ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணிகளுமே கண்டுகொள்ளாத லசித் மாலிங்க..!!

11வது ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் மாதம் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இத்தொடரில், பங்கேற்கும் அணிகளில் விளையாட இருக்கும் வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் பெங்களூரில் இன்று ஆரம்பமானது.

இன்றைய ஏலத்தின் போது இலங்கை அணியின் பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவை எந்த அணிகளும் தெரிவு செய்யவில்லை.

நாளையும் வீரர்களை தெரிவு செய்யும் ஏலம் நடைபெற இருப்பதால், அணிகள் கேட்டுக் கொண்டால் நாளைய தினம் லசித் மாலிங்க ஏலத்திற்கு உள்வாங்கப்படலாம் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் முரளி விஜய், கிறிஸ் கெய்ல், ஹசிம் அம்லா, மார்ட்டின் கப்தில், இங்கிலாந்து தலைவர் ஜோ ரூட் ஆகியோரும் தொடக்க சுற்றில் ஏலம் போகவில்லை.

Comments (0)
Add Comment