புங்குடுதீவு கனடா ஒன்றியத்தின் சார்பில், புங்குடுதீவில் இன்று சிறப்பாக நடைபெற்ற வாழ்வாதார உதவித் திட்ட நிகழ்வு..! (படங்கள்)

புங்குடுதீவு கனடா ஒன்றியத்தின் சார்பில், புங்குடுதீவில் இன்று சிறப்பாக நடைபெற்ற வாழ்வாதார உதவித் திட்ட நிகழ்வு..! (படங்கள்)

“புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடா” நிர்வாகசபையானது சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் பொதுச்சபை ஒன்றுகூடி புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன் தலைவராக திரு.மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம் தலைமையில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டவுடன், “ஊர் நோக்கிய” செயற்பாட்டில் துரிதமாக செயற்பட ஆரம்பித்து உள்ளனர்.

இதன் முதல்கட்டமாக, இன்றையதினம் 19-01-2019 புங்குடுதீவு அமபலவானார் கலையரங்கில் வைத்து, தாயக பயனாளிகளுக்கு பாடசாலை உபகரணங்கள், ஈருருளிகள், தையல் இயந்திரங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

தகவல்…. -புங்கையூரான்.
புகைப்பட உதவி…. -திருமதி.த.சுலோசனாம்பிகை.

(குறிப்பு:- மேற்படி நிகழ்வு குறித்தும், இதுக்கு நிதி வழங்கியோர் விபரம் குறித்தும் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடாவின் நிர்வாகசபை சார்பில் முன்னர் வெளியிடப்பட்ட தகவல்களையும் கீழே இணைத்து உள்ளோம்..)

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடாவின் ஏற்பாட்டில் தாயக பயனாளிகளுக்கு பாடசாலை உபகரணங்கள், ஈருருளிகள், தையல் இயந்திரங்கள் என்பன வழங்கவுள்ளமை அறிந்ததே.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடாவின் ஏற்பாட்டில் தாயகத்தில் பன்னிரண்டு வட்டாரங்களில் இருந்தும் தெரிவு செய்யயப்பட்ட பயனாளிகளுக்கு (36) ஈருருளிகள் (துவிச்சக்கர வண்டிகள்) வழங்கல் தை பத்தொன்பதாம் நாள் 19-01-2019 நடைபெறவுள்ளது யாவரும் அறிந்ததே.

ஏற்கனவே அம்பலவாணர் கலையரங்கில் நடைபெறும் விசேட வகுப்புகளில் பங்கேற்க சில மாணவர்கள் போக்குவரத்துச் சிக்கல்கள் எதிர்கொள்வதாக அங்குள்ள ஆசிரியரால் எமக்கு அறியத் தரப்பட்டுள்ளது.  இந்த ஈருருளிகள் ஒவ்வொன்றும் $125 கனடிய டொலர்கள் பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈருருளிகளுக்கான பயனாளிகளை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மூவராக தெரிவு செய்யப்பட்டபோது ஒன்பதாம் வட்டாரத்தில் ஒரேயொரு பயனாளியை மட்டுமே தெரிவு செய்ய முடிந்தது.

கல்வியே  எமது மூலதனம் .  சிறந்த பெறுபேறுகளை பெற்ற இந்த மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்.  ஆகவே எஞ்சியுள்ள இரண்டு ஈருருளிகளையும் அண்மையில் வெளிவந்த க.பொ.த. உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இரு மாணவர்களுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

வெளியாகிய உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் வணிகப்பிரிவில் 2AB சித்திபெற்ற மாணவி ர.டயாளினிக்கு ஈருருளி ஒன்றும் பதினைந்தாயிரம் (Rs. 15000) ரூபாவும் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது.

இதேவேளை பல வருடங்கள் கழித்து தொடங்கப்பட்ட உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றி (C2S) சித்தி பெற்ற மாணவன் A.R .பிரதீபன் அவர்களுக்கு ஈருருளி ஒன்று வழங்கப்பட உள்ளதுடன், அவர் யாழ் சென்று பிரத்தியேக வகுப்புகளுக்கு சமுகமளித்து மீண்டும் பரீட்சைக்கு தோன்றி மேலும் சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கான முழுச்செலவுகளை எமது சங்கம் பொறுப்பேற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

உயர்தர பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.  சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டுவதில் பெருமையடைகின்றோம்.

இந்த திட்டத்தின் மூலம் வறிய பாடசாலைப்பள்ளி மாணவர்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்தி அவர்களின் பள்ளி வருகையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.

இதுவரை உறுதி செய்யப்பட்ட கொடையாளிகளை இங்கு அடையாளப்படுத்துவது சிறந்தது என நாம் கருதுகிறோம். அந்த வகையில்…,

கனகாம்பிகை நகை மாடம்   5 ஈருருளிகள்
விஜயன் (மடத்துவெளி)         4 ஈருருளிகள்
சபா (EZ Driving School)              2 ஈருருளிகள்
அத்துடன்,
அரியரட்ணம் (முன்னாள் தலைவர்)
அருண் குலசிங்கம் (முன்னாள் தலைவர்)
ஐயாமணி ஐயா
நந்தன் ஐயா
கிருஷ்ணராஜா ஐயா
தனபாலன் மாஸ்ரர்
பரஞ்சோதி மாஸ்ரர்
ஜீவா மாஸ்ரர்
இ.சுந்தரலிங்கம் மாஸ்ரர்
நீதி தர்மலிங்கம்
திலகன் ஐயப்பன் கோயில்
இளங்கீரன் ஐயப்பன் கோயில்

ஆகியோர் தலா ஒவ்வொன்றையும் அன்பளிக்க முன்வந்துள்ளனர்.

இத்திட்டத்திற்கு அணி சேர்ப்பதாக எமது தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்களான  குகன் பத்மநாதன் இரண்டு ஈருருளிகளையும்,
உமாசங்கர் (அழகன்) , நடா உதயகுமார், பகீ நாகேசு, இ.விஜயகுமாரன், குமார மனோகரன், மு. அரியராஜா, சு.க. மதியழகன், ஸ்ரீநி பாலா ஆகியோர் தலா ஒவ்வொரு ஈருருளிகளையும் வழங்க முன்வந்துள்ளனர்.

இந்த காருண்யக்கொடையாளிகளுக்கு எமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் கடந்த இரு மாதங்களாக, “புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடா” தொடர்ச்சியான பல செயற்திட்டங்களை தாயகத்தில்  செயற்படுத்தி வருகின்றது.

இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் செயற்பாடாக பாடசாலை மாணவர்களுக்கு பணிஸ் (வெதுப்பக தயாரிப்பு) வழங்கல், புங்குடுதீவு மகா வித்தியாலய நூலக அபிவிருத்தி என்பனவற்றை இங்கு குறிப்பிட முடியும்.

நூலக அபிவிருத்திக்காக நான்கு இலட்சம் பெறுமதியான புத்தகங்களும் புத்தக அலுமாரிகளும் வழங்கப்படவுள்ளது.  இதற்குரிய நிதியை எமது சமகால தலைவர் மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம் கோரிய போது, முகங்கோணாது பெருந்தன்மையுடன் வழங்கிய எமது தாய்மண் பற்றாளர்களுக்கு வாழ்த்துகள்.

கொடையாளிகளையும் இங்கு அறிமுகப்படுத்துவதில் சங்கம் பெருமையடைகின்றது.அந்த வகையில்,

பரராஜசிங்கம் திருக்குமார்             CAN $2000
பொன்.சுந்தரலிங்கம்                        CAN $1000
மார்க்கண்டு மோகன் (Tech Source)CAN $1000
சத்தி (Aero Courier )                             CAN $1000
ரமேஷ் (Suncity Plaza)                        CAN $1000

ஆகியோர் இந்த நிதிப்பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளனர்.

நாம் (புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடா) இன்னுமொரு கோணத்தில் எமது தாயகத்திட்டங்களை நோக்கும்போது, அங்கு சிறு சுயதொழில் ஊக்குவிப்புக்களை மேற்கொள்ளல் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என நாம் கருதுகிறோம்.

அதன் முதற்படியாக தொழிற்பயிற்சி பெற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்க கொடையாளிகள் முன்வந்துள்ளனர்.

இந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றும் இருநூறு டொலர்கள் (CAN $200) பெறுமதியானது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் இங்கு அடையாளப்படுத்துவது சிறந்தது.

தர்மேஸ்வரி திருக்கேதீஸ்வரநாதன்
Dr. நிவேதா சபா

இந்த கொடையாளிகளுக்கும் எமது சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம்” வாரீர்.
நன்றி

நிர்வாகம் சார்பாக..
திரு.மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம்,
தலைவர்,
“புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் – கனடா”

Comments (0)
Add Comment