“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியில் “தொடர்ச்சியாக மின்விளக்குகள்”…! (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியில் “தொடர்ச்சியாக மின்விளக்குகள்”…! (படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு “வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின்” நிதி உதவியுடன், புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் (புங்குடுதீவு ஆரம்பமான மடத்துத்துறையில்) உள்ள பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, முன்னாள் வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களினால் (05.12.2018) ஆரம்பிக்கப்பட்ட “மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை”, ஒருமாதத்துக்கு முன்னர் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களினால் வயலூர் முருகன் ஆலயம் தாண்டி, கமலாம்பிகை வித்தியாலம் வரை மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை தொடரப்பட்டு இருந்ததுடன் இருவாரத்துக்கு முன்னர் புங்கடி வரையான பகுதி வரை மின்விளக்கு பொறுத்தப்பட்டது நீங்கள் அறிந்ததே…

ஆயினும் தொடர்ச்சியாக பொருத்தப்படவில்லை எனும் (ஒன்றுவிட்டு ஒன்றான மின்கம்பங்களுக்கு பொருத்தப்பட்டது எனும்) குறைபாடை நீக்கும் வகையிலும், புங்குடுதீவில் ஆரம்ப பிரதான வீதியில் தொடர்ச்சியாக பொருத்துவதே சிறப்பாக இருக்கும் எனும் காரணத்தினாலும், எதிர்வரும் 26 ம் திகதி ஆரம்பமாகவுள்ள, வயலூர் முருகன் ஆலய திருவிழாவுக்கு முன்னர் தொடர்ச்சியாக பொருத்தப்பட வேண்டுமெனும் கோரிக்கையை அடுத்து…

இன்றையதினம் (08.03.2019) புங்குடுதீவு மடத்துவெளி முகப்பில் இருந்து புங்கடி வரையான “மடத்துவெளிப் பிரதான வீதி முழுமைக்கும் மற்றும் “மடத்துவெளி பிரதான வீதியில் இருந்து, மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயம் வரையான” வீதிக்கும் “தொடர்ச்சியாக மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கை” மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் அறிய தருகிறோம்.

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், புங்குடுதீவு வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபையின் நிதி உதவியுடன், “மண்ணின் மைந்தர்” திரு.இ.இளங்கோவன் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் இன்றையதினம் நடைபெற்ற நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான திருமதி. த.சுலோசனாம்பிகை, புங்குடுதீவு உலக மையத் தலைவர் “சமூக ஆர்வலர்” திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (அண்ணா சின்னா தம்பி) ஆகியோரும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி மடத்துவெளி பிரதான வீதிக்கும், வயலூர் முருகன் ஆலய வீதிக்கும் மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கையுடன், அத்துடன் புங்.கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலத்தின் விளையாட்டுப் போட்டிக்கும் சிறியதொரு நிதி உதவி “சுவிஸ் ஒன்றியத்த்தின் ஏற்பாட்டில்” மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய சுவிஸ் நிர்வாக சபை சார்பாக நிதி வழங்கப்பட்டு உள்ளது.

இவற்றுக்குரிய மொத்த செலவான 289690 இலங்கை ரூபாவை, வயலூர் முருகன் ஆலய நிர்வாக சபை சார்பாக சுவிஸில் உள்ள “மடத்துவெளி, ஊரதீவு, வரதீவை” சேர்ந்த ஆறு நண்பர்களின் (திரு.திருமதி.சண்முகம் -சூரிச், திரு.திருமதி.கணேசராஜா -சூரிச், திரு.திருமதி. அரிச்சந்திரதேவன் ஆர்காவு, திரு.திருமதி திகிலழகன் -பேர்ண், திரு.திருமதி.இந்திரசீலன் -பேர்ண், திரு.திருமதி.குழந்தை -பேர்ண்) பங்களிப்பால் இதனை மேற்கொண்டு உள்ளதினால், ஒருவர் 280 Sfr (இருநூற்றி என்பது சுவிஸ் பிராங்) வீதம் செலுத்தி உள்ளனர்.

எமது வேண்டுகோளை சிரமேற்கொண்டு கடமையாற்றிய வடமாகாண ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அண்ணர் அவர்களுக்கும், “நிதி இல்லாவிடின் எதுவும் நடவாது” என்பதை உணர்ந்து, நாம் கேட்கமுதலே இதுக்குரிய முழுமையான நிதிப் பங்களிப்பையும் வழங்கிய “மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய” சுவிஸ் நிர்வாக சபைக்கும், தமது பிரதேசத்தின் வளர்ச்சி குறித்து முன்னாள் வடமாகாண ஆளுனருடன் “சுவிஸ் ஒன்றியம்” நடத்திய கலந்துரையாடலில், நேரில் உரையாடி வலியுறுத்திய சுவிஸ் ஒன்றிய உறுப்பினர் திரு.சௌந்தரராஜன் அவர்களுக்கும், “மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய” சுவிஸ் நிர்வாக சபைக்கு, ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்திய திரு.அ.சண்முகநாதன் (கண்ணாடி ஐயா) அவர்களுக்கும்,

குறிப்பாக பல வேலைப்பளுவுக்கு மத்தியிலும், எமது வேண்டுகோளை ஏற்று, அல்லும்பகலும் செயல்பட்ட திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் மாஸ்ரர், திருமதி.த.சுலோசனாம்பிகை, திரு.பிள்ளைநாயகம் சதீஷ் ஆகியோருக்கும், பலவழிகளிலும் உதவிகள் புரிந்த வேலணை பிரதேச சபை அதிகாரிகளுக்கும், மின்சாரசபை அதிகாரி திரு.நிசாந்தன் மற்றும் மின்சாரசபை (திரு.துஷ்யந்தன் உட்பட்ட) ஊழியர்களுக்கும்,

பல இடையூறுகள், பழிச்சொற்களை தாங்கிக் கொண்டு, சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தை சரியான முறையில் வழிநடத்தி, நிர்வாகசபையின் துணையுடன் “எடுத்த காரியத்தை” சிறப்பாக செய்து முடித்த “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும், “எவ்விடர் வரினும், எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க” துணை நின்ற அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பிலும், உலகெங்கும் வாழும் “புங்குடுதீவு மக்கள்” சார்பிலும்” நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
*********************************

(****குறிப்பு:-
புங்குடுதீவு வல்லன் வாடை பகுதியை சேர்ந்தவரும், 85 ம் ஆண்டு காலம் முதல் சுவிஸில் வசித்தவருமான “தேவன்” அல்லது “பெரிய வாழைப்பழம்” என அன்புடன் அழைக்கப்பட்ட அமரத்துவமடைந்த அமரர்.இரத்தினராசா தேவராசா அவர்களின் அன்புமகன் திரு.தேவராசா சுதன் அவர்கள், “ஊடகங்களில்” புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்டதினால், பின்லாந்து நாட்டில் இருந்து, சுவிஸ் ஒன்றியத் தலைவர் சுவிஸ்ரஞ்சனுடன் தொடர்பு கொண்டு மேற்படி “மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கைக்கு தன்னால் முடிந்த சிறியதொரு நிதி உதவியை வழங்க விரும்புவதாகக்” கேட்டுக் கொண்டார்.

அதேபோல் இருவாரத்துக்கு முன்னர் எமது இலங்கை வங்கிக் கணக்கிலக்கத்துக்கு இருபதாயிரம் (20000) இலங்கை ரூபாவை அனுப்பி வைத்து உள்ளார். அவரது தந்தையின் (அமரர்.இரத்தினராசா தேவராசா) நினைவாக மின்விளக்குகள் மிகவிரைவில் பொறுத்தப்படும் என்பதை மனமகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

******* அத்துடன்,

** சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், சுவிஸ் வாழ் அனைத்து மக்களும் இணைந்து எதிர்வரும் 25.05.2019 சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு (14.00) புர்கடோர்ப் மாநிலத்தில் நடைபெறவுள்ள “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு.. -2019 (“ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்”.) தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் இம்மாதம் 24.03.2019 ஞயிற்றுக்கிழமை மாலை ஐந்து முப்பதுக்கு மணிக்கு (17.30) புர்கடோர்ப் மாநிலத்தில் நடைபெற உள்ளதினால், அனைத்து சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதேவேளை எதிர்வரும் 25.05.2019 சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு (14.00) புர்கடோர்ப் மாநிலத்தில் நடைபெறவுள்ள “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வில், அனைத்து நாடுகளிலும் உள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள், சங்கங்களின் பிரதிநிதிகளை கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், உங்களின் வாழ்த்து செய்திகளையும் 10.04.2019 க்கு முன்பாக எமக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு.. திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (தலைவர்) -077.9485214, திரு,அ.கைலாசநாதன் (குழந்தை -பொருளாளர்) -079.9373289, ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) நன்றி..

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
09.03.2019

*** புங்குடுதீவில் சுவிஸ் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட, “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கை தொடர்பான செய்திகள் & வீடியோக்கள் & படங்கள்… 

“சுவிஸ் ஒன்றிய” ஏற்பாட்டில், புங்குடுதீவு மடத்துவெளி பிரதான வீதியின்; “மின்விளக்கு பொருத்தும்” நடவடிக்கைகள் பூர்த்தி…! (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று; புங்குடுதீவில் வீதிவிளக்கு பொருத்தும் பணிகளை, ஆளுநர் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.!! (படங்கள் &வீடியோ)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், மடத்துவெளி முகப்பில் இருந்து தொடரும் “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கைகள்… (படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” ஏற்பாட்டில், முதலாம் வட்டார மானாவெள்ளை வீதி “மின்விளக்குப் பொருத்தும்” நடவடிக்கைகள்..! (படங்கள் & வீடியோ)

 

 

Comments (0)
Add Comment