அம்பலவாணர் கலையரங்க இரண்டாவது ஆண்டு கலைவிழா!! (படங்கள்)

புங்குடுதீவு கலைப்பெருமன்றம் நிகழ்த்தும் அம்பலவாணர் கலையரங்க இரண்டாவது ஆண்டு கலைவிழா இம்மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00மணிக்கு வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் தலைமையில் அம்பலவாணர் கலை அரங்கில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் நியூ ரங்கனாஸ் ஹோம் பில்டர்ஸ் அனுசரணையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் தொழிலதிபர்களான மா.லிங்கநாதன் யாழ்.தர்மினி பத்மநாதன் மற்றும் து.குருநாதசிவம் ஆகியோருடன் அரச அலுவலர்களான அ.அருந்தவராஜா, பா.ஜெயதாசன் , சி.கமலவேந்தன் க. நாவலன் மற்றும் க. செந்தூரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ்விழாவில் நடனம், நாட்டிய நாடகம் குழு, தனி இசை நாட்டியம் ஆகிய கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment