தோனியை வீழ்த்திய கோலி..!!

இந்திய அணித் தலைவர் பதவியில் இருக்கும்போது அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற மகேந்திரசிங் தோனியின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் 41 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், தோனியின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

தோனி 60 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கி 3,454 ஓட்டங்களை எடுத்திருந்தார். கோலி 35 டெஸ்டில் 3,456 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் சுனில் கவாஸ்கர், நான்காவது இடத்தில் அசாரூதின் மற்றும் ஐந்தாவது இடத்தில் கங்குலி ஆகியோர் காணப்படுகின்றனர்

Comments (0)
Add Comment