புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “விழா தொடர்பான” கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..! (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “விழா தொடர்பான” கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது..! (படங்கள்)

நேற்றுமுன்தினம் 24.03.2019 மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது.

மேற்படிக் கூட்டத்தில் “தவிர்க்க முடியாத, தகுந்த காரணங்களினால்” (சுகயீனம், வெளிநாடு சென்றுள்ளமை, போன்ற காரணங்களினால்) கலந்து கொள்ள முடியவில்லையென திரு.குழந்தை, திரு.பன்னீர், திரு.வடிவேலு, திரு.சதா, திரு.ஞானகுமார் ஆகியோர் அறிய தந்து இருந்தனர்.

மேற்படி கூட்டமானது ஒரு நிமிட அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. செயலாளரின் கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு, திரு.சுரேஷின் கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், பொருளாளர் திரு.அ.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள் சமூகம் தரமுடியாத சூழ்நிலையில், அவரது (பொருளாளரின்) ஒப்புதலுடன் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் இவ்வருட கணக்கறிக்கை மற்றும் தற்போது புங்குடுதீவில் நடைபெற்று வரும் “வேலைகளின்” முழுமையான செலவுக் கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதுடன், கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவராலும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதேபோல் “சுவிஸ் ஒன்றிய” கையிருப்பில் உள்ள நிதியில் இருபத்தைந்து இலட்சம் ரூபா இலங்கை வங்கியில் மூன்று வருட வைப்பில் இடப்பட்டதின் காரணமாக, இவ்வருட ஏப்ரல் மாத (அடுத்த மாத) இறுதியில் மூன்று இலட்சம் ரூபா வட்டி மூலம் பெறப்படுவதும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

“வேரும் விழுதும்” கலைமாலை விழா தொடர்பான கலந்துரையாடல்..

1) “விழா நிகழ்வுக்கான குழு”

“வேரும் விழுதும் 2019” விழா நிகழ்வுக்கான குழுவானது திரு.சுரேஷ் தலைமையில் திரு.இலக்சுமணன், திரு.நிமலன், திரு.ரமணன் ஆகியோருடன் “ஒன்றியத் தலைவர்” திரு.ரஞ்சன் மேற்பார்வையாளராகவும் இணைக்கப்பட்டு “விழாக் குழு” அமைக்கப்பட்டது.

2) “விழா மலருக்கான” குழு

“வேரும் விழுதும் 2019” விழா நிகழ்வுக்கான, விழா மலருக்கான குழுவானது திரு.நிமலன் தலைமையில் திரு.இலக்சுமணன், திரு.சஞ்சய் ஆகியோருடன் “ஒன்றியத் தலைவர்” திரு.ரஞ்சன் மேற்பார்வையாளராகவும் இணைக்கப்பட்டு “விழா மலர்க் குழு” அமைக்கப்பட்டது.

3) “விழா மலருக்கான” வாழ்த்துக்கள், கட்டுரைகள்..

“வேரும் விழுதும் 2019” விழா நிகழ்வுக்கான, விழா மலருக்கான வாழ்த்துக்கள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை அனுப்ப விரும்பும் எவராயினும், அடுத்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதிக்கு (10.04.2019) முன்பாக அவற்றுக்குரிய படங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. (ஆகவே உங்கள் வாழ்த்துக்களை உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். pungudutheevuswiss@gmail.com அல்லது swissranjan@gmail.com )

4) “விழா மலர்” வெளியீடு..

“வேரும் விழுதும் 2019” விழா நிகழ்வுக்கான, விழா மலர் வெளியீட்டை திரு.சஞ்சய், திரு.ஸ்ரீ ராசமாணிக்கம், திரு.சதீஷ், திரு.சபேஷன் ஆகியோரின் பொறுப்பில், அவர்களாலேயே நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

5) “விழா சிற்றுண்டி விடுதிக்கான குழு”

“வேரும் விழுதும் 2019” விழா சிற்றுண்டி விடுதிக்கான குழுவானது திரு.குமார், திரு.தயாபரன் ஆகியோரின் தலைமையில் மேலும் மூவரை இணைத்து செயல்படுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. சிற்றுண்டி விடுதியின் விற்பனைப் பொறுப்பை திரு.பன்னீர், திரு.பிரதீபன் பொறுப்பெடுத்து செய்ய வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

6) “விழா நிகழ்வுக்கான” மண்டப ஒழுங்குகள்..

மேற்படி விழா மண்டப ஒழுங்குகளை திரு.சுதாகரன் தலைமையில் முடிந்தவரை அனைத்து உறுப்பினர்கள், குறிப்பாக இளையோர் அணியை சேர்ந்தோரின் உதவியுடன் செய்வதெனவும் தீர்மானிக்கப் பட்டது.

7) “விழா நிகழ்வுக்கான” அரங்கின் பெயர்..

2019 க்கான “வேரும் விழுதும் கலைமாலை” நிகழ்வு மண்டபத்துக்கு, மண்ணின் மைந்தனும், சமூகப் புரட்சியாளருமாகிய “மு.த” எனும் அமரர் “மு.தளையசிங்கம்” அவர்களின் நினைவாக “மண்மறவா சமூகப் புரட்சியாளன்” திரு மு தளையசிங்கம் அரங்கு என பெயர் வைப்பதெனவும், தீர்மானிக்கப்பட்டது. (அடுத்தடுத்த வருடங்களில், புங்குடுதீவு மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் செயல்பட்ட “மண்ணின் மைந்தர்களின்” பெயர்களை மண்டபத்துக்கு வைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.)

8) “விழா நிகழ்வுக்கான விருந்தினர்கள்”…

“வேரும் விழுதும் 2019” விழா நிகழ்வுக்கான விருந்தினர்களாக இலங்கை, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவதுக்கு ஓரிருவர் சம்மதம் தெரிவித்து உள்ளது குறித்தும் பிரஸ்தாபிக்கப் பட்டதுடன், யாரை அழைப்பது எனவும் கலந்துரையாடப்பட்டது. எவராயினும் தமது செலவில் விருந்தினர்களை அழைக்கலாம் எனவும், வருவோரை வரவேற்று, “ஒன்றியத்தால்” மதிப்பளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

9) “வேரும் விழுதும்” கலைமாலை விழா நிகழ்வுகள் ..

மேற்படி கலைமாலை நிகழ்வானது 25.05.2019 சரியாக மாலை மூன்று மணிக்கு (குறிப்பிட்ட நேரத்தில்) ஆரம்பிப்பது எனவும், சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களுடன் இணைந்து, நிகழ்வுகள் யாவும் “ஜனரஞ்சமாக” ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடத்துவது எனவும், அதாவது பல்வேறு இன்னிசை விருந்து, நகைச்சுவை நாடகம், பட்டிமன்றம், பழமை, புதுமையான நடனங்களுடன் “ஜனரஞ்சமாக” நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

10) “வேரும் விழுதும்” கலைமாலை விழா நினைவுக் கிண்ணங்கள்..

எதிர்வரும் 25.05.2019 புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடாத்தும் “வேரும் விழுதும் “கலைமாலை விழாவில் பங்குபற்றுவோர்க்கான நினைவுப் பரிசில்களை ஒன்றிய உறுப்பினர்கள் எவராயினும் தமது உறவுகளின் பெயரில் வழங்குவதெனவும், இதுக்காக அவர்களிடம் நிதி சேகரிப்பதெனவும் தீர்மானிக்கப் பட்டது.

(நினைவுக் கிண்ணங்களில் உங்கள் உறவுகளினதும், அதனை வழங்குவோரினதும் பெயர்கள் பதியப்படும்) ஆகவே உங்கள் தாய் தந்தையர் உட்பட உங்கள் உறவுகளின் நினைவாக வழங்கி கௌரவியுங்கள் உறவுகளே ! அவர்கள் பெயர், வட்டாரம் என்பவற்றை பொறித்து “நினைவுக் கிண்ணத்தை” உங்கள் கைகளால் அவர்களுக்கு மேடையில் கொடுத்து கௌரவிக்கலாம் .

***** இந்த உரையாடலின் முடிவில் “சுவிஸ் ஒன்றியத்தின் செயல்பாடுகள்” தொடர்பாக, ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களினால் விளக்கம் அளிக்கப்பட்டது.

11)புங்குடுதீவில் தொழில் முயற்சிக்கான உதவி..

**புங்குடுதீவில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வை அரசின் நிதியில் வழங்கும் திட்டம் குறித்தும், அதனை மேற்கொள்ள உள்ள (குடும்ப தலைவர் அற்ற) ஏழு குடும்பங்களின் தொழில் முயற்சிக்கு, அந்த தொழில் முயற்சியை ஆரம்பிக்கும் வகையில் முற்பணமாக மூன்று இலட்சம் ரூபா வழங்குமாறும், அதனை மாதம் முப்பதாயிரம் ரூபா வகையில் திருப்பி செலுத்துவதாகவும், இதுக்குரிய உத்தரவாதத்தை திரு.எஸ்.கே. சண்முகலிங்கம், திருமதி.த.சுலோசனாம்பிகை ஊடாக வழங்குவதாகவும் எழுத்துமூலம் உறுதிமொழி தந்துள்ளதை அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட போது, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர்.

12) **மாணவர்களின் “உயரம் பாய்தலுக்கான” உபகரணம்..

** புங்குடுதீவில் அனைத்து பாடசாலை மாணவர்களின் விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தலுக்கான உபகரணம் (மெத்தை) தேவையென வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.கி.சாரதாதேவி அவர்களினால் முன்வைத்த கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்ட போது, இதனை புங்குடுதீவின் அனைத்து பாடசாலை அதிபர்களின் கையெழுத்துடன் கோரிக்கைக் கடிதம் எழுத்து மூலம் தரப்படும் பட்சத்தில் அதனை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

13) “வேரும் விழுதும்” விழா குறித்து, ஏனைய நாடுகளில் உள்ள பிரதிநிதிகளுக்கான அறிவித்தல்..

எதிர்வரும் 25.05.2019 சனிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு (15.00) புர்கடோர்ப் மாநிலத்தில் நடைபெறவுள்ள “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வில், அனைத்து நாடுகளிலும் உள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள், சங்கங்களின் பிரதிநிதிகளை கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், உங்களின் வாழ்த்து செய்திகளையும் 10.04.2019 க்கு முன்பாக எமக்கு (pungudutheevuswiss@gmail.com அல்லது swissranjan@gmail.com ) அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

14) *** “வேரும் விழுதும்” கலைமாலை விழா நிகழ்வுக்கான உதவி..**

இதேவேளை மேற்படி விழாவை நடத்துவத்துக்கான பங்களிப்பையும் நல்லுள்ளம் கொண்ட புங்குடுதீவு பெருந்தகைகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். ஒன்றிய நிதியானது புங்குடுதீவில் உள்ள மக்களினதும், புங்குடுதீவினதும் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்துவதென நாம் கொண்ட கொள்கையின் காரணமாக, மேற்படி விழாவை உங்களின் பங்களிப்பிலேயே நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை என்பதை நீங்கள் அறிவீர்கள். வழமை போல் எமக்கு உதவி புரியும் நல்லுள்ளங்களுடன் இணைந்து ஏனையோரும் உதவி புரிய வேண்டுமென தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

(தொடர்புக்கு.. திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (தலைவர்) -077.9485214, திரு,அ.கைலாசநாதன் (குழந்தை -பொருளாளர்) -079.9373289, ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.) நன்றி..

“மண்ணின் சேவையே, மகத்தான சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
26.04.2019

Comments (0)
Add Comment