புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்)

புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் அமைந்துள்ள, “காந்தி சனசமூக நிலையத்தில்” நடைபெற்று வரும் “தையல் பயிற்சி” வகுப்புக்கு, சிறியதோர் நிதியுதவி கோரி, அந்த மாணவர்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் ஊடாக எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து அவ் சிறியதோர் நிதிஉதவியானது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படிக் கோரிக்கை கிடைக்கப் பெற்றவுடன், இதுகுறித்து “சுவிஸ் ஒன்றிய நிர்வாக சபையில்” உரையாடிய போது, இதுக்குரிய நிதியை “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரான, “ஒபேர்புர்க் குமார்” எனும் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை கிருஷ்ணகுமார் அவர்கள் இந்த நிதிப் பொறுப்பை ஏற்று வழங்கி உள்ளார்.

மேற்படி சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் நிதியுதவியினையை, “புங்குடுதீவு மக்கள் அபிவிருத்திக் கழகத்தின்” பொருளாளரும், புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தின் தலைவியுமான திருமதி.த.சுலோசனாம்பிகை அவர்கள் இன்றையதினம் நேரில் சென்று கையளித்து இருந்தார்.

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.

17.12.2018

****குறிப்பு:-
“புங்குடுதீவு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்” பாடுபட்டு உயிர்நீத்த “மண்ணின் மைந்தர்களின்” ஆதாரங்களை, படங்கள், தரவுகளுடன் எமக்கு உடன் -2019 ஜனவரி பத்துக்கு முதல்- அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், மடத்துவெளி முகப்பில் இருந்து தொடரும் “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கைகள்… (படங்கள் & வீடியோ)

Comments (0)
Add Comment