2 ம் ஆண்டு நினைவஞ்சலி.. அமரர் உயர்திரு முருகேசு இராமலிங்கம்..

2 ம் ஆண்டு நினைவஞ்சலி..
அமரர் உயர்திரு முருகேசு இராமலிங்கம்
( B.Sc. Dip.in Edu. SLPS 1 ).
அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், குருநாகல் மத்திய மகாவித்தியாலயம் ,யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, Jaffna Stanley college ஆகியவற்றின் ஓய்வு பெற்ற அதிபர்.
பிறப்பு : 29.01.1934. ———- இறப்பு : 19.05.2017.

(புங்குடுதீவு 12 ம் வட்டாரத்தில் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட அமரர் முருகேசு இராமலிங்கம் அவர்களின் 2 ம் ஆண்டு நினைவஞ்சலி.)

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு அணைந்து ஆண்டுகள் இரண்டு ஓடி மறைந்ததுவோ.. அப்பாவென நித்தம் அழைத்து மகிழ்ந்த அன்புருவம், எங்களோடு இல்லையென கண்கள் நிறையுதே, ஆறிடவும் முடியவில்லை, தேற்றிடவும் அப்பா எங்களோடு இன்று இல்லையே…

நீங்கா புகழுடைய நிகரிலா அதிபராய் ஆங்கிலம் விஞ்ஞானம் அழகு செந்தமிழோடு, ஓங்கிய கணித பாடங்களில் தன்னில் அதீத திறமை கொண்டு, கடமை தவறா கல்விப் பணிதனை திடமுடன் நேர்மையாய் செய்தீர்கள் அப்பா…

பெருமைசேர் அதிபராய், நாடு புகழவும் திகழ்ந்தீர்களே..
பெற்ற பிள்ளைகளின் பெரிதுவக்கும் தந்தையாய்,
பிரியங் கொண்ட மருமக்களின் அருமை மாமாவாய்,
பேரப்பிள்ளைகளின் அருமை அப்பப்பாவாய் தாத்தாவாய்,
உற்ற உடன் பிறப்புக்களின் ஒப்பற்ற சகோதரமாய்,
மாணாக்கரின் நல்ஆசானாய் மிளிர்ந்த…

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கு அணைந்து ஆண்டுகள் இரண்டு் வந்தாலும், அப்பாவின் அழகுத் தோற்றம் எங்கள் மனங்களை விட்டு அகலாது என்றும் உங்கள் நினைவோடு வாழ்ந்திடுவோம் அப்பா..

-அன்பு மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள்..-

Comments (0)
Add Comment