“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்..

மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்..

கடந்தவருட தை மாதம் முதலாம் திகதியில் (01.01.2018) இருந்து, கடந்த தை மாதம் 14ம் திகதி (14.01.2019) வரையான கணக்கறிக்கையையும் பகிரங்கத்தில் அறிய தருகிறோம். இந்த கணக்கு வழக்கில் எதுவும் தவறுகள் அல்லது சரிபிழைகள் இருப்பின் “ஒன்றிய பொருளாளர்” என்ற ரீதியில் என்னுடன் நேரிலோ, தொலைபேசியிலோ “உடன்” அறிய தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எமது அன்பின் உறவுகளே.. 2018 ஆரம்ப ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை ஒன்றியத்தின் பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் ஆகிய நான், ஒன்றிய தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், ஒன்றிய செயலாளர் திருமதி.செல்வி சுதாகரன், ஒன்றிய கணக்காய்வாளர்கள் திரு.சின்னத்துரை இலக்சுமணன், திரு.சதாசிவம் பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒப்புதலுடன் உங்களின் (மக்களின்) பார்வைக்காக முன்வைக்கின்றோம்.

இதில் ஏதாவது சரிபிழை, கேள்விகள் இருப்பின் நேரடியாக என்னுடனோ அல்லது ஒன்றிய தலைமையுடனோ கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

** உங்களின் உதவிகள், பங்களிப்புகளினாலேயே “ஊர் நோக்கிய” எமது சேவையை நாம் திறம்பட செய்வதுக்கு உந்துகோலாக உள்ளது என்பதை நாம் மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி..

ஆகவே இதுவரை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தில்” உறுப்பினர்களாக இணையாதவர்கள், தம்மையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதுடன், இதுவரை கடந்தவருடத்துக்கு (2018) உரிய சந்தாப்பணம் செலுத்தாதவர்கள், அதனை உடன் செலுத்தி “ஊர் நோக்கிய, மக்கள் சேவையில்” கைகோர்த்து செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் பங்களிப்புக்களும் ஒத்துழைப்புக்களும் எங்களின் செயற்பாடுகளுக்கு பெரிதும் உந்துசக்தியாக இருந்து எமது செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாகவும் இருந்து வருகின்றது. அந்தவகையில் புங்குடுதீவின் அபிவிருத்தி நோக்கிய எம் செயற்பாட்டினை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு தொடர்ந்தும் தங்களின் ஒத்துழைப்பினை நாடிநிற்கின்றோம்.

இதற்கமைய ஒன்றியத்தின் 2018ஆம் ஆண்டிற்கான சந்தாப் பணத்தினை இதுவரையில் செலுத்தத் தவறியவர்கள் தயவுசெய்து ஒன்றியத்தின் வங்கி இலக்கத்திற்கு அதனைச் செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

2018ஆம் ஆண்டிற்கான சந்தாப் பணத்தினை செலுத்தியவர்கள், 2019ஆம் ஆண்டிற்கான சந்தாப் பணத்தினை செலுத்தி, எம்முடன் தோளோடுதோள் நின்று செயல்படுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். (இவ்வருட ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள “வேரும் விழுதும்” விழாவுக்கான விழாமலரில் சந்தா செலுத்தியவர்கள் பெயர்களும் பதிவிட உள்ளோம்)

கடந்த வருடத்தில் மட்டும் மடத்துவெளி, நுணுக்கல், கரந்தெழி, பொன்னன், சங்கிலிக் கிணறு போன்ற பொதுக் கிணறுகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான கௌரவிப்பு, அம்பலவாணர் அரங்கின் இரு ஆசிரியர்களுக்கான மாதாந்த சம்பளம், மடத்துவெளி முகப்பு முதல், கமலாம்பிகை வரையான பிரதான வீதிக்கான மின்விளக்கு பொருத்துதல், காந்தி சனசமூக நிலையத்தின் தையல் பயிற்சிக்கான உதவி, பெருங்காட்டு சந்தியில் இருந்து, “நண்பர்கள் விளையாட்டுக் கழக” மைதானம் வரையான இறுப்பிட்டி செல்லும் “மானாவெள்ளை வீதி” (அடைகாத்தகுளம்) பகுதி வீதிக்கான “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை” உட்பட பல விடயங்களை நாம் மேற்கொண்டு உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. 

(மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின் நிதிப் பங்களிப்பில், சுவிஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை” முழுமையாக இலக்கைத் தொட்டவுடன், அதன் முழுமையான கணக்கு விபரமும் இணைக்கப்படும்.) நன்றி..

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்
அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை),
பொருளாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து
04.02.2019.

Comments (0)
Add Comment