கற்றல் உபகரணப் பொதிகள், உலருணவுப் பொதிகள் “சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில்” வழங்கி வைப்பு.. (படங்கள் & வீடியோ)

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில் கற்றல் உபகரணப் பொதிகள், உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.. (படங்கள் & வீடியோ)

##############################

சுவிஸ் நாட்டில் வாழும் அச்சுவேலியைச் சேர்ந்த தமிழ்சொந்தம் தருமலிங்கம் சுபாஸ்கரன் செல்லமாக அனைவராலும் ராஜூ என அழைக்கப்படும் சுபாஸ்கரன் அவர்கள் தனது பிறந்தநாளில் தாயகத்தில் வாழும் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் உட்பட பாடசாலைக்கு தேவையான பொருட்கள் அத்தோடு கொரோனா தொற்றுநோய் காரணமாக வருமானங்கள் குறைந்த குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, அவரது நிதிப் பங்களிப்பில்,..

சுவிஸ் ராஜூ அவர்களது பிறந்தநாளான இன்றைய தினத்தில் கூமாங்குளம், கற்குழி, சூசைப்பிள்ளையார் குளம், திருநாவற்குளம், பம்பைமடு, கற்பகபுரம் போன்ற கிராமங்களில் நீரழிவு நோய் காரணமாக சக்கர நாற்காலியில் வாழ்நாளைக் கழிக்கும் வயோதிபர், வயோதிப இருதய நோயாளி, தொய்வு காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவர், கவனிப்பார் யாருமின்றி தனித்து வாழும் வயோதிபப் பெண்மணி மற்றும் கொரோனா நோய் தொற்று காரணமாக தாமாக தனித்து வாழும் சில குடும்பங்கள் என மிகவும் வறிய நிலையில் வாழும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. மேற்படி உலருணவுப் பொருட்கள் பொதிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பிரதம ஆலோசகர்களில் ஒருவரான திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் விசேடமாக கற்குழியில் வசிக்கும் நிரந்தர நோயாளியின் இரண்டு பிள்ளைகளுக்கு பாடசாலை சப்பாத்தும், அதேவேளை தேக்கம் தோட்டம் பகுதியில் வசிக்கும் தாயொருவர் தன்னிடம் சையிக்கிள் இல்லாத நிலையில் பக்கத்து வீட்டு சையிக்கிளில் மகனை ஏத்த பின்னிருக்கை (பின்கரியல்) இல்லாத நிலையில் எம்மிடம் கிராம சேவையாளரின் சிபார்சுடன் சையிக்கிளுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டது. மேற்படி உபகரணங்களை வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கென்னடி அவர்கள் வழங்கி வைத்தார்.

நிதிப்பங்களிப்பு வழங்கிய அச்சுவேலியைச் சேர்ந்த, திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் (ராஜு) குடும்பத்துக்கு, நன்றி கூறுவதோடு, திரு.தர்மலிங்கம் சுபாஸ்கரன் (ராஜு) அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..

தகவல் & படங்கள்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

28.01.2021

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில், மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் “M.F” ஊடாக வழங்கி வைப்பு.. (வீடியோ & படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

Comments (0)
Add Comment