வவுனியாவில், “புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” தாகசாந்தி நிலையம்..! (படங்கள் & வீடியோ)

வவுனியாவில், “புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” தாகசாந்தி நிலையம்..! (படங்கள் & வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் இருபதாவது நினைவுதினம் புளொட் மற்றும் அதன் அரசியல் பிரிவான டிபிஎல்எப் தோழர்கள், ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகிறது.

தோழர்.மாணிக்கதாசனின் நினைவாக, இன்று (03.09.2019) அவரது குடும்ப உறவுகள், தோழர்கள், ஆதரவாளர்களினால் “தாகசாந்தி நிலையம்” வவுனியா கோவில்குளம் வீதியில் உள்ள “புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் மற்றும் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசன் ஆகியோரின் சமாதிக்கு முன்னிலையில் அமைக்கப்பட்டு உள்ளது.

மேற்படி தாகசாந்தி நிலையம் ஊடாக அவ்வீதியால் சென்று வரும் அனைவரும், தாகம் தீர்த்து செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதுடன் “மறைந்த தோழர்களை நினைவு கூர்ந்து, இன்றைய வெப்ப காலநிலையைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற செயற்பாடுகள் வரவேற்கக் கூடியதென” பாராட்டி செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது.

இதேபோல் இன்றையதினம் (03.09.2019) “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்” காரியாலயத்தில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்) அவர்களின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, கலந்து கொண்டோரினால் மலர்அஞ்சலி செய்து நினைவு கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தகவல்& புகைப்பட & வீடியோ உதவி…. “அதிரடி”யின் வவுனியா நிருபர் மற்றும் திரு.பிரதீபன் (வவுனியா).

காலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபதாவது நினைவு தினம்)

மறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..!! (படங்கள் & வீடியோ)

 

Comments (0)
Add Comment