புங்குடுதீவை சேர்ந்த அமரர்.சி.சிவமணி அவர்களது நினைவஞ்சலி, கிளி.சக்தி சிறுவர் இல்லத்தில்..! (படங்கள் &வீடியோ)

புங்குடுதீவை சேர்ந்த அமரர்.சிவலிங்கம் சிவமணி அவர்களது நினைவஞ்சலி, கிளி.சக்தி சிறுவர் இல்லத்தில்..! (படங்கள்)

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த காலம் சென்ற திருமதி சிவலிங்கம் சிவமணி அம்மையார் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் மிகவும் வறிய நிலையில், சக்தி சிறுவர் இல்லத்தில் தங்கி இருக்கும் மாணவ மாணவுகளுக்கு சிறப்பான மதிய உணவு அன்னாரின் நினைவாக கொடுக்கப்பட்டது. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட இருபது மாணவ மாணவிகளுக்கும் கற்றல் உபகரணங்களும் சிவமணி அம்மையாரின் குடும்பத்தால் வழங்கப்பட்டது.

இவ்வுதவியை பெற்ற மாணவி ஒருவர் கருத்துக் கூறுகையில்,.. “நாங்களும், எமது கிராமங்களும் யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். எங்களில் சில மாணவ மாணவிகளுக்கு தாய், தந்தை இருவரும் இல்லாதவர்கள், சிலருக்கு தந்தை இல்லாதவர்கள். யுத்தத்தின் பின்னரான மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஈழத்தவர் பொருளாதாரம், அதனால் பாதிக்கப்பட்ட தமிழர்தம் கல்வி இவற்றை எல்லாம் புலம்பெயர்வாழ் உறவுகளின், இவ்வாறான கொடைகளே எம்மையும், எமது எதிர்காலத்தையும் பாதுகாக்கிறது” என்றார்.

தொடந்து கிளிநொச்சி சக்தி சிறுவர் இல்லத்து மாணவி ஒருவர் “எங்களை, எங்களது கல்வியை காப்பாற்ற உங்களைப் போன்றவர்களது ஒத்துழைப்பே காரணம், இவ்வுதவியை ஏற்பாடு செய்து, கல்வி ஆற்றுப்படுத்தலை ஒழுங்கமைத்து நெறிப்பத்திய, “அதிரடி” இணையதளத்துக்கும், இதனை தந்து உதவிய அமரர் சிவலிங்கம் சிவமணி அம்மாவின் குடும்பத்து அனைத்து உறுப்பினர்களுக்கும், எமது இல்லம் வந்து எங்களுக்கு உணவளித்து, கற்றலுக்கான உபகரணங்களும் “அந்தக் குடும்பத்தின்” சார்பில் தந்த, கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன் அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் இல்ல நிர்வாகிகள் உட்பட இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரினாலும், அமரத்துவமடைந்த திருமதி சிவலிங்கம் சிவமணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment