சுவிஸில் வதியும் புங்குடுதீவை சேர்ந்த சிந்துஜன், தனது பிறந்தநாளில் கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸில் வதியும் புங்குடுதீவை சேர்ந்த சிந்துஜன், தனது பிறந்தநாளில் கற்றல் உபகரணங்களை வழங்கி வைப்பு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் சூரிச்சில் வதியும்,புங்குடுதீவை சேர்ந்த திரு.திருமதி பன்னீர்செல்வம் சிவநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சிந்துஜன் அவர்களின் பிறந்தநாளில், “அதிரடி” இணையம் ஊடாக தந்தையை இழந்த 25 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை 05.02.2019 இன்று வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு இன்று தமிழ் விருட்சம் அலுவலகத்தில் அதன் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் விருட்சத்தின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் தாய்மார், மாணவர்கள் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.

முதலில் மாணவர்களால் சிந்துஜனுக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள். அத்துடன் தூர இடங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை முடிந்த கையுடன் களைப்புடன் வந்ததால் சிந்துஜன் அவர்கள் சார்பில் மாணவர்களினால் அனைத்து மாணவர்களுக்கும் சிற்றுண்டியும்,தேநீரும் வழங்கி வைத்தார்.

கந்தபுரம் வாணி வித்தியாலயம், கணேசபுரம் சித்தி விநாயகர் வித்தியாலயம், மகாறம்பைக்குளம் திருஞானசம்மந்தர் வித்தியாலயம், பூந்தோட்டம் மகாவித்தியாலயம், இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலைகளில் கல்வி பயிலும் தந்தையை இழந்த மற்றும் தந்தையால் கைவிடப்பட்ட 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் சிந்துஜன் அவர்களின் சார்பில் வழங்கி வைக்கப்படும் நிகழ்வில் உரையாற்றிய மாணிக்கம் ஜெகன் அவர்கள், “கல்வியால் உலகை வெல்வோம், வரும் தடைகளை புலம் பெயர் உறவுகளின் உதவியோடு தகர்ப்போம், அந்த வகையில் தந்தை இல்லாத உங்களுக்கு, தாயக உறவுகளுக்கு, தன்னாலான பணிகளை ஆற்றி வரும் “அதிரடி” இணைய ஒழுங்கமைப்பில் சுவிஸ்சில் வசிக்கும் சிந்துஜனின் பிறந்தநாளில் உங்களுக்கு உங்கள் அம்மாக்களின் வேண்டுகோளுக்கமைவாக இந்த கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

ஆடம்பர செலவுகளுடன் பிறந்த நாளை இளைஞர்கள் கொண்டாடும் இத்தருணத்தில் தனது பிறந்தநாளை இவ்வாறான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி, மாற்றத்தை ஏற்படுத்திய சிந்துஜனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன்; இவ்வாறு இளைஞர்களை ஒருங்கிணைத்து உதவிகளை பெற்று எம் தாயக உறவுகளுக்கு அளித்து வரும் அதிரடி இணையத்திற்கும் மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

அடுத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டது., இறுதியில் மாணவன் ஒருவனின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

Comments (0)
Add Comment