ள பானாவிடை சிவன் கோவிலுக்கு முன்னால் உள்ள குளம், அரியாரி குளம், திகளிக்குளம், மற்றும் இறுப்பிட்டி பகுதியில் உள்ள சில குளங்கள் குறித்து இறுப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் முன்வைத்த கோரிக்கையும் பரிசீலனைக்கு சமர்ப்பித்து உள்ளோம்.

இதேவேளை புனரமைக்க வேண்டிய குளங்களின் கோரிக்கைகளை எழுத்து மூலம் தந்தால், தாம் பரிசீலிப்பதாகத் தெரிவித்து உள்ளனர். ஆகவே புங்குடுதீவின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ளவர்கள், தங்கள் பகுதியில் உள்ள குளங்களின் முழுவிபரங்களையும், எழுத்துமூலம் தரும்படியும் கேட்டுக் கொண்டார். (புங்குடுதீவு மக்களே.., உங்கள் பிரதேசங்களில் உள்ள “குளங்களின்” விபரங்களையும், அதுக்குரிய தேவைகளையும்” உடனடியாக எழுத்து மூலம் எமக்கு அறிய தரவும்.)

நீண்ட நேரமாக அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்திய, வடமாகாண ஆளுநரின் செயலாளரும், “மண்ணின் மைந்தருமான” திரு.இ.இளங்கோவன் அவர்களுக்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் சார்பிலும், “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.,

*** வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.விந்தன் கனகரெட்ணம்….

இதனைத் தொடர்ந்து முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரின் அமைச்சுமட்ட ஆலோசனைக்கு குழு உறுப்பினர்களில் ஒருவருமான திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் “எதிர்கால செயல்பாடு குறித்து” விளக்கமளித்தார். இதன்போது, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இணங்க, பல்வேறு செயல்பாடுகளை புங்குடுதீவில் மேற்கொண்டுள்ளது குறித்தும், எதிர்காலத்தில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

“சுவிஸ் புங்கிடுதீவு ஒன்றியத்தின்” வேண்டுகோளுக்கு இணங்க, சுமார் அறுபது (60) இலட்சம் ரூபா, தனது மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் “ஊரதீவு வீதி” வேலைகள் நடைபெற்றது எனவும், அதேபோல் சுமார் நாற்பது (40) இலட்சம் ரூபா, தனது மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் “ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய” வேலைகள் நடைபெற்றது எனவும், அதேபோல் சுமார் நாற்பது (40) இலட்சம் ரூபா, தனது மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் “இறுப்பிட்டி பெருக்குமர கல்லடி அம்மன் வீதி”” வேலைகள் நடைபெற்றது எனவும் குறிப்பிட்டதுடன்..,

2016 ம் ஆண்டு, முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து தானும் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக சுமார் ஆறாயிரம் மில்லியன் ரூபா வழுக்கையாறு முதல் அராலித்துறை, வேலணை, ஊடாக புங்குடுதீவு குறிகட்டுவான் வரையான “கார்ப்பெட் வீதிக்கு” ஒதுக்கப்பட்டது எனவும், ஆயினும் இதனை மற்றுமோர் (கூட்டமைப்பின்) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டால், இந்நிதி வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வீதிக்கு மாற்றப்பட்டது எனவும், இதனை அரசதிபரே நேரடியாக ஏற்றுக் கொண்டதால்..,

இவ்வாண்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு “யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மீண்டும் மீண்டும் பலவித அழுத்தங்கள் கொடுத்து, முன்னர் ஒதுக்கிய நிதியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து இருந்தாலும், நாம் கேட்ட கோரிக்கையில் உறுதியாக இருந்து, 2018 இல் நடைமுறைப்படுத்துவத்துக்காக தற்போது மேற்படித் திட்டத்துக்கு பன்னிரெண்டாயிரம் மில்லியன் ரூபா (1200 கோடி) ஒதுக்கப்பட்டு உள்ளது எனவும், ஆயினும் தற்போதைய அரசியல் நெருக்கடி காரணமாக, இதுக்குரிய ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை, நிதியும் விடுவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

அனைத்து விடயங்களையும், விபரமாகத் தெளிவுபடுத்திய, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரின் அமைச்சுமட்ட ஆலோசனைக்கு குழு உறுப்பினர்களில் ஒருவருமான திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களுக்கு, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் சார்பிலும், “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டது.,

*** “2019 வேரும் விழுதும் கலைமாலை நிகழ்வு & அறிவித்திறன் போட்டி”

இதனைத் தொடர்ந்து, அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்தவுள்ள, 2019 க்கான “வேரும் விழுதும் கலைமாலை” நிகழ்வுக்கு முன்பாக நடத்தவுள்ள ஒன்றியத்தின் “அறிவித்திறன் போட்டியை” ஒன்றியத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு.இ.இலட்சுமணன் அவர்களின் தலைமையில் நடத்துவது எனவும், இதுக்கு ஒன்றியத்தின் “இளையோர் அமைப்பு” இணைந்து, செயல்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

*** மண்டப அரங்கின் பெயர்”….

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்தவுள்ள, 2019 க்கான “வேரும் விழுதும் கலைமாலை” நிகழ்வு மண்டபத்துக்கு, “மு.தளையசிங்கம்” மண்டபம் என பெயர் வைப்பதெனவும், அதேபோல் “புங்குடுதீவு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்” பாடுபட்டு உயிர்நீத்த “மண்ணின் மைந்தர்களின்” பெயரில் வருடாவருடம் மண்டபத்தின் பெயரை வைப்பதெனவும் அத்துடன் மண்டபத்தில் “புங்குடுதீவு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்” பாடுபட்டு உயிர்நீத்த “மண்ணின் மைந்தர்களின்” புகைப்படங்களை வைத்து நினைவு கூர்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. (***ஆகவே “புங்குடுதீவு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்” பாடுபட்டு உயிர்நீத்த “மண்ணின் மைந்தர்களின்” ஆதாரங்களை, படங்கள் தரவுகளுடன் எமக்கு உடன் -2019 ஜனவரி பத்துக்கு முதல்- அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்)

*** “வேரும் விழுதும்” கலைமாலை (2019) விழாவுக்கான பொறுப்பாளர்…

அடுத்தவருட (2019) விழாவுக்கு “ஒன்றியத் தலைவரின்” மேற்பார்வையில், ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர் திரு.சுரேஷ் பொறுப்பாக இருப்பார் எனவும், அவருடன் இணைந்து ஒன்றிய முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு.ரமணன், ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர் திரு.நிமலன் செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. (திரு.நிமலன் கூட்டத்தில் கலந்து கொள்ளாததினால், அவரிடம் கேட்டு தீர்மானிக்கப்பட்டது.)

*** 2019 ஒன்றிய விழா மலர்”

அடுத்தவருட ஒன்றிய விழாமலருக்கு, “ஒன்றியத் தலைவரின்” மேற்பார்வையில், ஒன்றிய உபதலைவர் திரு.சஞ்சய் பொறுப்பாக இருப்பார் எனவும், அவருடன் இணைந்து ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர் திரு.நிமலன் செயல்படுவார் எனவும் தீர்மானிக்கப்பட்டது. (திரு.நிமலன் கூட்டத்தில் கலந்து கொள்ளாததினால், அவரிடம் கேட்டு தீர்மானிக்கப்பட்டது.)

மேற்படிக் கூட்டமானது, குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பமாகி சுமார் நான்கு மணித்தியாலமாக வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற கூட்டமானது, மிகவும் ஆரோக்கியமாகவும், பிரயோசனமாகவும் நடைபெற்று அமைதி வணக்கத்துடன் முடிவுற்றது.

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

11.12.2018

“சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று; புங்குடுதீவில் வீதிவிளக்கு பொருத்தும் பணிகளை, ஆளுநர் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.!! (படங்கள் &வீடியோ)

Comments (0)
Add Comment