மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ)

மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவரும், இராணுவத் தளபதியுமான தோழர் மாணிக்கதாசன் மற்றும் அவருடன் மரணித்த தோழர்.இளங்கோ, தோழர்.வினோ ஆகியோரின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில்; யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை கருத்திற் கொண்டு பல்வேறு சமூக நலன்சார் உதவிகள் இன்று (02.09.2019) “புளொட் சுவிஸ் கிளையால்” வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் வவுனியா சாந்தசோலை கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் ஒருவேளை உணவுக்கே அல்லல்படும் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்திற்கு போதுமான உணவுப் பொதியும், குறிப்பாக அவர்களின் ஆறுமாத கைக்குழந்தைக்கு பால்மா வகையும், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் மாலை நிகழ்வாக, நெடுங்கேணி ஒலுமடு பிரதேசத்தில் உள்ள வேலடி கிராமத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மிகநேர்த்தியாக இந்நி்கழ்வை மாலை நேரக் கல்வியை கிராம மாணவர்களுக்கு இலவசமாக கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியையான செல்வி சுபாசினி சந்திரகுமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்
பெருந்திரளான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் திருமதி தனேஷ் பவித்திரா அவர்களும், வலம்புரி சனசமுக நிலையத்தின் தலைவர் சந்திரகுமார் திபாகரன் அவர்களும், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் அவர்களும், கிராம மக்களும் கலந்து மறைந்த தளபதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றதையடுத்து மாணவர்களுக்கான “தமிழீழ மக்கள் விடுதலைக் கழக கண்மணிகளும், மறைந்த தளபதி மாணிக்கதாசன் அவர்களின் உற்ற தோழர்களுமான சுவிஷ் நாட்டிலுள்ள தோழர்களால்” வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மண்ணுக்காகவும், மக்கள் விடுதலைக்காகவும் வீரமுடன் களமாடிய வீரத் தளபதியின் ஒவ்வொறு ஆண்டிலும் எந்த மக்களுக்காக போராடினார்களோ, எந்த மக்களுக்காக தமது உயிரை தியாகம் செய்தார்களோ, அதே மக்களின் தேவையை கேட்டறிந்து தக்கசமயத்தில் உதவி செய்யும் செயலானது உயர்வானது எனவும், இந்த உயர்வான கைங்காரியத்தில் மனம் குளிரும் மக்கள் இதயங்களில் எப்போதும் தளபதி மாணிக்கதாசன் உட்பட்ட தோழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பது எதிர்கால நிச்சயம் சொல்லும் எனவும், கழகத்தின் தளபதிக்கு வீரவணக்க அஞ்சலிகள் எனவும் அஞ்சலி உரையின் போது, திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

தகவல்…. “அதிரடி” இணையத்துக்காக திரு.செந்தமிழ்)

(குறிப்பு:- தளபதி மாணிக்கதாசன் உட்பட்ட தோழர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளில்; யுத்தத்தாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வு நிலையை கருத்திற் கொண்டு பல்வேறு சமூக நலன்சார் உதவிகள் வழங்கும் “சிறியதொரு” நிகழ்வுகளுக்கு “புளொட் சுவிஸ் கிளை” தோழர்களான வரதன், சித்தா, அசோக், பாபு, செல்வபாலன், ரமணன், ரஞ்சன் ஆகியோரின் சிறியதொரு நிதிஉதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

**படங்கள் & வீடியோ உதவி… திரு.மாணிக்கம் ஜெகன்.

https://www.youtube.com/channel/UCsoj7ya5hQmTY-yE_ivHJdw/featured

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபதாவது நினைவு தினம்)

Comments (0)
Add Comment